Home /News /sports /

FIFA WC 2022- கால்பந்து உலகக்கோப்பைக்கு போர்ச்சுக்கல் தகுதி- ரொனால்டோ நிம்மதி- தகுதி பெற்ற ஐரோப்பிய அணிகள் பட்டியல்

FIFA WC 2022- கால்பந்து உலகக்கோப்பைக்கு போர்ச்சுக்கல் தகுதி- ரொனால்டோ நிம்மதி- தகுதி பெற்ற ஐரோப்பிய அணிகள் பட்டியல்

2022 கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற போர்ச்சுக்கல்.

2022 கால்பந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற போர்ச்சுக்கல்.

போர்ச்சுகலின் புருனோ பெர்னாண்டஸ் 2 அபார கோல்களை அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் போராடிய நார்த் மாசிடோனியாவை தோற்கடித்தது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) ஒரு பதட்டமான ஐரோப்பிய பிளேஆஃப் டைக்குப் பிறகு கத்தாரில் நடைபெறும்  உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  போர்ச்சுகலின் புருனோ பெர்னாண்டஸ் 2 அபார கோல்களை அடிக்க 2-0 என்ற கோல் கணக்கில் போராடிய நார்த் மாசிடோனியாவை தோற்கடித்தது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) ஒரு பதட்டமான ஐரோப்பிய பிளேஆஃப் டைக்குப் பிறகு கத்தாரில் நடைபெறும்  உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுக்கல் தகுதி பெற்றது.

  போர்டோவில் உள்ள டிராகோ ஸ்டேடியத்தில் 50,000 ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடந்த இந்த நாக் அவுட் போட்டியில் போர்ச்சுகல் தொடக்கத்தில் இருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் வலுவான வடக்கு மாசிடோனிய தற்காப்பை உடைக்க போராடியது, கிட்டத்தட்ட பந்தை 70% தங்கள் வசம் வைத்து இருந்தபோதிலும் இலக்கை நோக்கி மூன்று ஷாட்களை மட்டுமே அடித்தது.

  பெர்னாண்டஸ் முதல் பாதியில் 30 நிமிடங்களில் நார்த் மாசிடோனியா கேப்டன் ஸ்டீபன் ரிஸ்டோவ்ஸ்கியின் பாஸை இடைமறித்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் கொண்டு சென்று கோல்கீப்பரைத் தாண்டி தனது ஷாட்டைத் தட்டிவிட்டு முதல் கோலை அடித்தார், பிறகு 27 வயதான அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் பெர்னாண்டஸ் 65வது நிமிடத்தில் டியோகோ ஜோட்டா கிராஸில் இருந்து ஒரு பிரமாத கோலை அடித்து போர்ச்சுகலின் வெற்றியை சீல் செய்தார்.

  பெர்னாண்டோ சாண்டோஸின் அணியானது, 15 நிமிடங்களுக்கு மேலாக ஸ்டாண்டில் இருந்த அவர்களது மகிழ்ச்சியான ரசிகர்களுடன் இறுதி விசில் ஒலி எழுப்பியதைக் கொண்டாடியது. "தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை, ஆனால் இந்த காட்சி நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கும், ஏனெனில் இது எனது நாடு உலகக் கோப்பையை எட்ட உதவியது" என்று பெர்னாண்டஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

  பிரான்சில் 2016 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் 2019 UEFA நேஷன்ஸ் லீக்கை உள்நாட்டில் வென்ற போர்ச்சுகல், தொடர்ந்து ஆறாவது உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது மற்றும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு பெரிய சர்வதேச போட்டியைத் தவறவிடவில்லை. "நான் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்றுள்ளேன், மூன்றாவது போட்டியில் கத்தாரில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்" என்று பயிற்சியாளர் சாண்டோஸ் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

  கடந்த நவம்பரில் சொந்த மண்ணில் செர்பியாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது போர்ச்சுக்கல். அதன் காரணமாக, கடந்த வாரம் துருக்கிக்கு எதிரான வெற்றியின் மூலம், தகுதிபெற தொடர்ந்து இரண்டு எலிமினேஷன் கேம்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அங்கு அவர்கள் தப்பித்து, தங்கள் தொடக்க ஆட்டத்தில் இத்தாலியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வடக்கு மாசிடோனியாவுக்கு எதிராக ஆடுவது என்பது போர்ச்சுக்கல்லுக்கு எப்போதும் பதட்டமான நிலையை உருவாக்கியது.

  செவ்வாய்க்கிழமை போர்டோவில் இது ஒரு பதட்டமான நிகழ்வாக இருந்தது, ஆனால் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தியது ஆனால் வடக்கு மேசிடோனியா கோல் இலக்கை நோக்கி ஷாட்டை ஆட முடியாது போர்ச்சுகல் தடுப்பு வியூகத்தை வலுவாக அமைத்தது.

  கத்தார் 2022 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற ஐரோப்பிய அணிகள்:

  1. பெல்ஜியம்

  2. குரோஷியா

  3. டென்மார்க்

  4. இங்கிலாந்து

  5. பிரான்ஸ்

  6. ஜெர்மனி

  7. நெதர்லாந்து

  8. போலந்து

  9. போர்ச்சுகல்

  10. செர்பியா

  11. ஸ்பெயின்

  12. சுவிட்சர்லாந்து

  ஐரோப்பாவிலிருந்து அடுத்ததாக இன்னும் ஒரு அணி தகுதி பெறும். வேல்ஸ் அணி ஸ்காட்லாந்து அல்லது உக்ரைனுடன் மோதும் போட்டி உள்ளது, அதில் வெல்லும் அணி 13வது அணியாக ஐரோப்பிய உலகக்கோப்பை அணிகளுடன் இணையும். 2022 உலகக் கோப்பை நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Cristiano Ronaldo, FIFA, Football

  அடுத்த செய்தி