Euro 2020 Wales vs Switzerland: கெய்ஃபர் மூர் கோலினால் தோல்வியிலிருந்து தப்பி டிரா செய்த வேல்ஸ்

வேல்ஸ்-சுவிஸ் போட்டி டிரா

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ஷெர்டன் ஷக்கீரி அடித்த பிரமாதமான கிராஸை சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ அருமையாக தலையால் முட்டி கோலுக்குள் திணிக்க 1-0 என்று சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றது.

 • Share this:
  யூரோ 2020 கால்பந்து குரூப் ஏ போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்து மற்றும் வேல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

  இதன் மூலம் இரு அணிகளும் புள்ளியைப் பகிர்ந்து கொண்டன.

  ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ஷெர்டன் ஷக்கீரி அடித்த பிரமாதமான கிராஸை சுவிஸ் வீரர் பிரீல் எம்போலோ அருமையாக தலையால் முட்டி கோலுக்குள் திணிக்க 1-0 என்று சுவிட்சர்லாந்து முன்னிலை பெற்றது.

  Also Read: Euro 2020 Christian Eriksen: மயங்கி விழுந்த கிறிஸ்டியன் எரிக்சனைக் காப்பாற்றியது எப்படி?- டென்மார்க் டீம் டாக்டர் விளக்கம்

  முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. வேல்ஸ் அணியை தொடர்ந்து பின்னுக்குத் தள்ளியது. ஆனாலும் வேல்ஸ் அணிக்கு கெய்ஃபர் மூர் தனது தூக்கி அடிக்கும் ஷாட்களினால் வாய்ப்புகளை உயிர்ப்புடன் வைத்திருந்தார். உள்ளே வரும் பாஸை ஒருமுறை கோலை நோக்கி சக்தி வாய்ந்த ஷாட்டில் திருப்ப சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் அதை திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார்.

  இடைவேளைக்கு முன்னரே சுவிட்சர்லாந்து 2வது கோலை அடித்து முன்னிலை பெற்றிருக்கும். எம்போலோ கடுமையான நெருக்கடியைக் கடந்து பந்தை ஒரு வழியாக சக வீரர் செஃபரோவிக்கிற்கு பாஸ் செய்தார். ஆனால் கோல் முன்னிலையில் செஃபரோவிக் பந்தைக் கட்டுப்படுத்தத் திணறியதால் வாய்ப்பு பறிபோனது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வேல்ஸ் அணியை விட சுவிட்சர்லாந்துதான் அருமையாக ஆடியது, ஆனால் பினிஷிங்கிலோ, பாசிங்கிலோ சிலபல இடங்களில் சறுக்கியது. முதல் பாதியில் 73% பந்துகள் சுவிட்சர்லாந்து வீரர்களிடமே இருந்தது. கோலை நோக்கி 11 ஷாட்கள் அடித்தனர். ஒன்றேயொன்றுதான் இதில் கோல் ஆனது. பிரீல் எம்போலோ வேல்ஸ் அணிக்கு பெரிய தொல்லைகள் கொடுத்தார்.

  Also Read: Euro 2020 Belgium vs Russia: லுகாகு அபார ஆட்டம்; ரஷ்யாவை நொறுக்கிய நம்பர் 1 ரெட் ’டெவில்ஸ்’ பெல்ஜியம்

  ஆனால் வேல்ஸ் அணிக்கு ஒரு அதிர்ஷ்டம் எப்போதும் உண்டு, அந்த வகையில்தான் 74ம் நிமிடத்தில் ஒரு ஷார்ட் கார்னர் வாய்ப்பு கிடைக்கிறது. ஜோ மோரெல் அடித்த ஷாட்டை கோல் நோக்கி அடிப்பதற்காக கெய்பர் மூர் தன்னை தடுக்கும் வீரருக்கு போக்குக் காட்டி பிரமாதமாக நகர்ந்து தலையால் முட்டி கோலாக்க ஆட்டம் சமன் ஆனது.

  சுவிட்சர்லாந்து அணி வெற்றி வாய்ப்பை தடுத்த வகையில் வேல்ஸ் கோல் கீப்பர் அபாரமாக இரண்டு தருணங்களைக் கையாண்டார், எம்போலோ தலையால் முட்டிய பந்தை வேல்ஸ் கீப்பர் ஜொயெல் வார்டு முதலில் பந்தை தட்டி விட்டு காப்பாற்றினார். பிறகு சுவிஸ் வீரர் மரியோ கவ்ரானோவிச் ஒரு பந்தை அடிக்க விரல் நுனியில் பந்தை தள்ளி விட்டு காப்பாற்றினார் வேல்ஸ் கீப்பர் ஜொயெல் வார்டு. 85வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ஹாரிஸ் செஃபரோவிக் அடித்த கோல் ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டதால் கோல் செல்லாது என்று ஆனது.

  வேல்ஸ் அணி அடுத்ததாக துருக்கியை பாக்கூவில் புதனன்று சந்திக்கிறது. இதே நாளில் சுவிஸ் அணி இத்தாலியைச் சந்திக்கிறது.
  Published by:Muthukumar
  First published: