போர்ச்சுகல் கடும் ஏமாற்றமடைந்தது, காரணம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் கடைசி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இது என்று கூறப்படுகிறது, மேலும் ரொனால்டோ 110 கோல்கள் அடித்து அதிக கோல்களுக்கான உலக சாதனையையும் நிகழ்த்த முடியாமல் போனது.
இந்த வெற்று மூலம் உலக நம்பர் 1 அணி பெல்ஜியம் காலிறுதியில் இத்தாலியைச் சந்திக்கிறது, இத்தாலி அணி ஆஸ்திரியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. ஆனால் பெல்ஜியம் அணிக்கு பெரிய கவலை என்னவெனில் அதன் முக்கியமான வீரர்கள் கெவின் டி புருய்ன், ஈடன் ஹசார்டு ஆகியோர் காயமடைந்து வெளியேறினர். ஆனால் அதற்கு முன்னரே போர்ச்சுகலின் விதியை தன் அபார கோல் மூலம் தீர்மானித்தார் தோர்கன் ஹசார்டு, 42வது நிமிடத்தில் இவர் அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றி கோலாக அமைந்தது.
ஈடன் ஹசார்டு, கெவின் டி புருய்ன், ரொமிலு லுகாக்கு தான் பெல்ஜியத்தின் மும்மூர்த்திகள். ஆனால் இந்தப் போட்டியில் ஜென் வெர்ட்டோன்கன், ஆல்டர்வெய்ரல்ட், தாமஸ் வெர்மீலன் ஆகியோர் முன்னிலை பெற்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ படையை இவர்கள் கோல் அடிக்க முடியாமல் ஆட்கொண்டனர்.
Also Read: Euro 2020 | நெதர்லாந்து அதிர்ச்சித் தோல்வி: தடுப்பு மாவீரன் செய்த ‘ஹேண்ட் பால்’ ஏற்படுத்திய சரிவு- காலிறுதியில் செக்.குடியரசு
இடைவேளைக்குப் பிறகு போர்ச்சுகலின் ஆட்டம் கடுமையாக மாற பெல்ஜியம் வென்றது அதிர்ஷ்டம் என்ற அளவுக்கு இருந்தது. போர்ச்சுகல் 23 ஷாட்களை கோல் நோக்கி அடிக்க பெல்ஜியம் 6 ஷாட்களையே அடித்தது. ஆனாலும் ஈடன் ஹசார்ட் இடது புறத்திலிருந்து போர்ச்சுகல் கோல் கீப்பர் பேட்ர்சியோவை ஏய்த்து அடித்த கோல்தான் பெல்ஜியத்தின் வெற்றிக்குக் காரணமானது.
ரூபன் டயஸ் தலையால் முட்டிய ஷாட், ரஃபேல் குயெரியோவின் பெல்ஜியம் கோல் போஸ்ட்டைத் தாக்கிய ஷாட், ஜோவா பெலிக்ஸ் அடித்த ஷாட் என்று கோல்களாக மாற வேண்டியதெல்லாம் போர்ச்சுகலின் துரதிர்ஷ்டமாக கோலாக மாறாமல் போக பெல்ஜியத்துக்கு அதிர்ஷ்டம் இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
போர்ச்சுகலின் ஆட்டத்தில் தெளிவு இல்லை, ஆனால் ஆக்ரோஷம் அதிகமிருந்தது. இடைவேளைக்கு முன்பாக போர்ச்சுக்கல் வீரர் டியாகோ ஜோட்டாவுக்கு கிடைத்த வாய்ப்பு தடுக்கப்பட்டது, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அருமையான ஃப்ரீ கிக், பெல்ஜிய கோல் கீப்பர் கர்டாய்ஸ் மூலம் தடுக்கப்பட்டது. மறு முனையில் பெல்ஜியம் வீரர் தாமஸ் மியுனியரின் ஷாட் கோலிலிருந்து விலகி சென்றது.

ரொனால்டோ-லுகாகு.
இடைவேளைக்கு சற்று முன்னர் 42வது நிமிடத்தில் இடது புறத்திலிருந்து வெட்டி உள்ளே நுழைந்த தோர்கன் ஹசார்டு பிரமாதமான ஒரு வளைந்த ஷாட்டில் கோல் அடித்தார்.
இடைவேளைக்குப் பிறகு 10 நிமிடங்களில் ஜோவா பெலிக்ஸ், புரூனோ பெர்னாண்டஸ் ஆகியோரை களமிறக்கினார் போச்சுகல் பயிற்சியாளர். ரொனால்டோ மூலம் உருவான ஒரு மூவில் ஜோட்டா பவுன்ஸ் ஆகி வந்த பந்தை கோல் போஸ்ட்டுக்கு மேலே அடித்து வாய்ப்பை தவற விட்டார். ஜோவ பெல்கிஸின் தலை முட்டல் ஷாட்டை பெல்ஜியம் கோல் கீப்பர் தடுத்து விட்டார். கடைசியில் போர்ச்சுகல் கொடுத்த நெருக்கடிகளை பெல்ஜியம் பயங்கரமாக முறியடித்தது. கடைசியில் வெற்றி பெற்றது.
கேப்டன் ரொனால்டோ வெறுப்பில் தன் கைப்பட்டையைக் கழற்றி தரையில் அடித்தார்,. ஆனால் பெல்ஜியத்தின் லுகாகுவும் ரொனால்டோவும் ஆரத்தழுவினர். ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் வெளியேறியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.