• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Euro 2020 | Same Side கோலில் சாதனை படைத்த நடப்பு யூரோ கோப்பை தொடர்...

Euro 2020 | Same Side கோலில் சாதனை படைத்த நடப்பு யூரோ கோப்பை தொடர்...

same side goal

same side goal

நடப்பு யூரோ தொடரில் 24 நாடுகள் பங்கேற்றதில், நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் உட்பட 9 நாட்டு வீரர்கள் சேம் சைடு கோல் அடித்து கொடுத்துள்ளனர்.

  • Share this:
கால்பந்து விளையாட்டில் "சேம் சைடு" கோல் என்பது எதிரணிக்கு நாமே கோல் அடித்துக் கொடுப்பதாகும். அதாவது வீரர் ஒருவர், தனது அணிக்கு தானே தோல்வியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சமம். கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன் ஹிட் அவுட் மூலம் ஆட்டமிழப்பதற்கு ஒப்பானதாகும்.

அந்தவகையில் நடப்பு யூரோ கோப்பை கால்பந்து தொடரில் மட்டும் 11 சேம் சைடு கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன.

யூரோ கோப்பை தொடங்கபட்டு 60 ஆண்டுகளாக நடத்தப்பட்ட 15 தொடர்களிலும் மொத்தமே 10 சேம் சைடு கோல்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. 2016ல் அடிக்கப்பட்ட மூன்று சேம் சைடு கோல்களே ஒரு தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சேம் சைடு கோலாக இருந்து வந்தது.

Also read:  சுயநினைவு திரும்பல; மூளை ஆபரேஷனுக்கு பிறகு அர்ச்சனாவின் நிலை என்ன? மகள் சாரா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்

ஆனால், நடப்பு தொடரில் மட்டும் 11 சேம் சைடு கோல்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒட்டுமொத்த வரலாற்றையும் ஒரே தொடரில் முந்தியுள்ளது சேம் சைடு கோல்.

நடப்பு யூரோ தொடரில் 24 நாடுகள் பங்கேற்றதில், நம்பர் ஒன் அணியான பெல்ஜியம் உட்பட 9 நாட்டு வீரர்கள் சேம் சைடு கோல் அடித்து கொடுத்துள்ளனர்.

இந்த மோசமான சாதனைக்கு தொடக்கப் புள்ளியாக, நடப்பு தொடரின் முதல் கோலே சேம் சைடு கோலாக மாறியது.

Also read:  பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து எல்.முருகனை நீக்கியது அவருக்கு செய்த அவமதிப்பு - திருமாவளவன் கருத்து!

துருக்கி அணிக்கு எதிரான முதல் போட்டியில் இத்தாலி வீரர் Demiral சேம் சைடு கோல் அடித்து, இந்த மோசமான சாதனைக்கு சொந்தகாரரானார்.

அதிகபட்சமாக ஸ்பெயின் அணிக்கு மட்டும் எதிரணிகள் மூன்று சேம் சைடு கோல்களை போட்டுக் கொடுத்துள்ளன.

Also read:  Exclusive: கழிவுநீர் குட்டையான ஏரி: அடையாளத்தை இழந்து வரும் ‘ஏழைகளின் ஊட்டி’ ஏற்காடு..

அதேவேளையில், அதிகபட்சமாக இரண்டு சேம் சைடு கோல்களை போர்ச்சுகல் வீரர்கள், எதிரணிக்கு போட்டுக் கொடுத்துள்ளனர்.

சேம் சைடு கோல்களால் ஸ்லோவாகியா, போர்ச்சுகல் போன்ற அணிகள் பின்னடைவை சந்தித்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடைபெற்று முடிந்த யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி வெற்றி பெற்றிருப்பதன் மூலம் இரண்டாம் முறையாக அந்த அணி யூரோ சாம்பியனாகியுள்ளது. 1966- உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு ஒரு பெரிய கோப்பையை வெல்லும் இங்கிலாந்தின் கனவும் இத்தனை போட்டிகளில் மேற்கொண்ட கடின உழைப்பும் வீணாகின. முழு நேர ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றும் 1-1 என்ற இழுபறியிலிருந்து மீள முடியாமல் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: