Home /News /sports /

இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு தடை: பின்னணி என்ன? கோர்ட் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு

இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு தடை: பின்னணி என்ன? கோர்ட் தீர்ப்பு நாளை வெளியாக வாய்ப்பு

இந்தியக் கால்பந்து

இந்தியக் கால்பந்து

இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவுப் பிறப்பித்தது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3ம் தரப்பினர் தலையீடு இருப்பதாகக் குற்றம்சாட்டி சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவுப் பிறப்பித்தது.

    வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. இப்போது ஃபிபா உத்தரவினால் இந்த உலகக்கோப்பையை நடத்துவதில் சிக்கல் எழுந்தது.

    இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த தேர்தல் மற்றும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

    இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபன்னா பார்வைக்கு இன்று கொண்டுவந்தார்.

    இதை ஏற்ற நீதிபதிகள், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு ஏற்கனவே ஆகஸ்ட் 17ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், நாளை இந்த வழக்கு விசாரிக்கபடும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் நாளை  தீர்ப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    என்ன நடந்தது? பின்னணி என்ன?

    இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக பிரபுல் படேல் கடந்த 12 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். இவரது பதவி காலம் கடந்த 2020 டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.

    ஆனால் தன் தலைமையிலான நிர்வாகக் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று பிரபுல் படேல் மனு செய்தார். 2017-ல் உச்ச நீதிமன்றத்தில் பிரபுல் படேல் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதைச் சாக்குப் போக்காகக் காட்டி தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.

    2020ம் ஆண்டு புதிய நிர்வாகிகள், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தலையும் நடத்தாமல் பதவிக்காலம் முடிந்தும் பிடிவாதமாகப் பதவியைப் பிடித்துக் கொண்டிருந்தார் பிரபுல் படேல்.

    இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பார்வைக்கு சென்றது. இதையடுத்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்த சுப்ரீம் கோர்ட்டு, பதவி காலம் முடிந்தும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்த பிரபுல் படேலை பதவியில் இருந்து நீக்கியது. அவரை நிர்வாக குழுவில் இருந்து நீக்கியதுடன் அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.

    அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்ச நீதிமன்றம் புதிதாக தேர்தலை நடத்து உதவிகரமாக 3 பேர் கொண்ட நிர்வாகக் கமிட்டியை அமைத்தது. மேலும், மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை கட்டாயம் இந்தியாவில் நடத்த வேண்டும் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனை தொடர்ந்து சர்வதேச கால்பந்து தொடர்பான விவகாரங்களை கவனிக்க இந்த கமிட்டி 12 பேர் கொண்ட ஆலோசனை குழுவை அமைத்தது. மேலும், தேர்தல், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் புதிய விதிகளை அமைக்க இந்த கமிட்டி 7 பேர் அடங்கிய மாநில கால்பந்து கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை பெற்றது.புதிய விதிகள் அடங்கிய அறிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    ஆனால் இந்த புதிய விதிகளுக்கு எதிராக மாநில கால்பந்து கூட்டமைப்புகள் திரும்பின. இந்த விதிகள் அபத்தமாகவும் பாரபட்சமாக இருப்பதாகவும் இவர்கள் குற்றம்சாட்டினர். இதனைக் கூறி உலகக் கால்பந்துக் கூட்டமைப்புக்கும் கடிதம் ஒன்றை எழுதினர்.

    இதில் வாக்களிக்கும் உரிமை 50% பிரபலமானவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற கால்பந்து வீரர்கள் வீராங்கனைகளுக்கு வழங்கப்படுகிறது. மாநிலக் கால்பந்து சங்க உறுப்பினர்கள் 36 பேருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. இந்த புதிய விதியை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதே மாநில கால்பந்து சங்கங்களின் கண்டனமாக எழுந்தது.

    பிரபுல் படேலும் இதற்கிடையே ஃபிபாவுக்கு எழுதி இந்திய கால்பந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையில் தனிநபர்களின் சேர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பிபா கடிதம் எழுதியது.

    இந்தக் குழப்பங்களுக்கு இடையில்தான் எல்லாம் சரி செய்து கொண்டு வரட்டும் என்று ஃபிபா இந்தியக் கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை இடைக்கால ரத்து செய்துள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: AIFF, FIFA

    அடுத்த செய்தி