முகப்பு /செய்தி /விளையாட்டு / Euro 2020: வார்ம்- அப் போட்டியில் கிரீஸ்மேனின் அபார பைசைக்கிள் கிக் கோல்- பல்கேரியாவை பந்தாடிய பிரான்ஸ்

Euro 2020: வார்ம்- அப் போட்டியில் கிரீஸ்மேனின் அபார பைசைக்கிள் கிக் கோல்- பல்கேரியாவை பந்தாடிய பிரான்ஸ்

வெற்றிக் களிப்பில் உலக சாம்பியன் பிரான்ஸ்.

வெற்றிக் களிப்பில் உலக சாம்பியன் பிரான்ஸ்.

பிரான்ஸில் நடைபெற்ற யூரோ 2020 கோப்பைக் கால்பந்துக்கான பயிற்சி சர்வதேச நட்புமுறை ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி பல்கேரியாவை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி அசத்தியது.

  • 1-MIN READ
  • Last Updated :

யூரோ 2020 கால்பந்து தொடர் வரும் 11ம் தேதி நள்ளிரவு துருக்கி-இத்தாலி அணிகளின் ஆட்டம் மூலம் தொடங்குகிறது. 24 ஐரோப்பிய அணிகள் 6 பிரிவுகளில் 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பயிற்சி ஆட்டங்களில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வார்ம் அப் போட்டியில் பிரான்ஸ் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

யூரோ கால்பந்து கோப்பைத் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரான்ஸ் நட்சத்திரம் ஆண்டாய்ன் கிரீஸ்மேன் முதல் கோலையே அசத்தலாக போட்டார். அது ஒரு பைசைக்கிள் கிக் கோல் ஆகும்.

பிரான்ஸ் வீரர் கிரீஸ்மெனின் பைசைக்கில் கிக் கோல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் பிறகு மற்றொரு பிரமாத பிரான்ஸ் வீரர் ஆலிவியர் ஜிரவுட், மற்றொரு சூப்பர் ஸ்டாரான கரிம் பென்சீமாவுக்கு பதிலாக களம் புகுந்து 7 நிமிடங்களில் 2 கோல்களைத் திணித்தார்.

யூரோ 2020 கால்பந்து தொடரை கருத்தில் கொண்டு பயிற்சியாளர் டீஷாம்ப் முழு வலுவான அணியை களமிறக்கினார். மின்னல் வீரர் கிலியன் மபாப்பே, கிரீஸ்மேன், பென்சீமா ஆகியோரின் தாக்குதல் ஆட்டத்தில் பல்கேரியா பாதி நேரம் கோல்களை தடுப்பதிலேயே மும்முரம் காட்ட வேண்டியதாயிற்று.

ஆட்டத்தில் 70% பந்து பிரான்ஸ் அணியிடம் தான் இருந்தது. 26 முறை பல்கேரியா கோலை நோக்கி பிரான்ஸ் வீரர்கள் ஷாட்களை அடித்தனர். பல்கேரியா கோல் கீப்பர் டேனியல் நவ்மோவ் சிலபல கோல்களை தடுத்ததால் 3-0 என்று பிரான்ஸ் வென்றது இல்லையெனில் இன்னும் மோசமாக பல்கேரியா தோற்றிருக்கும்.

கிரீஸ்மேனின் ஆட்டம் தொடக்கக் கட்டத்தில் தீப்பொறி பறப்பது போல் இருந்தது, மின்னல் வேக கால்களினால் பல்கேரியா வீரர்களைக் கடைந்து எடுத்தார். கடைசியில் இவரே ஒரு ஷாட்டை கோல் அருகே மிட்பீல்டருக்கு அடிக்க அவர் திரும்பவும் அடித்த ஷாட் பல்கேரியா வீரர் காலில் பட்டு எகிற அங்கு கிரீஸ்மேன் பைசைக்கிள் கிக்கில் கோலாக மாற்றினார், அசாதாரணமான கோல் அது. ஜிரவுடும் அபாரமாக ஆடி மேலும் 2 கோல்களை அடித்தார். ஒன்று பெஞ்சமின் பவாத் அடித்த கிராஸை கோலாக மாற்றினார் ஜிரவ்ட். அடுத்த கோலும் இதே போல் பென் யெட்டர் என்ற வீரரின் கிராஸை ஜிரவ்ட் கோலுக்குள் திணித்தார்.

பிரான்ஸ் அணியில் அதிக கோல்களை அடித்தவர் தியரி ஹென்றி, இவர் 51 கோல்களை அடித்துள்ளார், ஜிரவ்ட் இந்த சாதனையை சமன் செய்ய இன்னும் 5 கோல்கள் மீதமுள்ளன.

First published:

Tags: Euro Cup 2021, Football, France