Euro 2020: நெதர்லாந்திடம் 3-0 தோல்வி: மறுக்கப்பட்ட கோல்; நார்த் மேசிடோனியா வெளியேறியதால் பயிற்சியாளர் ராஜினாமா

நெதர்லாந்து அணி.

யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று நெதர்லாந்திடம் நார்த் மேசிடோனியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற்றது. மாறாக கடினமாக உழைத்து ஆடிய மேசிடோனியா அணியின் கோச் ஆஞ்சேலோவ்ஸ்கி தன் பதவியை உதறினார்.

  • Share this:
    யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று நெதர்லாந்திடம் நார்த் மேசிடோனியா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி-16 அணிகள் சுற்றுக்குத் தகுதி பெற்றது. மாறாக கடினமாக உழைத்து ஆடிய மேசிடோனியா அணியின் கோச் ஆஞ்சேலோவ்ஸ்கி தன் பதவியை உதறினார்.

    நெதர்லாந்து அணிக்கு மெம்பிஸ் டீபே 24ம் நிமிடத்திலும் பிறகு இடைவேளை முடிந்து ஜியார்கினோ வினால்டும் 51வது நிமிடத்தில் 2வது கோலையும் பிறகு இவரே 58வது நிமிடத்தில் 3வது கோலையும் அடிக்க நெதர்லாந்து அணி இறுதி-16க்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நுழைந்தது.

    இந்நிலையில் நாக்-அவுட் சுற்றில் நெதர்லாந்து குரூப் டி, அல்லது குரூப் ஈ அல்லது குரூப் எஃப் பிரிவிலிருந்து நாக் அவுட்டுக்கு தகுதி பெறும் சிறந்த 3வது அணியுடன் மோதும். இந்தப் போட்டி அடுத்த ஞாயிறன்று நடைபெறும்.

    Also Read: Euro 2020 | யூரோ கோப்பை: உக்ரைனை வீழ்த்தி ஆஸ்திரியா நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி- காத்திருக்க வேண்டிய நிலையில் உக்ரைன்

    நார்த் மேசிடோனியா அணி கடினமான அணி இந்த ஆட்டத்திலும் நெதர்லாந்துக்கு தொல்லைகள் கொடுத்து தொடக்கத்தில் கோல் வாய்ப்பைப் பெற்றது. கோலையும் அடித்தது, ஆனால் இவான் ட்ரிகோவ்ஸ்கி ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டு கோல் மறுக்கப்பட்டது. பிறகு நார்த் மேசிடோனியா வீரர் அலெக்சான்டர் ட்ரைக்கோவ்ஸ்கி அடித்த ஷாட் நெதர்லாந்து கோல் கீப்பர் ஸ்டீகெலன்பர்க்கை முறியடித்தது ஆனால் போஸ்ட்டில் பட்டு திரும்பியது.

    நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு:

    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் மேசிடோனியா வீரர் டாலி பிளைண்ட், நெதர்லாந்து வீரர் கோரான் பாண்டவை தடுக்கும் முயற்சியில் சர்ச்சை எழ நெதர்லாந்து எதிர்தாக்குதல் ஆட்டத்தில் டான்யெல் மாலென், டீபே இணைந்து தங்கள் பகுதியிலிருந்து படுவேகமாகக் கொண்டு சென்றனர். இருவரும் மாறி மாறி பாஸ் செய்து கடைசியில் மெம்பிஸ் டீபே இடது காலால் உதைக்க முதல் கோல் நெதர்லாந்துக்கு விழுந்தது. வீடியோ ரிவியூவில் டாலி பிளைண்ட் பாண்டவை தடுக்கும் முயற்சி விதிமுறைக்குட்பட்டதுதான் என்று தெரிந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடைவேளைக்குப் பிறகு மேத்திஸ் டீ லைட் தலையால் முட்டிய பந்தை மேசிடோனியா வீரர் ட்ரிக்கோவ்ஸ்கி தடுத்தார். பிறகு 54 வது நிமிடத்தில் டீபெ களம் அமைத்துக் கொடுக்க வினால்டுன் கோலாக மாற்றினார். மீண்டும் டீபே களம் அமைத்துக் கொடுக்க 58வது நிமிடத்தில் வினால்டூன் மீண்டும் கோலாக மாற்றினார் 3-0. இன்னொரு கோலையும் கேப்டன் வினால்டுன் அடித்து ஹாட்ரிக் ஆக்கியிருப்பார், ஆனால் அது வெளியே சென்றது.

    Also Read: Euro 2020 | யூரோ 2020- எரிக்சன் துயரத்திலிருந்து மீண்ட டென்மார்க்: ரஷ்யாவை 4-1 என்று வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது

    கடைசியில் நெதர்லாந்து 3-0 என்று வெற்றி பெற்றது. நார்த் மேசிடோனியா ஸ்பிரிட்டுடன் இந்தத் தொடரில் ஆடி துரதிர்ஷ்டவசமாக வெளியேறியது அதன் மூத்த வீரர் கோரான் பாண்டேவ் இந்தப் போட்டியுடன் ஓய்வு பெறவிருப்பதால் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    கடும் ஏமாற்றமடைந்த மேசிடோனியா பயிற்சியாளர் ஆஞ்சேலோவ்ஸ்கி பதவியை ராஜினாமா செய்தார்.
    Published by:Muthukumar
    First published: