Euro 2020 | ஸ்லோவாக்கியாவின் 2 சேம்சைடு கோல்கள்: ஸ்பெயினுக்கு 5-0 வெற்றி-நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி

5 கோல்கள் அடித்த ஸ்பெயின்.

செவில்லேயில் நேற்று நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்து குரூப் இ பிரிவு ஆட்டத்தில் ஸ்லோவாக்கியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதி 16 அணிகள் பங்கேற்கும் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  • Share this:
    இந்தப் பிரிவில் ஸ்வீடன் முதிலிடம் பிடிக்க ஸ்பெயின் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தது. அடுத்த திங்களன்று ஸ்பெயின் அணி குரேஷியாவை கோபன்ஹேகனில் சந்திக்கிறது.

    ஸ்பெயின் அணிக்கு முதல் கோலை ஸ்லோவாக்கியா அணி போட்டுக் கொடுத்தது, அது சேம்சைடு கோல், பந்தை வெளியே தட்டிவிடும் முயற்சியில் ஸ்லோவாக்கியா கோல் கீப்பர் தன் கோலுக்குள்ளேயே பந்தைத் தட்டி விட்டார், இது ஸ்பெயினின் முதல் கோல்.

    பிறகு ஸ்பெயினின் கோல் மழைதான் இடைவேளையின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் லாப்போர்ட் 2வது கோலை அடிக்க 56வது நிமிடத்தில் பாப்லோ சராபியா, 67வது நிமிடத்தில் ஃபெரான் டாரஸ், மீண்டும் 71வது நிமிடத்தில் மீண்டுமொரு சேம்சைடு கோல் இதனால் 5 கோல்கள் என்று ஸ்பெயின் வென்றது. இறுதி 16க்குள் நுழைந்தது.

    இதற்கு முன்பாக 2 ஆட்டத்தை ட்ரா செய்த ஸ்பெயின் ஒரே கோலுடன் வெளியேறும் அபாயத்தில் இருந்தது. மேலும் தொடக்கத்திலேயே கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை ஸ்லோவாக்கியா கோல் கீப்பர் மார்ட்டின் துப்ராகுவா வலது புறம் பாய்ந்து சரியாகக் கணித்து வெளியே தள்ளி விட்டார். இது ஸ்பெயின் அணி தவற விடும் 5வது ஸ்பாட் கிக் ஆகும்.

    இப்படி அருமையான சேவ் செய்த மார்ட்டின் துப்ராகுவா சிறிது நேரம் சென்று ஸ்பெயின் வீரர் சராபியா ஷாட் ஒன்று கோல் போஸ்ட் மேல் பட்டு திரும்ப அதை மீண்டும் வெளியே தள்ளும் முயற்சியில் கோலுக்குள் தள்ளி விட்டார், ஸ்பெயின் 1-0 முன்னிலை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிறகு இடைவேளை ஸ்டாப்பேஜ் நேரத்தில் கார்னர் வாய்ப்பு ஒன்றை ஜெரார்ட் மொரினோ கிராஸ் செய்ய லாப்போர்ட் கோலாக மாற்றினார். 56வது நிமிடத்தில் ஜோர்டி ஆல்பா கிராஸை சராபியா கோலாக மாற்றினார். ஸ்பெயின் 3-0.

    பிறகு 67வது நிமிடத்தில் ஃபெரான் டாரஸ், மின்னல் வேக சராபியாவிடமிருந்து பெற்ற பாஸை பின் குதிகால் மூலம் கோலுக்குள் தள்ளினார் 4-0. பிறகு 5வது கோல் முதல் கோல் போலவே சேம்சைடு கோல் ஆனது. இந்த முறை தெரியாமல் தவறிழைத்தது ஸ்லோவாக்கியா வீரர் குக்கா, இப்படியாக 5-0 என்று ஸ்பெயின் வென்றது.

    மற்றொரு இதே பிரிவு ஆட்டத்தில் ஸ்வீடன் அணி போலந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி 16 சுற்றுக்கு முன்னேறியது.
    Published by:Muthukumar
    First published: