ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.. கத்தாரில் குவிந்த வெளிநாட்டினர்.. போதை பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா.. கத்தாரில் குவிந்த வெளிநாட்டினர்.. போதை பொருள் பயன்பாட்டை தடுக்க தீவிர கண்காணிப்பு

கத்தார் கால்பந்து உலக கோப்பை 2022

கத்தார் கால்பந்து உலக கோப்பை 2022

கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால் போதைபொருட்களை பயன்படுதற்கு தடை உள்ள நிலையில் அங்கு குவிந்துள்ள வெளிநாட்டினரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் மூலை முடுக்குகளில் உள்ள கால்பந்து ரசிகர்களை வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறது கத்தார். மில்லியன் கணக்கில் படையெடுக்கும் கால்பந்து ரசிகர்கள் கூட்டத்தை தாங்குமா கத்தார் நகரம் 

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் முறையாக நவம்பர் - டிசம்பர் மாதங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இத்தோடு நின்றுவிடவில்லை இந்த முதல் முறை என்ற சொற்றொடர். முதல் முறையாக அரபு நாட்டில் உலகக் கோப்பை. முதல் முறையாக ஒரே நகரில் போட்டிகள் என இந்த முதல் முறை நீண்டுகொண்டே செல்கிறது.

இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால் கோடிக் கணக்கில் படையெடுக்கும் கால்பந்து ரசிகர்களை கத்தார் தாங்குமா என்பதே. ஏனென்றால் போட்டி நடைபெறும் அனைத்து மைதானங்களும் 75 கிலோ மீட்டர் தொலைவிற்குள்ளே கட்டமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்கவுள்ள 32 நாடுகளும் கத்தார் வந்து தரையிறங்கியுள்ள நிலையில் நகரம் முழுவதும் வண்ணவிளக்குகளாலும், ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆரவாரத்தாலும் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

கத்தார் இஸ்லாமிய நாடு என்பதால் போதைபொருட்களை பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. பல்வேறு நடத்தை விதிமுறைகளும் இருப்பதால் வெளிநாட்டவர்களை சமாளிப்பது அங்குள்ள காவல்துறைக்கு சவாலானது என மனித உரிமை கழகம் தெரிவித்துள்ளது . பொறியாளர்கள், ஆலோசகர்கள், கட்டுமான தொழிலாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் உலகக் கோப்பை தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறி பெருமையடைகிறார் அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர்.

இதையும் படிங்க: பிபாவுக்கு எப்படி வருமானம் வருகிறது தெரியுமா? வியக்க வைக்கும் பிபா அமைப்பின் வருமானம்

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் குறைந்த மக்கள் தொகையை கொண்டநாடு என்ற பெருமையையும் கத்தார் பெறுகிறது. இங்குள்ள மக்கள் தொகை வெறும் 29 லட்சம் தான். 11,500 சதுரகிலோமீட்டர் சுற்றளவுக்குள் அடங்கி விடும் கத்தார் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தால் பணம்கொழிக்கும் தேசமாக மாறியுள்ளது. உலகக் கோப்பை தொடருக்காக கத்தார் அரசு செய்துள்ள ஏற்பாடுகளை கண்டு அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளே வாயை பிளந்து நிற்கின்றன.

Published by:Arunkumar A
First published:

Tags: FIFA, FIFA 2022, FIFA World Cup 2022, Qatar