இந்திய ஹாக்கி அணியை இருதயத்தின் அடியாழத்திலிருந்து நேசிக்கிறேன் என்று ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி குறித்து முன்னாள் சாம்பியன் வீரர் தன்ராஜ் பிள்ளை மட்டற்ற மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

லெஜண்ட் தன்ராஜ் பிள்ளை.
ஹாக்கி பதக்கம் என்பது மற்ற நூறு பதக்கங்களுக்கு சமம் என்று கூறும் தன்ராஜ் பிள்ளை. 1992 பார்சிலோனா ஒலிம்பிக் முதல் 2004 ஏதேன்ஸ் ஒலிம்பிக் வரை 4 ஒலிம்பிக்குகளில் ஆடியவர்.
2002-ல் சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய நினைவலைகளை தன்னுள் இந்த இந்திய ஹாக்கி வெற்றி ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார் தன்ராஜ் பிள்ளை, தன்ராஜ் பிள்ளையின் மின்னல் வேக கால்கள் பிரமாதமான ட்ரிப்ளிங், அவரது இயல்பான ஆட்டம் ஆகியவை இன்றளவிலும் அவருக்கு நிகரான வீரரை உருவாக்கவில்லை என்று கூறினால் அது மிகையாகாது.

வரலாறு படைத்த இந்திய ஹாக்கி அணி.
நியூஸ் 18-க்கு தன்ராஜ் பிள்ளை அளித்த நேர்காணலிலிருந்து ...
“2002 சாம்பியன்ஸ் டிராபி ஆடும்போது எனக்கு வயது 34. பாகிஸ்தானுக்கு எதிராக மையக்கோட்டிலிருந்து பந்தை எடுத்து சென்று 4 பாகிஸ்தான் வீரர்களைக் கடைந்து கடந்து எடுத்து சென்று பிரப்ஜோத் சிங்குக்கு கோல் அடிக்க கொடுத்தது இன்றும் நினைவிருக்கிறது. ஹாக்கி ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
வீரர்களிடம் இன்னும் தீப்பொறி உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கிறது. ஜெர்மனியுடனான ஆட்டம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய ஹாக்கியை இருதயத்தின் ஆழத்திலிருந்து நேசிக்கிறேன்.

இந்திய ஹாக்கி லெஜண்ட் தன்ராஜ் பிள்ளை.
41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்றது எனக்குள் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு மட்டுமல்ல, பல ஹாக்கி வீரர்களின் முயற்சி இந்த முடிவை நமக்கு அளித்துள்ளது. பயிற்சியாளர்கள், உதவிப்பணியாளர்கள் பங்களிப்பையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஹரேந்திர சிங் (2018 உலகக்கோப்பை பயிற்சியாளர்) பெயர் நினைவுக்கு வருகிறது. அப்போது இவர் தலைமையின் கீழ் பல வீரர்கள் வளர்ச்சி நிலையில் இருந்தனர். இப்போதைய கோச் கிரகாம் ரீட் அணி நாம் மகிழ்ச்சியடைய வாய்ப்பை உருவாக்கித் தந்தது.
ஹாக்கி வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமுமே கொண்டாடுகின்றனர்.
இப்போதைய இந்திய அணி மன ரீதியாக வலுவானவர்கள்:
இப்போதைய இந்திய அணியினர் மனரீதியாக வலுவானவர்கள். ஆஸ்திரேலியாவுடன் 1-7 என்று தோற்றனர். பெல்ஜியத்திடம் 2-5 என்று தோற்றனர். ஆனால் இந்த இந்திய அணி வித்தியாசமானது.
இந்த அணி மனோ ரீதியாக மிக மிக வலுவானது என்று கருதுகிறேன். தரம் முழு வீச்சுடன் செயல்பட்டது. உலகின் கடினமான ஜெர்மனியை 5-4 என்று வென்றது மறக்க முடியாத வெற்றியாகும்.
இவ்வாறு அந்த பேட்டியில் தன்ராஜ் பிள்ளை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.