ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FIFA 2022 : வெற்றியுடன் உலகக்கோப்பை தொடங்கிய போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை

FIFA 2022 : வெற்றியுடன் உலகக்கோப்பை தொடங்கிய போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை

கோல் அடித்த மகிழ்ச்சியில் கிரிஸ்டியானோ ரொனால்டோ

கோல் அடித்த மகிழ்ச்சியில் கிரிஸ்டியானோ ரொனால்டோ

2022 FIFA World Cup - போர்ச்சுகல் அணி தனது வரும் 29ஆம் தேதி அடுத்த போட்டியில் உருகுவே அணியை சந்திக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaDohaDoha

  2022 பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் பிரிவு போட்டியில் போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார்.

  குரூப் எச் பிரிவில் நடைபெற்ற போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 65ஆவது நிமிடத்தின் போது ரொனால்டோவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த பெனால்டியை ரொனால்டோ கோலாக மாற்றினார். இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் முன்னிலை பெற்றது. பின்னர், 73ஆவது நிமிடத்தில் கானா அணி வீரர் அன்ட்ரே கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார்.

  இதைத்தொடர்ந்து போர்ச்சுகல் வீரர்கள் துடிப்புடன் விளையாடி அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தனர். 78ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் பெலிக்ஸ், 80ஆவது நிமிடத்தில் ரபேல் கோல்களை அடிக்க போர்ச்சுகல் அணி 3-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதி கட்டமான 89ஆவது நிமிடத்தில் கானா வீரர் புகாரி கோல் ஒன்றை அடித்து போர்ச்சுகலுக்கு தலைவலி கொடுத்தார். இருப்பினும் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றிபெற்றது.

  இந்த போட்டியில் ரொனால்டோ அடித்த கோல் மூலம் புதிய உலக சாதனையை அவர் புரிந்துள்ளார். இந்த கோல் மூலம் ஐந்து உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமை ரொனால்டோ பெற்றுள்ளார். 37 வயதான ரொனால்டோ 2006,2010,2014, 2018, 2022 ஆகிய ஐந்து உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்துள்ளார் ரொனல்டோ.

  இதையும் படிங்க: பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

  இதற்கு முன்னர் பிரேசில் ஜாம்பவான் பிலே, ஜெர்மனி வீரர்கள் சீலர், க்லோஸ் ஆகிய இருவரும் 4 உலகக் கோப்பைகளில் கோல் அடித்த வீரர்கள் என்ற சாதனையை வைத்திருந்தனர். இதை ரொனால்டோ நேற்று முறியடித்துள்ளார். போர்ச்சுகல் அணி தனது வரும் 29ஆம் தேதி அடுத்த போட்டியில் உருகுவே அணியை சந்திக்கிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Cristiano Ronaldo, FIFA, FIFA 2022, FIFA World Cup, FIFA World Cup 2022