ஸ்காட்லாந்தை வீழ்த்திய உக்ரைன்: ரஷ்யாவுடன் போரிடும் வீரர்களுக்கு வெற்றி சமர்ப்பணம்
ஸ்காட்லாந்தை வீழ்த்திய உக்ரைன்: ரஷ்யாவுடன் போரிடும் வீரர்களுக்கு வெற்றி சமர்ப்பணம்
ஸ்காட்லாந்தை வீழ்த்திய உக்ரைன்
உக்ரைன் கால்பந்து அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் தங்களின் கனவை உயிர்ப்போடு வைத்துள்ளது. ஹாம்ப்டன் பூங்காவில் நடந்த பிளேஆஃப் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, தங்கள் வெற்றியை ரஷ்யாவுடன் போரிடும் தங்கள் நாட்டு படை வீரர்களுக்கு சமர்ப்பித்துள்ளது உக்ரைன் கால்பந்து அணி.
உக்ரைன் கால்பந்து அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் தங்களின் கனவை உயிர்ப்போடு வைத்துள்ளது. ஹாம்ப்டன் பூங்காவில் நடந்த பிளேஆஃப் ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது, தங்கள் வெற்றியை ரஷ்யாவுடன் போரிடும் தங்கள் நாட்டு படை வீரர்களுக்கு சமர்ப்பித்துள்ளது உக்ரைன் கால்பந்து அணி.
உக்ரைன் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் அவர்களின் இந்த முதல் ஆட்டத்தில், ஆண்ட்ரி யர்மோலென்கோ, ரோமன் யாரெம்சுக் மற்றும் ஆர்டெம் டோவ்பிக் ஆகியோர் கோல்களை அடித்து, அடுத்து வேல்ஸுடன் மோதி இறுதி வாய்ப்பை பெற போராடவுள்ளனர். வேல்ஸுடன் ஞாயிற்றுக்கிழமை அன்று மோதுகிறது உக்ரைன்.
இந்த உக்ரைன் அணியில் ஆடும் 6 வீரர்கள் உக்ரன் கிளப் கால்பந்து ஒப்பந்தத்தில் இருப்பவர்கள்தான். சவாலான சீரியஸ் கால்பந்து எதிலும் மாதக்கணக்கில் இவர்கள் ஆடவில்லை. மான்செஸ்டர் சிட்டியின் உக்ரைன் வீரர் அலெக்சாண்டர் ஜின்சென்கோ, உக்ரைனை உலகக் கோப்பைக்கு அழைத்துச் செல்வது எவ்வளவு அர்த்தம் நிறைந்த விஷயம் என்பதை விவரித்தபோது கண்ணீர் விட்டு அழுதார்.
“அகழிகளில் போராடுபவர்களுக்காக நாங்கள் விளையாடினோம், கடைசி சொட்டு ரத்தம் வரையிலும் போராடுபவர்களுக்காக நாங்கள் ஆடினோம்.ஒவ்வொரு நாளும் அவதிப்படும் உக்ரேனியர்களுக்காக நாங்கள் விளையாடினோம்," என்று பெட்ராகோவ் கூறினார்.
உக்ரேனிய வீரர்கள் மஞ்சள் மற்றும் நீல நிறக் கொடிகளை அணிந்தபடி மைதானத்திற்குள் நுழைந்தனர், அதற்கு முன்பாக உணர்ச்சிவசப்பட்ட தேசிய கீதம் அரங்கத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் கரகோஷத்தை அதிரச் செய்தது.
ஸ்காட்லாந்து 8 ஆட்டங்களில் தோற்காமல் இந்தப் போட்டிக்கு வந்துள்ளது, 1998-க்குப் பிறகு அந்த அணி உலகக்கோப்பையில் தகுதி பெற்றதில்லை. ஆனால் முதல் அரைமணி நேரத்திலேயே உக்ரைன் தனது அசாத்திய ஆட்டத்தினால் யார்மலெங்கோவின் அபாரமான ஆட்டத்தினால் முதல் கோல் உக்ரைனுக்கு விழுந்தது.
இடைவேளைக்குப் பிறகு 4வது நிமிடத்திலேயே அலெக்சாண்டர் கரவயேவின் அபார கிராசை உக்ரைன் வீரர் யாரெம்சுக் தலையால் முட்டி கோலுக்குள் அடிக்க உக்ரைன் 2-0 என்று முன்னிலை பெற்றது. ஸ்காட்லந்துக்கு இடையில் கிடைத்த இரண்டு கோல் வாய்ப்பும் விரயமாகின.
கடைசியில் உக்ரைன் 3வது கோலை அடித்தது. அதற்கு முன்னர் ஸ்காட்லாந்து வீரர் கேலம் மெக்ரீகர் ஒரு கோலை அடித்தார். 3-1 என்று வென்ற உக்ரைன் தன் உலகக்கோப்பை கால்பந்து தகுதிக் கனவைத் தக்க வைத்துள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.