Euro 2020 | யூரோ கோப்பை கால்பந்து: கோல் கீப்பர் தோளில் பட்டுச் சென்ற கோல்- போலந்துக்கு அதிர்ச்சியளித்த ஸ்லோவாகியா

வெற்றி கோலை அடித்த மகிழ்ச்சியில் ஸ்லோவாக்கியா வீரர் மிலன் ஸ்க்ரினியர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நேற்று இரவு 9:30 மணிக்கு நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்து குரூப் ஈ போட்டியில் ஸ்லோவாக்கியா அணி போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சியளித்தது.

  • Share this:
போலந்து அணியின் நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி இருந்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் மிலன் ஸ்க்ரினியர் அடித்த அபார கோல் கால்பந்தின் எந்த ஒரு மாஸ்டர் வீரரின் கோலுக்கும் ஈடு இணையானதே.

போலந்து அணி வீரருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டதும் போலந்தின் பின்னடைவுக்குக் காரணமாகும். கடைசியில் 93வது நிமிடத்தில் கூட நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கியின் உதவியுடன் பந்தை ஸ்லோவாக்கிய பாக்ஸ் வரை கொண்டு செல்லப்பட்டு கரோல் ஸ்விடெர்ஸ்கி இடது காலால் அடித்த ஷாட்டை ஸ்லோவாக்கிய கோல் கீப்பர் வெற்றிகரமாக முறியடித்தார்.

69வது நிமிடத்தில் ஸ்க்ரினியர் கோல் அடிப்பதற்கு 7 நிமிடங்கள் முன்னால்தான் போலந்து நடுக்கள வீரர் கிரிகார்ஸ் கிரைசோவிக் இரண்டாவது மஞ்சள் அட்டை காட்டப்பட்டு அதாவது ரெட் கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இது போலந்துக்கு பெரிய பின்னடைவாகப் போனது.

ஸ்லோவாக்கியாவின் அபார ஆட்டம், போலந்தின் செல்ஃப் கோல்:

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இடது புறம் ஸ்லோவாக்கியா வீரர் ராபர்ட் மேக் போலந்தின் இரண்டு தடுப்பாட்ட வீரர்களுக்கு போக்குக் காட்டினார், அவர்களைக் கடைந்து கடந்து பந்தை முன்னால் தள்ளி மின்னல் வேகத்தில் இவரும் முன்னால் ஓடி கோல் போக முடியாத கோணத்திலிருந்து ஷாட்டை அடித்தார். பந்து போஸ்ட்டில் பட்டுத் திரும்பியது, அதைத் தடுக்க கீழே பாய்ந்த போலந்து கோல் கீப்பர் செஸ்னியின் தோளில் பட்டு கோலுக்குள் சென்றது, ராபர்ட் மேக் கணக்கில் போக வேண்டிய ஸ்லோவாக்கிய கோல், கடைசியில் போலந்தின் ஓன் கோல், அல்லது செல்ஃப் கோல் கணக்கில் சென்றது, இது போலந்துக்கு அதிர்ச்சியளித்தது.

Also Read: Copa America 2021 : லியோனல் மெஸ்ஸியின் அபார ஃப்ரீ கிக் கோல், பெனால்டி தடுக்கப்பட்டும் அடித்த சிலியின் கோல்- அர்ஜெண்டீனா-சிலி ட்ரா

ஸ்லோவாக்கியா தொடர்ந்து போலந்துக்கு நெருக்கடி கொடுத்த வண்ணம் இருந்தது, அதுவும் 27வது நிமிடத்தில் அந்த அணியின் நடுக்கள வீரர் ஜுராஜ் குக்கா என்பவர் தூரத்திலிருந்து மேற்கொண்ட கோல் முயற்சி கோல் போஸ்ட்டின் மேல் கம்பியில் பட்டதும் போலந்துக்கு ஸ்லோவாக்கியா அணி சாதாரணமல்ல என்பதை உணர்த்தியிருக்கும்.

ரெட்கார்டு காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட போலந்து வீரர் கிரைச்சோவிக்தான் போலந்துக்கு முதல் அர்த்தமுள்ள கோல் வாய்ப்பை உருவாக்கினார். 25 மீட்டர் தூரத்திலிருந்து அவர் அடித்த ஷாட் கோல் பாருக்கு மேலே சென்றது. நட்சத்திர வீரர் லெவண்டோவ்ஸ்கி கோல் அடிக்கும் பாதைகளையும் அவருக்கு பந்து வரும் பாதைகளையும் ஸ்லோவாக்கியா அடைத்தனர். அவரும் 42வது நிமிடத்தில் ஸ்லோவாக்கிய பெனால்டி பகுதியில் கிடைத்த அருமையான கோல் வாய்ப்பை வெளியே அடித்து வீண் செய்தார்.

நடன அமைப்பு போல் அமைந்த போலந்தின் பாஸ்- சமன் செய்த கோல்

இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியவுடன் ஒரு நிமிடத்தில் அதாவது 46வது நிமிடத்தில் போலந்து ஒரு கோல் அடித்து சமன் செய்தது. லெவண்டோவ்ஸ்கி, மேத்யூஸ் கிளிச் இருவரும் பந்தை எடுத்துச் சென்ற போது இடது புற வீரர் மசியே ரைபஸை நடுக்களத்துக்கு விடுவித்தனர். ஸ்லோவாக்கியா கோல் அருகே சில அருமையான பாஸ்களுக்கு பிறகு, ஒரு நடன அமைப்பைப் போன்ற பாஸ்களுக்குப் பிறகு போலந்து வீரர் மிகப்பிரமாதமாக கோலாக மாற்றினார். 1-1 என்று சமன் ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலந்துக்கு நடுக்களத்தில் ஒரு ஸ்திரத்தன்மையை அளித்த கிரைச்சோவிக் 2வது மஞ்சள் அட்டை வாங்கி வெளியேறியது போலந்தின் ஆட்டத்தையே முடக்கியது.

ரெட் கார்டு வாங்கிய போலந்து வீரர் கிரைச்சோவிக்.


முதலில் ஸ்லோவாக்கியா வீரர் ஜேகப் ஹர்மடாவை பிடித்து இழுத்ததற்கு மஞ்சள் அட்டை வாங்கினார். பிறகு அதே வீரரை கீழே தள்ளியதற்காக 2வது மஞ்சள் அட்டை வாங்கி வெளியேறினார். நடுக்களத்தில் மேற்கொண்ட இத்தகைய விஷயத்தை நடுவர் பெரிது படுத்தியிருக்க வேண்டாம், எச்சரிக்கையுடன் விட்டிருக்கலாம், ஆனால் நடுவருக்கு மஞ்சள் அட்டை காட்டுவதற்கான அனைத்து உரிமையும் உண்டு.

Also Read:  Euro 2020: நடு மைதானத்திலிருந்து செக். வீரர் பாட்ரிக் ஷிக் அடித்த நம்ப முடியாத கோல்; வாய்ப்புகளை வீணடித்த ஸ்காட்லாந்து- செக்.குடியரசு அபார வெற்றி

கிரைச்சோவிக் இல்லாமல் 10 வீரர்களுக்கு குறுக்கப்பட்டதையடுத்து போலந்தின் இடைவெளியை ஸ்லோவாக்கியா நன்றாகப் பயன்படுத்தியது. ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது, அதை பிரமாதமாக பாக்ஸுக்குள் அடிக்க அங்கு மிலன் ஸ்க்ரினியர் 14 அடியிலிருந்து தாழ்வான ஷாட் மூலம் கோலாக மாற்றினார். 2-1 என்று ஸ்லோவாக்கியா வெற்றி பெற்று போலந்துக்கு அதிர்ச்சியளித்தது.
Published by:Muthukumar
First published: