ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

FRENCH OPEN TENNIS | பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மாஸ்டர் கிளாஸ் பெடரர்- இஷ்டமில்லாமல் ஆடிய இஸ்டமின்?

FRENCH OPEN TENNIS | பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: மாஸ்டர் கிளாஸ் பெடரர்- இஷ்டமில்லாமல் ஆடிய இஸ்டமின்?

ஒலிம்பிக்ஸில் ரோஜர் பெடரர்

ஒலிம்பிக்ஸில் ரோஜர் பெடரர்

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முதல் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-2, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டெனிஸ் இஸ்டமின் என்ற வீரரை வெற்றி கண்டு 2ம் சுற்றுக்குள் ஸ்டைலாக நுழைந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராண்ட் ஸ்லாம் அரங்கில் கால் பதித்தவுடன் பெடரருக்கு வரவேற்பு பலமாக இருந்தது. முதல் செட்டிலேயே தனது ட்ராப் ஷாட் மூலம் அசத்தினார், சில ஷாட்கள் வைல்டு கார்டு மூலம் தகுதி பெற்ற இஸ்டமினுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்ததை அவர்து பாவனைகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

  இஸ்டமின் ஏதோ வேண்டா வெறுப்பாக இஷ்டமில்லாமல் ஆடியது போலவே இருந்தது. இதனால் 93 நிமிடங்களில் ஆட்டம் முடிந்தது.

  பெடரர் எப்போதும் அன்ஃபோர்ஸ்டு எரர் நிறைய செய்வதுண்டு. ஆனால் இந்த ஆட்டத்திலும் 20 முறை தவறு செய்தார், ஆனால் 8 ஏஸ் சர்வ்களை பெடரர் அடித்தாலும் ஒருமுறை கூட சர்வில் டபுள் பால்ட் செய்யவில்லை. ட்ராப் ஷாட்கள் மூலம் இஸ்டமினை நெட்டுக்கு வரவைத்த பெடரர் பிறகு ஃபோர்ஹேண்ட் ஷாட்களில் வெளுத்து வாங்கினார். இப்படித்தான் இஸ்டமின் ஆட்டத்தை பெடரர் ஒர்க் அவுட் செய்தார்.

  இஸ்டமின் முக்கியமான கட்டங்களில் 4 முறை டபுள் பால்ட் செய்தார். 3 ஏஸ்களை மட்டுமே அடிக்க முடிந்தது. பெடரரின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அவரது துல்லியமான முதல் சர்வ் என்றால் மிகையாகாது. 46 முதல் சர்வ்களில் அவர் 37 முறை முதல் சர்விலேயே பாயிண்ட் எடுத்தார், இது 80% ஆகும், மாறாக இஸ்டமின் 50% மட்டுமே இதில் வெற்றியடைந்தார். இரண்டாவது சர்வில் வெற்றி என்பதிலும் பெடரர் 80% உடன் பிரமாதமாக திகழ்ந்தார், ஸ்பின்னிங் 2வது சர்வும் இஸ்டமினுக்கு பிரச்சினையாகவே அமைந்தது.

  பெடரர் 5 பிரேக் பாயிண்டுகளை வெல்ல, இஸ்டமின் ஒரு பிரேக் பாயிண்ட் கூட எடுக்கவில்லை. மொத்தத்தில் பெடரர் 48 வின்னர்களை அடிக்க இஸ்டமின் 18 வின்னர்களுடன் தேங்கினார்.

  பெடரர் 2015-க்குப் பிறகு ரோலாண்ட் கேரோசில் கால் பதித்திருக்கிறார். இரண்டாவது சுற்றில் மார்டின் சிலிச்சை பெடரர் எதிர்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மற்றொரு ஆட்டத்தில் மெத்வதேவ் 6-3, 6-3, 7-5 என்ற செட்களில் பியுப்ளிக் என்பவரை முதல் சுற்றில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

  மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 7-6, 6-2 என்ற செட் கணக்கில் பேகு என்பவரை வீழ்த்தினார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: French Open, Roger Federer