Euro 2020 | யூரோ கோப்பை கால்பந்து : துருக்கியை வீட்டுக்கு அனுப்பிய சுவிட்சர்லாந்து

2 கோல்களை அடித்த ஷகீரி.

யூரோ கோப்பைக் கால்பந்து குரூப் ஏ போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்து அணி துருக்கியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளது.

  • Share this:
    யூரோ கோப்பைக் கால்பந்து குரூப் ஏ போட்டியில் நேற்று சுவிட்சர்லாந்து அணி துருக்கியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி-16 நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புகளை தக்கவைத்துள்ளது.

    மாறாக துருக்கியின் வாய்ப்புகள் முடிவடைந்தன, இந்த அணி முதல் சுற்றுடன் விட்டைப் பார்க்க போக வேண்டியதுதான். 3 போட்டிகளிலும் துருக்கி தோல்வி அடைந்து அந்த நாட்டின் மிகப்பெரிய கால்பந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அந்த அணி அளித்துள்ளது.

    வேல்ஸ் அணியும் சுவிஸ் அணியும் புள்ளிகள் அளவில் சமன் என்றாலும் கோல்கள் வித்தியாசத்தில் வேல்ஸ் அணி மேலே உள்ளது.

    இன்னொரு குரூப் போட்டியில் இத்தாலி அணி வேல்ஸ் அணியை 1-0 என்று வீழ்த்தி நாக் அவுட் சுற்றுத் தகுதியை உறுதி செய்தது.

    இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ஹாரிஸ் செஃபரோவிச் முதல் கோலை அடித்தார். ஸ்டீவன் ஸூபரிடமிருந்து பாஸைப் பெற்ற இவர் கோலாக மாற்றி சுவிட்சர்லாந்து அணிக்கு முன்னிலை கொடுத்தார், பெனால்டி பகுதிக்கு சற்று வெளியே இருந்து இடது காலால் உதைத்தது கோலுக்குள் சென்றது.

    பிறகு 26வது நிமிடத்தில் தடுக்கப்பட்ட ஷாட் ஒன்றை மீண்டும் ஸூபர் சேகரிக்க அதனை மற்றொரு சுவிஸ் வீரர் ஷெட்ரான் ஷகீரிக்கு பாஸ் செய்தார். ஷகீரி பந்தை வாங்கி சின்னதாக ஒரு டச் செய்து பிறகு தூரத்திலிருந்து அடித்த பிரமாதமான ஷாட் துருக்கி கோல் கீப்பர் உட்பட அனைவரையும் வேடிக்கை பார்க்க வைத்து கோலுக்குள் சென்றது. 2-0 என்று சுவிஸ் முன்னிலை.

    62வது நிமிடத்தில் துருக்கி வீரர் இர்ஃபான் காவேச்சி ஒரு கோலை அடித்து இடைவெளியைக் குறைத்தார். ஆனால் 68வது நிமிடத்தில் மீண்டும் சுவிஸ் வீரர் ஷெட்ரான் ஷகீரி மீண்டும் ஒரு அபார கோலை அடிக்க சுவிட்சர்லாந்து 3-1 என்று வெற்றி பெற்று துருக்கியை வீட்டுக்கு அனுப்பியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சுவிட்ஸர்லாந்து கோல் கீப்பர் யான் சோமரும் பிரமாதமாக சில ஷாட்களை தடுத்தார். துருக்கியின் தடுப்பு பலவீனங்கள் மேலும் அம்பலமாகின. அந்த கோல் கீப்பர் 25 வயது சகீர் துருக்கி மேலும் அவமானப்படுவதை அவரது சொந்தத் திறமைகளால் தடுத்தார் என்றே கூற வேண்டும்.

    ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் துருக்கி நம்பிக்கையுடன் ஆடினாலும் ஷகீரியின் ஆட்டம் அவர்களை தடுத்தது. சுவிட்சர்லாந்தின் 3வது கோலை உருவாக்கியவரும் ஸூபர் என்ற வீரர்தான், இவர் மிக அருமையாக ஷாகீரிக்கு அடித்த கிராஸ்தான் ஷகீரியின் 2வது கோலும், சுவிட்சர்லாந்தின் 3வது வெற்றி கோலாகவும் அமைந்தது.
    Published by:Muthukumar
    First published: