ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை பரிசுத்தொகையை விட சுமார் 100 மடங்கு அதிகம்... வியக்க வைக்கும் பிஃபாவின் பரிசுத்தொகையும், வருமானமும்...

டி20 உலகக்கோப்பை பரிசுத்தொகையை விட சுமார் 100 மடங்கு அதிகம்... வியக்க வைக்கும் பிஃபாவின் பரிசுத்தொகையும், வருமானமும்...

FIFA 2022

FIFA 2022

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை நாம் கனவிலும் நினைத்து கூட பார்க்கமுடியாத தொகை என்றால் நம்ப முடிகிறதா? டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வழங்கப்படும் பரிசுத்தொகையை விட 100 மடங்கு அதிகம் என்பதை ஏற்கமுடிகிறதா? 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் உட்சபட்ச போட்டிகளில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரிசுத்தொகை இதுவரை எந்த விளையாட்டிலும் இல்லாத அளவில் இருப்பது அனைவரையும் ஆச்சரியமடையவைத்துள்ளது.  மொத்தமாக 440 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்த பரிசு தொகையாக பிஃபா அறிவித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3586 கோடியாகும்.

ஆறு கிலோ எடைகொண்ட தங்கக் கோப்பையை கைப்பற்ற போராடும் அணிக்கு கோப்பையோடு சேர்த்து 44 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 359 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. டி 20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற அணியை விட 310 கோடி ரூபாய் அதிகம் என்பது அனைவரையும் மேலும் ஆச்சரியப்படவைக்கிறது.

இவ்வளவு பெரிய தொகைக்கான அடிப்படை வருமானம் டிவியில் ஒளிபரப்பு செய்வதிலிருந்தே கிடைத்து விடுகிறது. கடந்த உலகக் கோப்பையையின் ஒளிபரப்பு உரிமம் 6.4 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்கப்படுள்ளது. இந்த ஆண்டு 10 விழுக்காடு அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக பார்வையார்களை கொண்ட உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை சுமார் நான்கு பில்லியன் மக்கள், அதாவது உலகத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்டவர்கள் கண்டுரசித்துள்ளனர்.

Also Read : பிபா கால்பந்து: 'இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது'.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!

டிவி ஒளிபரப்பு உரிமம் மட்டுமல்லாமல் 3 மில்லியன் டிக்கெட் விற்பனையாகியுள்ளது. ஒரு டிக்கெட்டின் குறைந்த பட்ச தொகை 100 அமெரிக்க டாலராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஃபிபாவிற்கு 2015 முதல் 18 வரை மட்டும் டிக்கெட் மூலம் 58 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இது இல்லாமல் EA Sports வீடியோ கேமிற்காக உலகக் கோப்பை போட்டியின் லைசன்ஸ்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனத்தின் 20 வருட ஒப்பந்த தொகை 20 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 16 லட்சக் கோடி ரூபாய்.

மார்க்கெட்டிங், பிராண்டிங் லைசன்ஸ் என பல லட்சம் கோடி ரூபாய் ஒருமாதத்தில் கத்தார் உலகக் கோப்பையில் கையாளப்படுகின்றது. நூறு டி20 உலகக் கோப்பை தொடருக்கு இணையான போட்டியை ஒரே மாதத்தில் நடத்தி முடிக்க காத்திருக்கும் கத்தாரில் இன்னும் மூன்று நாட்களில் தங்க கோப்பைக்கான போர் களைகட்டவுள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: FIFA, FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022, Qatar