ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA 2022 Today Matches | உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 போட்டிகள்.. யார், யார் உடன்?

FIFA 2022 Today Matches | உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 போட்டிகள்.. யார், யார் உடன்?

FIFA 2022

FIFA 2022

FIFA 2022 Today Match | உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று 3 போட்டிகள் நடைபெறுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார், ஈக்வடார் நாட்டிடம் பூஜ்யத்திற்கு இரண்டு என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து ஈரானை எதிர்கொள்கிறது. கலிஃபா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி எவ்வாறு செயல்படப் போகிறது என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Also Read : ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் எப்படி உருவானது?

    இதையடுத்து இரவு 9.30 மணிக்கு, அல் துமாமா மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நெதர்லாந்து அணி செனகல் அணியை எதிர்கொள்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் தரவரிசையில் 16 இடத்தில் உள்ள அமெரிக்காவும், 19-வது இடத்தில் உள்ள வேல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    Published by:Vijay R
    First published:

    Tags: FIFA, FIFA World Cup, FIFA World Cup 2022, Qatar