Euro Cup 2021: கோல் மழையில் லாட்வியாவை நொறுக்கிய ஜெர்மனி- 2 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் முல்லர் முதல் கோல்

2 ஆண்டுகளுக்குப் பிறகு கோல் அடித்த தாமஸ் முல்லர்.

யூரோ கோப்பை 2021 கால்பந்து தொடரின் கடைசி வார்ம் அப் பிரெண்ட்லி போட்டியில் லாட்வியாவை 7-1 என்ற கோல்கள் கணக்கில் வலுவான ஜெர்மனி அணி வீழ்த்தியது.

  • Share this:
ஜூன் 11ம் தேதி ஐரோப்பியக் கோப்பைக்கான கால்பந்து தொடர் தொடங்குகிறது, மொத்தம் 24 அணிகள், 4 அணிகள் கொண்ட 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆடப்படவுள்ளது, 11 நகரங்களில் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கான வார்ம் அப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் ஜெர்மனி தனது கடைசி வார்ம் அப் போட்டியில் திங்களன்று லாட்வியாவை 7-1 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது. ஜெர்மனியின் நட்சத்திர வீரர் தாமஸ் முல்லர் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் சர்வதேச கோலை அடித்தார்.

லாட்வியா அணி உலகத் தரவரிசையில் 138வது இடத்தில் உள்ளதாகும். இன்னும் 8 நாட்களில் யூரோ கோப்பையில் ஜெர்மனி அணி வலுவான பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் இது ஒரு நல்ல வார்ம் அப் போட்டியாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும், காரணம் லாட்வியா அணி வீரர்கள் காயங்களால் பாதிக்கப்பட்ட ஒரு அணியாக இருந்ததே.

Also Read: India vs Bangladesh: இந்தியா அபாரம்- வங்கதேசத்தை 2-0 என்று வீழ்த்தியது- 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றி

ஜெர்மனி கேப்டனும் கோல் கீப்பருமான மேனுயெல் நியூயர் தனது 100வது சர்வதேசப் போட்டியில் களமிறங்கியதை அடுத்து அவருக்கு கரகோஷம் எழுப்பப்பட்டது. ஆனால் பாவம் இந்த பிரமாதமான 35 வயது கோல் கீப்பருக்கு நேற்று வேலையில்லை. கடைசியில் லாட்வியாவின் மிட்பீல்டர் அலெக்சீஸ் சேவ்லீவ்ஸ் ஜெர்மன் தடுப்பணையை ஊடுருவி கோல் அடிக்கும் போதுதான் நியூயெருக்கு வேலை ஆனால் அது லாட்வியாவின் ஆறுதல் கோலாக முடிந்தது.

Also Read: Euro 2021: வார்ம்-அப் போட்டியில் ஜார்ஜியாவை 3-0 என்று நொறுக்கிய நெதர்லாந்து

தொடக்கம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் தலைதூக்க ஜெர்மனி வீரர் ராபின் கோசென்ஸ் முதல் கோலை தன் நாட்டுக்காக அடித்தார். இடைவேளைக்கு முன்னதாகவே மேலும் 4 கோல்களை அடித்து 5 கோல்களுடன் ஜெர்மனி முன்னிலை வகித்தது. இல்கே குண்டகன், தாமஸ் முல்லர், செர்ஜ் நாப்ரி, கோல்களை அடிக்க 3வது கோல் லாட்வியா வீரர் ராபர்ட்ஸ் ஓஸோல்சின் சொந்த கோலானது, தன் கோலுக்குள்ளேயே இவர் தெரியாமல் அடித்தது ஜெர்மனியின் 3வது கோலாக ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது பாதியில் டிமோ வெர்னர், லெராய் சேன் ஆகிய பதிலி வீரர்களும் கோல்கணக்கை தொடங்க ஜெர்மனி 7 கோல்களை அடித்தது. இதன் மூலம் ஜெர்மனி தன் அணியின் பலத்தை யூரோ கோப்பை போட்டிகளுக்கு முன் காட்டி, பிற ஜாம்பவான்களுக்கு சவால் விடுத்துள்ளது.
Published by:Muthukumar
First published: