யூரோ கோப்பை: 5 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்த உக்ரைன் வெற்றி; உயிரைக்கொடுத்து ஆடிய நார்த் மேசிடோனியா தோல்வி

கோல் அடித்த உக்ரைன் வீரர்கள் யார்மலெங்கோ, யரேம்சுக். யூரோ 2020-21

புகாரெஸ்ட்டில் நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து பிரிவு சி ஆட்டத்தில் நார்த் மேசிடோனியா பெரும்பாலும் ஆதிக்க செலுத்தினாலும் உக்ரைன் அணி அதைவிடவும் அபாரமாக ஆடி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிகள் கணக்கைத் தொடங்கியது.

  • Share this:
முதல் போட்டியில் அன்று நெதர்லாந்தை ஆட்டிப்படைத்து இடைவேளைக்குப் பிறகு விழுந்த 5 கோல்களில் 3-2 என்று கடைசியில் நெதர்லாந்து வென்றது. ஆனால் உக்ரைன் அடக்க முடியாத ஒரு சக்தி என்பது அந்த ஆட்டத்தில் தெரிந்தது.

ஆட்டம் முடிந்தவுடன் உக்ரைன் மேனேஜர் ஷெவ்சென்கோ, ‘நார்த் மேசிடோனியா எங்கள் வயிற்றைக் கலக்கி விட்டது’ என்று ஒப்புக் கொண்டார். ஆனாலும் உக்ரைன் வீரர்கள் ஆந்த்ரீ யார்மலெங்கோ மற்றும் ரோமன் யரேம்சுக் ஆகியோர் முறையே 29 மற்றும் 34வது நிமிடங்களில் இடைவேளைக்கு முன்னரே அடித்த கோல்கள் உக்ரைனுக்கு வெற்றி பெற்று கொடுத்தன.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில், பெரும்பகுதி உக்ரைன் வயிற்றில் மோட்டார் ஓட வைத்த நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி ஒரே கோலை அடித்தார், ஆனால் 2-1 என்ற உக்ரைன் வெற்றி ஸ்கோரை வைத்து முடிவு செய்ய வேண்டிய போட்டியல்ல. உக்ரைனுக்கு கடும் அச்சுறுத்தலை கொடுத்தது நார்த் மேசிடோனியா.

இதையும் படிங்க: Euro 2020| யூரோ கோப்பை: 99-வது விநாடியில் டென்மார்க் அடித்த சாதனை கோல் வீண்: டென்மார்க் ரசிகர்களின் இருதயத்தை நொறுக்கிய பெல்ஜியத்தின் வெற்றி

கடைசியில் நார்த் மேசிடோனியா வீரர் அவ்ரமோவ்ஸ்கியின் கையில் பந்து பட்டதையடுத்து உக்ரைனுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஸ்லன் மலினோவ்ஸ்கி வீணடித்தார், நார்த் மேசிடோனியா கோல் கீப்பர் அபாரமாகக் கணித்து பிடித்தார். நார்த் மேசிடோனியா அடித்த ஒரே கோலுமே பெனால்டி கிக் மூலம் வந்ததுதான், ஆனால் உக்ரைன் கோல் கீப்பர் கிரிகரி புஷ்சன் தடுக்க அதனை மீண்டும் நார்த் மேசிடோனியா வீரர் அலியோஸ்கி கோலுக்குள் தள்ளினார்.

ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் மலினோவ்ஸ்கி பந்தை யரேம்சுக்கிற்கு பாஸ் செய்ய அவரது ஷாட்டை மேசிடோனியா கோல் கீப்பர் டிமிட்ரிவிஸ்கி பாய்ந்து தள்ளி விட்டார் அந்தப் பந்தை கரவேவ் மீண்டும் அடிக்க அதுவும் வெளியே சென்றது.

7வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் யார்மலெங்கோ கார்னர் வாய்ப்பை நேராக கோலுக்குள் திணித்திருப்பார், ஆனால் பந்து கோலுக்குப் பின்வலையைத் தாக்கியது, அதிலிருந்து கிடைத்த இன்னொரு வாய்ப்பை மலினோவ்ஸ்கி ஷாட்டாக மாற்ற மேசிடோனியா கீப்பர் தடுத்து விட்டார். 12வது நிமிடத்தில் ஒரு மூவ் யரேம்சுக்கின் ஆஃப் சைடு ஆனது.

5 நிமிடங்களில் உக்ரைனின் 2 கோல்கள்:

கோலிற்கான முஸ்தீபு ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நடந்தது. உக்ரைன் வீரர் யார்மலெங்கோ ஆஃப் சைடுக்கான பொறியிலிருந்து விலகி ஒரு ஷாட்டை அடிக்க அதை மேசிடோனியா கீப்பர் டிமிட்ரிவிஸ்கி பின்னால் தள்ளி விட, உக்ரைனுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னர் ஷாட்டை மலினோவ்ஸ்கி அடித்தார், மிகப்பிரமாதமாக அந்த ஷாட் கோலுக்கு அருகில் தாழ்வாக வந்தது. அதனை கரவேவ் அருமையாக தனதாக்கி கொஞ்சம் தள்ளி கோல் அருகிலேயே பாஸ் செய்தார். அதை யார்மலெங்கோ கோலுக்குள் தள்ளினார். உக்ரைன் 1-0 என்று முன்னிலை பெற்றது.

பிறகு 34வது நிமிடத்தில் மேசிடோனியாவின் தடுப்பணை சற்றே அசந்த வேளையில் தடுப்பணைக்கு பின்னால் இருந்த உக்ரைன் வீரர் யார்மலெங்கோ பந்தை பாஸ் செய்ய பாஸைக் கண்ட யரேம்சுக் முன்னால் வந்து கோலை நோக்கி அடிக்க 2வது கோலானது. ஆனால் இது ஆஃப் சைடு என்ற சந்தேகம் இருக்கிறது, நடுவர் செக் செய்து ஆன்சைடு என்றார், ஆனால் அவர் கொஞ்சம் முன் கூட்டியே வந்தது போல்தான் தெரிந்தது, எது எப்படியோ உக்ரைன் 2-0 என்று முன்னிலை பெற்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போதும் 2-0 என்ற பின்னடைவிலிருந்து எதிரணி எழும்புவது கடினம். ஆனால் உடனேயே எழுச்சி பெற்ற நார்த் மேசிடோனியா கோரன் பாண்டேவ் மூலம் வாய்ப்பு பெற்றது ஆனால் அவரது முயற்சி நடுவரால் ஆஃப் சைடு என்று தகர்க்கப்பட்டது. பிறகு 57வது நிமிடத்தில்தான் மேசிடோனியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேசிடோனியா வீரர் அலெக்சாண்டர் டிரைக்கோவ்ஸ்கியின் ஷாட்டை கோல் கீப்பர் புஷ்சான் அபாரமாக மேலே தட்டி விட பந்து மேல் கம்பியில் பட்டு திரும்பி வந்த போது மேசிடோனியா வீரர் பான்டேவ் கீழே தள்ளப்பட மேசிடோனியாவுக்கு பெனால்டிகிக் சாதகமாக்கப்பட்டது.

பெனால்டி கிக்கை மேசிடோனியாவின் ஸ்ட்ரைக்கர் எஸ்ஜியான் அலியோஸ்கி அடித்தார், ஆனால் உக்ரைன் கீப்பர் அதைக் கணித்து தட்டி விட்டார், தட்டி விட்ட பந்தை மிக விழிப்புடன் இருந்த மேசிடோனியாவின் அலியோஸ்கி கோலுக்குள் திணிக்க மேசிடோனியா 2-1 என்று கோல் வித்தியாசத்தை குறைத்து.

நார்த் மேசிடோனியா அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் பயனில்லாமல் போனது. இன்னும் புள்ளிகள் பெறவில்லை. பிரிவு சியில் நெதர்லாந்து 6 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க உக்ரைன் 3 புள்ளிகள் பெற்று 2ம் இடத்திலும் ஆஸ்திரியா 3 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.
Published by:Muthukumar
First published: