ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்... பெனால்டி முறையில் அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்... பெனால்டி முறையில் அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷியா

பிரேசிலை வீழ்த்தி குரோஷிய அரையிறுதிக்கு முன்னேற்றம்

பிரேசிலை வீழ்த்தி குரோஷிய அரையிறுதிக்கு முன்னேற்றம்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷிய அணி ஷூட்-அவுட் முறையில் பிரேசிலை வீழ்த்தி, அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

  • Digpu News Network
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா, இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில், அல்-ரயான் நகரில் உள்ள எஜுகேஷன் சிட்டி (Education City) மைதானத்தில் நடைபெற்ற முதல் காலிறுதியில் பிரேசில் - குரோஷிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. போட்டி தொடங்கியது முதல் இரு அணிகளும் சமபலத்துடன் ஆடியதால், 90 நிமிடங்கள் பிரதான நேர முடிவில் கோல் ஏதும் இன்றி சமநிலை எட்டப்பட்டது.

இதையடுத்து, 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில், 106-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர், வியத்தகு வகையில் கோல் அடித்து மிரட்டினார். அதுவரை அமைதியாக இருந்த மைதானம், ரசிகர்களின் உற்சாக குரலால் அதிர்ந்தது. இதையடுத்து, வெற்றிபெற்றதாகவே எண்ணி பிரேசில் வீரர்கள் மெத்தனமாக ஆடினர். இதை சாதகமாக பயன்படுத்திய குரோஷிய அணி, 3 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பதில் கோல் அடித்து அசத்தியது.

கூடுதல் நேரமும் 1-1 என சமனில் முடிந்ததால், வெற்றியை தீர்மானிக்க ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக, இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இதில், முதல் வாய்ப்பில் குரோஷியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால், பிரேசில் சார்பில் ரோட்ரிகோ அடித்த பந்தை, குரோஷிய கோல்கீப்பர் லிவோகோவிச் (Livokovic) அற்புதமாக தடுத்து, தனது அணியை காப்பாற்றினார்.

Also Read : ஆறுதல் வெற்றியா? வெயிட் வாஷா? வங்கதேசத்துடன் கடைசி ஒரு நாள் போட்டியில் மோதும் இந்தியா

மேலும், தொடர்ந்து 4 வாய்ப்புகளையும் குரோஷிய வீரர்கள் கோலாக மாற்றி வியக்க வைத்தனர்.அதேவேளையில், 4 வாய்ப்புகளில் இரண்டை பிரேசில் வீரர்கள் வீணடித்தனர். இதனால், ஷூட்-அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷிய அணி அபார வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.

2018 உலகக் கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த குரோஷிய அணி, அந்த தொடரில் நாக்-அவுட் மற்றும் காலிறுதியில் எதிரணிகளை ஷூட்-அவுட் முறையிலேயே வீழ்த்தியது. நடப்புத் தொடரில் நாக்-அவுட்டில் ஜப்பானையும், காலிறுதியில் பலம் வாய்ந்த பிரேசில் அணியையும் ஷூட்-அவுட் முறையில் வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar