• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • EXCLUSIVE| என் தாயாரின் கண்களில் ததும்பிய அந்தப் பெருமை...: மனம் திறந்த பாராஒலிம்பிக் தங்கமகன் சுமித் ஆன்டில்

EXCLUSIVE| என் தாயாரின் கண்களில் ததும்பிய அந்தப் பெருமை...: மனம் திறந்த பாராஒலிம்பிக் தங்கமகன் சுமித் ஆன்டில்

பாராலிம்பிக் தங்க மகன் சுமித் ஆன்டில்

பாராலிம்பிக் தங்க மகன் சுமித் ஆன்டில்

சிஎன்என் நியூஸ் 18 சேனலுக்கு சுமித் ஆன்டில் அளித்த பேட்டியில் நீரஜ் சோப்ரா எப்படி தனக்கு அகத்தூண்டுதலாக இருந்தார் என்பதை குறிப்பிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாராஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    தனது முதல் வாய்ப்பிலேயே 66.95 மீட்டருக்கு ஈட்டி எறிந்து சுமித் அன்டில் அசத்தினார். அடுத்தடுத்த வாய்ப்புகளில் முறையே, 68.08, 65.27, 66.71, 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து அவர் பிரமிக்க வைத்தார்.

    இவர் 2016-ல் டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தங்க மகன் நீரஜ் சோப்ரா தனக்கு எப்படி அகத்தூண்டுதலாக இருந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.

    சிஎன்என் நியூஸ் 18 சேனலுக்கு சுமித் ஆன்டில் அளித்த பேட்டியிலிருந்து...

    ஈட்டி எறிதல் போட்டியின் எஃப்64 பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் சுமித் அன்டில்


    பதக்கத்தில் உங்கள் கையை வைக்கும் போது எப்படி உணர்ந்தீர்கள்?

    வார்த்தைகளால் அந்த உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. மிக மிக சிறப்பு வாய்ந்த ஓர் உணர்வு, விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    ஒரு உலக சாதனை அல்ல, 3 உலக சாதனைகளை உடைத்தீர்கள் என்பதை உணர்ந்தீர்களா?

    முதலில் என் சாதனையை நான் உடைக்க வேண்டும் என்றே கருதினேன். முதல் த்ரோ 66.95மீ, அடுத்து 70மீ மைல்கல்லை கடக்க கவனம் செலுத்தினேன்.

    என்ன மாதிரி தயாரிப்பு மேற்கொண்டீர்கள்?

    கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகள் கடினமாக இருந்தது. 2020 லாக்டவுன் போது நான் என் கிராம வயல்களில் பயிற்சி செய்தேன். புதிய சாலை அமைத்துக் கொண்டிருந்தார்கள் அதில் மண் இருந்தது. இங்கு 3 மாதங்கள் பிராக்டிஸ் செய்தேன், பிறகு ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா என்னை அழைத்தார்கள். ஆனால் கிராமத்தில் மேற்கொண்ட தீவிர பயிற்சிதான் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது.

    செயற்கைத் தரையில்தான் பிராக்டிஸ் செய்து பழக்கம், புல்தரையில் என் கால்களுக்கு அதிகம் சிரமம் ஏற்பட்டது. ஆனால் நான் விடவில்லை, சிறு தவறுகளையும் திருத்திக் கொண்டேன். சரியாகும் வரை நிறைய முயற்சிகள் செய்தேன்.

    பல உலக சாதனைகளை முறியடித்தேன்... இருப்பினும்...

    நான் பல உலக சாதனைகளை முறியடித்திருக்கிறேன் இருப்பினும் இந்தத் தருணம் மிக சிறப்பு வாய்ந்த தருணம் ஏனெனில் இந்தியக் கொடியுடன் தேசிய கீதம் முழங்கபதக்க மேடையில் நிற்பது என் வாழ்க்கையில் முதல் முறை.

    பிரதமருடன் பேசிய அனுபவம் எப்படி?

    பதக்கம் வென்ற வீரர்களுடன் பிரதமர் பேசுவார் என்பதை நான் அறிவேன். ஆனால் என் முறை வரும்போது கொஞ்சம் பதற்றமாகவே இருந்தது. எனக்கு முழு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்ததோடு என் குடும்பத்தையும் வாழ்த்தினார்.

    என் குடும்பத்தாருடன் வீடியோ காலில் பேசினேன். முதலில் அவர்கள் என் போனை அட்டெண்ட் செய்யவில்லை. பிற்பாடு பேசினேன், அப்போது என் தாயாரின் கண்களில் தெரிந்த பெருமை சிறப்பு வாய்ந்தது. வீட்டுக்கு வந்தவுடன் என் அம்மா எனக்காக இனிப்பு செய்து வழங்குவார் என்று நினைக்கிறேன்.

    நீரஜ் சோப்ரா:

    நீரஜ் சோப்ரா


    2016-ல் நீரஜ் சோப்ராவைப் பார்த்த பிறகுதான் ஜாவ்லின் த்ரோ என்ற ஒரு விளையாட்டு இருப்பதையே அறிந்தேன். அதிலிருந்து ஈட்டி எறிதலில் கடின உழைப்பை போட்டேன். இந்தியாவில் இது குறித்த அறிதலும் அவ்வளவாக இல்லை. ஈட்டி எறிதலில் இந்தியாவிலிருந்து உலக சாம்பியன்களை உருவாக்க முடியும். எனவே இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் இன்னும் பல சாம்பியன்கள் உருவாவது உறுதி.

    இவ்வாறு கூறினார் சுமித் ஆன்டில்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: