Euro 2021 | யூரோ கோப்பை 2021: பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு கிலி காட்டிய ருமேனியா- போராடி வென்றது இங்கிலாந்து

ருமேனியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி

புதனன்று ஆஸ்திரியாவை 1-0 என்று வீழ்த்திய இங்கிலாந்து அணி நேற்று யூரோ கோப்பை கால்பந்து தொடரின் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ருமேனியாவை 1-0 என்று போராடி வீழ்த்தியது.

  • Share this:
    ஆஸ்திரியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணியிலிருந்து 9 வீரர்களை மாற்றியுள்ளார் மேனேஜர் கரேத் சவுத்கேட். எனவே இது இங்கிலாந்தின் மற்றொரு அணி என்றே கூற வேண்டும்.

    இங்கிலாந்து வீரர் மார்கஸ் ரேஷ்போர்டு 68வது நிமிடம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

     

    Also Read:  Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

    பந்தை இங்கிலாந்து வீரர்கள் ருமேனியா கோல் அருகே கொண்டு சென்ற போது ருமேனியாவின் பதிலி ஆட்டக்காரர் தைபீரியு கபூசா, இங்கிலாந்து வீரர் ஜாக் கிரீலிஷ் என்பவரை கீழே தள்ளினா, இது பெனால்டி பகுதிக்குள் நடந்த ஃபவுல் ஆதலால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.

     

    பெனால்டி கிக்கை அடித்த மார்கஸ் ராஷ்போர்டு, ருமேனியாவின் கோல் கீப்பர் புளோரின் நிட்டாவை ஒரே இடத்தில் நிற்க வைத்து பந்தை கோலுக்குள் திணித்தார்.

    ஆனால் ருமேனியா கோல் கீப்பர் புளோரின் நிட்டா, அதன் பிறௌ 10 நிமிடங்களில் இதே போல் இங்கிலாந்துக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை திறம்பட தடுத்தார். ஜோர்டான் ஹெண்டர்சன் பெனால்டி கிக் கோலாக மாறவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து 2-0 என்று வெற்றி பெறுவதை தடுத்தார்.

    ஆனால் இரு அணிகளுக்கும் இடையே ஆட்டம் பொறிபறந்தது. முதல் பாதியில் இங்கிலாந்து அணி இருமுறை கோல் போஸ்ட்டில் அடித்து சொதப்பியது. ருமேனியா அணியும் பிரமாதமாக ஆடி டெயான் சோரஸ்கியூ மூலம் கோல் அடித்திருக்கும் ஆனால் இங்கிலாந்து கோல் கீப்பர் சாம் ஜான்ஸ்டன் அபாரமாகத் தடுத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து கீப்பர் சாம் ஜான்ஸ்டன், இங்கிலாந்து முதல் கோலை அடித்த பிறகு ருமேனியா வீரர் ஆந்த்ரே இவான் என்பவர் நெருக்கமாக அருகில் வந்து அடித்த ஷாட்டை மிகத்திறமையாகத் தடுத்தார்.

    நேற்று நடந்த மற்ற பயிற்சி ஆட்டங்களில் ஸ்வீடன் அணி ஆர்மீனியாவை 3-1 என்ற கோல் கணக்கிலும் நெதர்லாந்து அணி ஜியார்ஜியாவை 3-0 என்றும் டென் மார்க் அணி போஸ்னியாவை 2-0 என்றும் கிரீஸ் அணி நார்வேயை 2-1 என்றும் வீழ்த்தின.

    இன்று ஜூன் 7ம் தேதி நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி குரேஷியாவை 1-0 என்று வீழ்த்தியது.
    Published by:Muthukumar
    First published: