தங்கப் பதக்கம் அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணம்- அவானி லெகாரா

தங்க மங்கை அவானி லெகாரா

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று வரலாறு படைத்தார், இவர் தங்கப் பதக்கம் அனைத்து இந்தியர்களுக்குமானது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 • Share this:
  டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெகாரா தங்கம் வென்று வரலாறு படைத்தார், இவர் தங்கப் பதக்கம் அனைத்து இந்தியர்களுக்குமானது என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

  பாராலிம்பிக் கேம்ஸில் முதன் முதலில் தங்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்திய அவானி லெகாரா இறுதிப் போட்டியில் உலகச் சாதனையை சமன் செய்யும் விதமாக 249.6 புள்ளிகளைப் பெற்று வரலாறு படைத்தார். பாராலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் இது முதல் தங்கமாகும்.

  பாராலிம்பிக் கேம்ஸில் இதற்கு முன்னர் நீச்சல் வீரர் முரளிகாந்த் பேட்கர் (1972), ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா (2004 மற்றும் 2016), உயரம் தாண்டுதல் தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பன் (2016) ஆகியோருக்குப் பிறகு லெகாரா 4வது தங்கப் பதக்க வீராங்கனையானார்.

  Also Read: பாராலிம்பிக்: தங்கம் வென்று வரலாறு படைத்தார் இந்திய வீராங்கனை அவானி லெகாரா

  2016-ல் தீபா மாலிக் வெள்ளி வென்றார், பாரா-டேபிள் டென்னிஸ் வீராங்கனை பாவினா பட்டேல் வெள்ளி வென்று சாதனை மங்கையர்களாகத் திகழ்ந்த நிலையில் அவானி லெகாரா சாதனை படைத்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் சிஎன்என் நியூஸ் 18 சேனலுக்கு பிரத்யேகமாகக் கூறும்போது, “நான் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறேன், அனைவருக்கும் நன்றி, உலகின் உச்சியில் இருப்பது போன்று உணர்கிறேன். இந்த உணர்வை விளக்க முடியவில்லை.

  Also Read: இந்தியாவுக்கு இன்று யோகமான நாள்.. பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் வீரர்கள்

  இந்த மெடல் இந்திய மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் இன்றி கிடைத்திருக்காது. இந்த தங்கப்பதக்கத்தை அனைத்து இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்

  கார் விபத்தில் முதுகுத்தண்டு காயமடைந்து மீண்டெழுந்தவர்:

  அவானி லெகாரா 2012-ல் கார் விபத்தில் முதுகுத் தண்டில் கடும் காயமடைந்தார், ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தின் சட்ட மாணவர் ஆவார் அவானி லெகாரா.
  Published by:Muthukumar
  First published: