Euro 2020 | Spain vs Croatia: கால்பந்தாட்டத்தின் புதிய உச்சம்! - சேம்சைடு கோலிலிருந்து எழுச்சி பெற்ற ஸ்பெயின் 5-3 வெற்றி- கிலி ஏற்படுத்திய குரேஷியா போராடி வெளியேற்றம்

மகிழ்ச்சியில் ஸ்பெயின்.

கோபன்ஹேகனில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் நேற்று கால்பந்தாட்டத்தின் உச்சப்பட்ச திறன் வெளிப்பாடாக அமைந்த போட்டியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரேஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 • Share this:
  ஸ்பெயின் - சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதியில் சந்திக்கின்றன. ஸ்பெயின் தொடக்கத்தில் மிகப்பெரிய தவறு செய்து சேம்சைடு கோல் போட்டு குரேஷியாவுக்கு முன்னிலை அளித்தது. பெட்ரோ கொன்சாலேஸ் ஆஃப் லைனிலிருந்து தங்கள் கோல் கீப்பருக்கு பந்தை அடிக்க அங்கு ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமன் பந்தை டச் செய்து நிறுத்துகிறேன் பேர் வழி என்று முயல பந்து காலில் பட்டு ஸ்பெயின் கோலுக்குள் உருண்டு சென்றது. ஸ்பெயினுக்கு அதிர்ச்சி, குரேஷியாவுக்கோ 1-0 முன்னிலை சந்தோஷ அதிர்ச்சி.

  இப்படி ஒரு சேம்சைடு கோலின் இழப்பை ஈடுகட்டுமாறு கூடுதல் நேரத்தில் குரேஷியாவின் ஆந்த்ரே கிரமாரிச் கோல் நோக்கி அடித்த ஷாட்டை அபாரமாகத் தடுத்தார்.

  அதன் பிறகு குரேஷியாவின் ஆட்டத்தில் புதிய பொலிவு கூடியது ஸ்பெயின் கோல் அருகே சென்று மோதியது. ஆனால் 2வது கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை, மாறாக 38வது நிமிடத்தில் பாப்லோ சபாரியா என்ற ஸ்பெயின் வீரர் ரீபவுண்டாகி வந்த பந்தை அபாரமாக கோலாக மாற்ற ஸ்பெயின் முதல் கோலை அடித்து சமன் செய்தது.

  Also Read: Euro 2020 France vs Switzerland: உலக சாம்பியன் பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி; தடுக்கப்பட்ட மபாப்பேயின் ஷாட்- பெனால்டி ஷூட் அவுட்டில் சுவிட்சர்லாந்து வெற்றி  இடைவேளைக்குப் பிறகு ஸ்பெயின் வீரர் சீசர் 57வது நிமிடத்திலும் ஃபெரன் டாரஸ் 77வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க ஸ்பெயின் 3-1 என்று முன்னிலை பெற்றது.

  ஆனால் ஆட்டம் முடிய 5 நிமிடங்களே இருந்த நிலையில் எதிர்பாராவிதமாக குரேஷியா ஒரு கோலை அடித்தது, அந்த அணியின் மிஸ்லாவ் ஆரிசிச் 2வது கோலை அடிக்க 90 நிமிடங்கள் சென்று ஸ்டாப்பேஜ் நேரத்தில் குரேஷிய வீரர் மரியோ பசாலிச் தலையால் முட்டி இன்னொரு கோலை அடிக்க ஆட்டம் 3-3 என்று சமன் ஆகி கூடுதல் நேர ஆட்டத்துக்கு சென்றது.

  ஆனால் கூடுதல் நேரத்தில் குரேஷியாவை ஒன்றுமில்லாமல் செய்தது ஸ்பெயின், அந்த அணியின் அல்வாரோ மொராட்டோவின் அபார கோல் 100வது நிமிடத்தில் அடித்த கோல் 4வது கோலாக, பிறகு 103வது நிமிடத்தில் ஸ்பெயினின் மிகேல் ஆயர்சபால் இன்னொரு கோலை அடித்து குரேஷியாவுக்கு ஆணி அறைந்தார். 5-3 என்று குரேஷியாவை நொறுக்கியது ஸ்பெயின்.

  மொத்தம் 35 ஷாட்கள் இந்த ஆட்டத்தில் கோலை நோக்கி அடிக்கப்பட்டன.

  யூரோ 2012-ல் கோப்பையை வென்ற பிறகு ஸ்பெயின் முதல் முறையாக அதன் பிறகு நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெறுகிறது. வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்துடன் காலிறுதியில் மோதுகிறது. இந்தப் போட்டி செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெறுகிறது. மாறாக குரேஷியா அணி யூரோ கோப்பைக் கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்றில் வெற்றி பெற அடுத்த தொடர் வரை காத்திருக்க வேண்டும்.

  ஸ்பெயின் வீரர் மொராட்டாவுக்கு கொலை மிரட்டலெல்லாம் விடுக்கப்பட்டது. ஸ்லோவாக்கியாவுக்கு எதிராக ஸ்பெயின் 5-0 என்று வென்ற போது தான் இந்த மிரட்டல் படலம் நடந்தது.

  ஆனால் நேற்று மொராட்டாவின் அந்த 4வது கோல் இல்லையெனில் ஸ்பெயின் கதி அதோகதிதான். டேனி ஆல்மோவின் கிராஸை மிக அருமையாக நிறுத்தி பிறகு அதிரடி ஷாட்டில் கோலாக மாற்றி ஸ்பெயின் முழுதையும் தன்னைப் பற்றியே பேச வைத்துள்ளார், அதற்கு முன்னதாக தன் நாட்டு ரசிகர்களாலேயே அவர் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரது குழந்தையையும் மனைவியையும் மிரட்டினர். இவர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக புகார் அளித்தார். இந்நிலையில் மொராட்டாவின் கோலினால் ஸ்பெயின் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

  இந்த ஆட்டம் கால்பந்தாட்டத்தின் புதிய உச்சம் என்றால் மிகையாகாது. பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து 3-3 டிரா, பிறகான பெனால்டி ஷூட் அவுட்டில் சுவிஸ் வென்றது ஆகிய 2 ஆட்டங்களுமே கால்ப்ந்தின் உச்சம் எனலாம்.
  Published by:Muthukumar
  First published: