ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பிபா கால்பந்து: 'இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது'.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!

பிபா கால்பந்து: 'இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது'.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!

பிபா கால்பந்து

பிபா கால்பந்து

கத்தார் நாட்டின் விதிமுறைகளை மீறி கால்பந்து ரசிகைகள் ஆடை அணிந்து வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaDohaDohaDoha

  நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. வரும் நவம்பர் 20ஆம் தேதி இந்த கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இதற்காக கத்தார் கோலாகலமாக தயாராகி வருகிறது.

  நவம்பர் 20 தொடங்கி, டிசம்பர் 18 வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஈக்வேடார் அணி போட்டியை நடத்தும் கத்தார் அணியுடன் மோதுகின்றது.உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில், பெண் ரசிகர்களுக்கு கத்தார் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கால்பந்து போட்டிகள் நடைபெறும் மேற்கு உலக நாடுகளில் உடை கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. அங்கு பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடைகள் அணிந்து கொண்டு மைதானத்திற்கு வருவார்கள். சில முறை போட்டியில் கொண்டாட்டத்தை வெளிப்படுத்த ஆண் பெண் ரசிகர்கள் அடைகளை கழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் நிகழ்வதுண்டு.

  இந்நிலையில், போட்டியை நடத்தும் கத்தாரில் ஆடை கட்டுப்பாடுகள் அந்நாட்டின் சட்டங்களாகவே உள்ளன. எனவே, போட்டியை காணவரும் ரசிகர்கள் நாட்டின் விதிகளை மதிக்கும் படி கண்ணியமான உடைகளை அணிந்து வர வேண்டும் என விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக கத்தாரில் பெண்கள் பொதுவெளியில் தங்கள் அங்கங்களை காட்டும் படி உடை அணிந்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

  இதையும் படிங்க: 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து: இலவசமாக ஜியோவில் பார்க்கலாம்.. முழு விவரம் இங்கே!

  எனவே, மைதானத்திலோ, வெளியே சுற்றிப் பார்க்கும் போதோ ரசிகர்கள் நாட்டின் ஆடை கட்டுப்பாடுகளை மதித்து செயல்பட வேண்டும். மீறினால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மைதானங்களில் ரசிகர்களை கண்காணிக்க உயர் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: FIFA, FIFA World Cup