Home /News /sports /

உசைன் போல்ட்டை விட வேகம்?- போலி சாதனை மோசடிக்காக கர்நாடகா நபர் மீது கிரிமினல் வழக்கு

உசைன் போல்ட்டை விட வேகம்?- போலி சாதனை மோசடிக்காக கர்நாடகா நபர் மீது கிரிமினல் வழக்கு

உசைன் போல்ட், ஸ்ரீனிவாஸ் கவுடா

உசைன் போல்ட், ஸ்ரீனிவாஸ் கவுடா

உசைன் போல்ட் சாதனையையே முறியடித்து விட்டேன் என்று நடுவர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு போலி சாதனை தயாரித்து மோசடி செய்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா என்பவர் மேல் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
    உசைன் போல்ட் சாதனையையே முறியடித்து விட்டேன் என்று நடுவர்களையும் கைக்குள் போட்டுக் கொண்டு போலி சாதனை தயாரித்து மோசடி செய்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா என்பவர் மேல் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    தெற்கு கன்னட மாவட்டமான கம்பல சமிதி உறுப்பினர் மூத்பித்ரி காவல்நிலையத்தில் பொய்சொல்லு ஊரை ஏமாற்றியதாக ஸ்ரீனிவாச கவுடா மீது புகார் அளித்தது பரபரப்பாகியுள்ளது, இந்த புகாரில் ஸ்ரீனிவாஸ் கவுடா, குணபல கடம்பா, ரத்னாகரா ஆகியோர் மோசடிப்பேர்வழிகள் என்று புகார் எழுப்பப்பட்டுள்ளது.

    உசைன் போல்ட்டை அவரே மறுபிறவி எடுத்து வந்தாலே உடைக்க முடியாது, இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2020-ல் ஸ்ரீனிவாச கவுடா தான் உசைன் போல்ட்டின் 100மீ சாதனையை உடைத்து விட்டதாக சுயதம்பட்டம் அடித்துக் கொண்டார். இதனையடுத்து இவருக்கு பரிசுப்பொருட்களும் தொகைகளும் குவிந்தன. 142.5 மீ தூரத்தை 13.2 விநாடிகளில் கடந்து விட்டதாக உரிமை கோரினார். அதுவும் தன் பந்தைய எருதுகளுடன் ஓடினாராம்.

    கம்பலா என்பது கடற்கரை கர்நாடகா மாவட்டத்தில் நடைபெறும் ஒருவித பந்தயமாகும் எருதுகளுடன் ஈரமான நிலத்தில் ஜோக்கிகள் ஓடுவார்கள். இங்கு இது மிகப்பிரபலம், மற்றும் பெரிய அளவில் சூதாட்டம் நடக்கும்.

    இந்நிலையில் ஸ்ரீனிவாஸ் கவுடா போலி ரெக்கார்டுகளைத் தயாரித்து லட்சக்கணக்கில் பரிசுத்தொகையையும் அரசு சலுகைகளையும் பெற்றுள்ளார். பொதுமக்களும் இவருக்கு அள்ளி வழங்கியுள்ளனர். ஸ்கை வீவ் என்ற அமைப்பு ஸ்ரீனிவாஸ் கவுடாவின் ஓட்ட நேரத்தைக் கணக்கிட்டு உசைன் போல்ட் சாதனையை முறியடித்ததாக அறிவித்தது.

    இது போலியானது, மோசடி என்று கம்பலா கமிட்டியில் இருக்கும் உறுப்பினர் லோகேஷ் ஷெட்டி போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் நீதியின் கதவைத் தட்ட முடிவு செய்துள்ளார். 100மீ தூரத்தை கவுடா 9:55 நிமிடங்களில் கடந்ததாக கூறப்பட்டது.  உசைன் போல்ட் 9:58 சாதனை வைத்துள்ளார்.

    இப்போது இது மோசடி, ஸ்ரீனிவாஸ் கவுடாவின் மோசடிக்கு நடுவர்களும் உடந்தை என்று கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Usain Bolt

    அடுத்த செய்தி