Euro Cup 2021| Ronaldo: ரொனால்டோ சாதனைக்கு 6 கோல்கள் பாக்கி; கால்பந்து தொடரில் கவனிக்க வேண்டிய நட்சத்திரங்கள்

Cristiano Ronaldo. (Photo Credit: Reuters)

36 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்கு ஆடும் கடைசி தொடராக இது இருக்க வாய்ப்பிருக்கிறது, இதனால் சாதனையுடன் கோப்பையையும் வெல்ல அவர் நிச்சயம் பாடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 11ம் தேதி அதாவது இந்திய நேரம் ஜூன் 12 அதிகாலை 12.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டித் தொடரில் போர்ச்சுக்கல் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்னும் 6 கோல்களை அடித்தால் தேசிய சாதனைக்குரியவராகத் திகழ்வார்.

அதாவது 6 கோல்களை ரொனால்டோ அடித்தாரென்றால் போர்ச்சுகல் அணிக்காக 109 கோல்களை அடித்துச் சாதனையை நிகழ்த்துவார், இதற்கு முன்னர் ஈரான் வீரர் அலி டேய் 109 கோல்களை அடித்து தேசிய சாதனை புரிந்துள்ளார். அதை ரொனால்டோ சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

36 வயதாகும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்கு ஆடும் கடைசி தொடராக இது இருக்க வாய்ப்பிருக்கிறது, இதனால் சாதனையுடன் கோப்பையையும் வெல்ல அவர் நிச்சயம் பாடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயினுக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான வார்ம்-அப் போட்டியிலேயே கூட இவர் இந்தச் சாதனையை நிகழ்த்த முடியும். கடினமான பிரிவு எஃப்-ல் சிக்கியுள்ள போர்ச்சுக்கல் அணி ஹங்கேரி, பிரான்ஸ், ஜெர்மனி அணிகள் உடன் மோத வேண்டியுள்ளது பிரான்ஸில் மபாப்பே என்ற பொறி பறக்கும் வீரரை நாம் கடந்த உலகக்கோப்பையிலேயே பார்த்திருப்போம், 9 பேரைக் கடைந்து எடுத்து பந்தை தனி நபராகக் கொண்டு செல்லக் கூடியவர்.

இந்த யூரோ 2021 கால்பந்து தொடரில் கவனிக்க வேண்டிய மற்றொரு போர்ச்சுக்கல் வீரர் பெர்னாண்டஸ் ஆவார்.

பிரான்ஸ் ‘மின்னல்’ மபாப்பே:

பிரான்ஸ் மின்னல் மபாப்பே.


2018 உலகக்கோப்பையில் இளம் கால்கள் ஒன்று மின்னல் வேகத்தில் வேறு 10-12 கால்களைக் கடைந்து எடுத்துக் கொண்டு பந்துகளை தன் பகுதியிலிருந்து எதிரணிப் பகுதிக்குள் ஊடுருவியதைப் பார்த்துப் பிரமித்திருக்கிறோம், அவர்தான் பிரான்ஸ் வீரர் மபாப்பே. பிரான்ஸ் உலகக் கோப்பையை வென்றதில் இவரது பங்களிப்பு எக்கச்சக்கம்.

Also Read: Euro 2021 | யூரோ கோப்பை 2021: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு கிலி காட்டிய ருமேனியா- போராடி வென்றது இங்கிலாந்து

கடந்த 8 பிஎஸ்ஜி ஆட்டங்களில் அதாவது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காக லீக் ஆடும் மபாப்பே 8 ஆட்டங்களில் 9 கோல்களை அடித்து செம பார்மில் இருக்கிறார்.

போலந்து வீரர் லெவாண்டோவ்ஸ்கி:

பேயர்ன் மியூனிக் அணிக்காக போலந்து நட்சத்திரம் லெவாண்டொவ்ஸ்கி ஆடிய ஆட்டம் இவருக்கு ஆண்டி சிறந்த வீரர் என்ற பட்டத்தைப் பெற்றுக் கொடுத்தது. இப்போது தன் நாடான போலந்துக்காக ஆடும்போது கூடுதல் உத்வேகத்துடன் ஆடுவார், இவரையும் குறிப்பாக நாம் கவனித்துப் பார்க்க வேண்டும்.

இவர் தன் நாட்டுக்காகவும் கிளப்புக்காகவும் 2019-20 சீசனில் 14 போட்டிகளில் 22 கோல்களை அடித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் ஒரு கோல் என்ற வீதத்தில் இவரது ஆட்டம் இதுவரை இருந்து வந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து கேப்டன் கேன்:

தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இங்கிலாந்து கேப்டன் 12 கோல்களை அடித்து நம்பர் 1 ஆகத் திகழ்கிறார். கடந்த உலகக்கோப்பையிலும் இவர் அதிக கோல்கள் இந்த சீசன் லீக் போட்டிகளிலும் 23 கோல்களுடன் முதலிடம் வகிக்கிறார்.

2015-ல் இங்கிலாந்து கால்பந்து அணியில் அறிமுகமான கேன், இதுவரை 34 கோல்களை இங்கிலாந்துக்காக அடித்துள்ளார். வெய்ன் ரூனி 53 கோல்களுடன் சாதனையில் இருக்கிறார், அவரை கேன் முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்ன்:

மான்செஸ்டர் சிட்டி அணி பிரீமியர் லீக் சாம்பியன் ஆவதற்கு டிபுருய்ன் பங்களிப்பு ஏராளம். பெல்ஜியம் அணியும் கோப்பையை வெல்ல டிபுருய்ன் அபாரமாக ஆடுவது அவசியம். சுமார் 11 கோல்களை அடிக்க இவர் உதவி புரிந்துள்ளார், கோலில் உதவி புரிந்த வகையில் இரட்டை இலக்கத்தை எட்டிய ஒரே வீரர் என்ற பெருமையைக் கடந்த சீசனில் அவர் பெற்றார். 6 சீசன்களில் அசிஸ்ட்கள் எனப்படும் கோல் அடிக்க உதவி செய்வது, களம் அமைத்துக் கொடுப்பதில் 4 முறை இரட்டை இலக்கத்தை எட்டியுள்லார் கெவின் டி புருய்ன், மிக மிக அபாயகரமான வீரர்.
Published by:Muthukumar
First published: