முகப்பு /செய்தி /விளையாட்டு / சாதனை மன்னன் மெஸ்ஸி... இறுதி போட்டியில் சாதனை மேல் சாதனை செய்ய காத்திருக்கும் கால்பந்து நாயகன்

சாதனை மன்னன் மெஸ்ஸி... இறுதி போட்டியில் சாதனை மேல் சாதனை செய்ய காத்திருக்கும் கால்பந்து நாயகன்

லியோனல் மெஸ்ஸி

லியோனல் மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதில் அர்ஜென்டினா அணிக்கான முதல் கோலை பதிவு செய்த நட்சத்திர வீரர் மெஸ்ஸி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் உட்சபட்ச விளையாட்டுத்திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. 2006 முதல் 2022 வரை ஐந்து உலகக் கோப்பையில் விளையாடி வரும் மெஸ்ஸி 25 போட்டிகளில் களமிறங்கியுள்ளார். 16 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு சாதனை நிகழ்த்தியதுடன், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக போட்டிகளில் களமிறங்கிய ஜெர்மனியின் Matthaus சாதனையை மெஸ்ஸி சமன்செய்துள்ளார். இன்னும் இறுதிப்போட்டி மீதமிருக்கும் நிலையில் அடுத்த போட்டியிலும் சாதனை நிகழ்த்த காத்திருக்கிறார்

உலகக் கோப்பை தொடர்களில் 11 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர் என்ற சாதனைக்கும் சொந்தகாரராகியுள்ளார். இதற்கு முன் கேப்ரியல் படிஸ்டுடா (Gabriel Batistuta) 10 கோல்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. நடப்பு உலகக் கோப்பையில் ஒரே தொடரில் நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி என மூன்று போட்டிகளிலும் கோல் அடித்த ஆறாவது வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார்.

2014ம் ஆண்டு உலகக் கோப்பையில் நான்கு கோல்கள் அடித்து கோல்டன் பந்தை கைப்பற்றிய மெஸ்ஸி இம்முறையும் ஐந்து கோல்கள் அடித்து கோல்டன் பூட் ரேசில்., பிரான்சின் எம்பாப்பே உடன் முதலிடத்தில் உள்ளார்.. அரையிறுதியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள மெஸ்ஸி இறுதிப்போட்டியிலும் சாதனை மேல் சாதனை நிகழ்த்த காத்திருகிறார்.

First published:

Tags: FIFA, FIFA World Cup 2022, Qatar