Euro 2020: நடு மைதானத்திலிருந்து செக். வீரர் பாட்ரிக் ஷிக் அடித்த நம்ப முடியாத கோல்; வாய்ப்புகளை வீணடித்த ஸ்காட்லாந்து- செக்.குடியரசு அபார வெற்றி

இரண்டு அற்புத கோல்களை அடித்த வெற்றி வீரர் செக். குடியரசின் பாட்ரிக் ஷெக்.

ஹாம்ப்டன் பார்க்கில் நடைபெற்ற யூரோ 2020 கோப்பை கால்பந்து டி பிரிவு ஆட்டத்தில் செக். குடியரசு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

  • Share this:
ஸ்காட்லாந்து ஏகப்பட்ட வாய்ப்புகளை கோலாக மாற்றாமல் வீணடித்தது. சில வாய்ப்புகளை செக்.குடியரசு கோல் கீப்பர் வாக்லிக் திகைப்பூட்டும் விதத்தில் தடுத்தார், சில தடுப்புகளெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத தடுப்புகள் என்றுதான் வர்ணிக்க வேண்டும்.

செக். குடியரசு அணிக்கு கேப்டன் விளாதிமிர் டாரிடா, ஸ்காட்லாந்து அணியின் கேப்டன் ஆண்டி ராபர்ட்சன்.

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் செக்.குடியரசு வீரர் பாட்ரிக் ஷிக் தலையால் முட்டி முதல் கோலை அடித்து முன்னிலை கொடுத்தார். இதே பாட்ரிக் ஷிக் அடித்த 2வது கோல் நம்ப முடியாத கோல், ஸ்காட்லாந்துக்கு அதிர்ச்சியூட்டிய கோல் என்றால் மிகையானதல்ல, அரைகிரவுண்ட் என்றால் கூட தொடக்கப்புள்ளி என்று கூறலாம் ஆனால் தங்கள் பகுதியிலிருந்து நேராக ஸ்காட்லாந்து கோலுக்குள் அடிப்பது என்றால் என்னவென்று கூறுவது. அங்கு ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்ஷல் தனித்து விடப்பட்டார் என்று கூறலாம் அல்லது ஸ்காட்லாந்து தடுப்பாட்ட வீரர்கள் ஒருவர் கூட இல்லை எனலாம், ஆனால் எவ்வளவு பேர் ஸ்காட்லாந்தைக் காப்பாற்ற அங்கிருந்தாலும் இந்த ஷாட்டை ஒன்றும் செய்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. அவ்வளவு பிரமாதமான துல்லியமான தாக்குதல் அடி.

ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்ஷல் தன் இடத்தில் இருந்திருக்கலாம் அவ்வளவு ஏன் அவர் முன்னால் வரவேண்டும் என்று கேட்கலாம், ஆனால் அவர் கோல் லைனில் நின்றிருந்தாலும் பந்தை அவர் கோலுக்குள் செல்வதை இடது மேல் மூலை வலையை பந்து மோதுவதை வேடிக்கைதான் பார்த்திருக்க முடியும் என்பதே மற்றொரு உண்மை. பாட்ரிக் ஷிக்கினுடைய ஷாட் அப்படிப்பட்ட ஷாட். இதுவரையிலான யூரோ கோப்பை 2021 தொடரின் ஆகச்சிறந்த அசாதாரண கோல் என்றே இதை வர்ணிக்க முடியும்.

முதல் கோல் விழுந்ததற்கான பின்னணி என்னவெனில் 40வது நிமிடத்தில் செக். குடியரசு வீரர் மாசோபஸ்ட், வலது புறம் கொஞ்சம் இடம் கிடைக்க பந்தை எடுத்துச் சென்ற போது கூப்பர் அதை வெளியே தள்ள கார்னர் வாய்ப்பு செக். அணிக்கு கிடைத்தது. ஆனால் செக். கேப்டன் டாரிடாவின் ஷாட் எந்த ஒரு இலக்குமில்லாமல் வீரர்களைத் தாண்டி சென்றது. ஆனால் க்ரால் பந்தை மீட்டெடுத்த போது இன்னொரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஜாங்க்டோ ஸ்காட்லாந்து வீரர் மெக்டோமினேவிடமிருந்து பந்தை வென்றார், இடது புறத்திலிருந்து இவர் அடிக்க ஹான்லி வெளியே அடித்தார். ஆனால் அங்கு செக். குடியரசு வீரர் டாரிடாவை கவர் செய்ய ஆளில்லை தனியாகத்தான் இருந்தார் அவர் வலது புறம் பந்தை தட்டி விட அங்கு செக். வீரர் கூஃபால் பந்தை கோல் அருகே கூட்டமாக வீரர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு தூக்கி விட்டார். மேலெழும்பி வந்த பந்துக்காக ஸ்காட்லாந்து வீரர் கூப்பரும் எம்பினார், செக்.குடியரசு வீரர் பாட்ரிக் ஷெக்கும் எம்பினார், ஆனால் பாட்ரிக் ஷெக் பந்தை தலையால் முட்டி கோலுக்குள் தள்ளினார் செக். குடியரசு 1-0 என்று முன்னிலை வகித்தது.

அசாதாரணமான இரண்டாம் கோல்:

பாட்ரிக் ஷிக்கின் அதியற்புத நடுமைதான ஷாட்டை தடுக்க முடியாத கோல் கீப்பர் மார்ஷல்.


இடைவேளைக்குப் பிறகு இரு அணிகளும் ஆக்ரோஷமாகத் தொடங்கின, தொடக்க நிமிடங்களிலேயே செக். குடியரசும் நெருக்கி 2 வாய்ப்புகளை பெற்றது, ஸ்காட்லாந்தும் எதிர்த்தாக்குதலில் செக். அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து 2 கோல் வாய்ப்புகளைப் பெற்று வீணடித்தது. 52வது நிமிடத்தில்தான் அந்த கோல் வந்தது.
அந்த மூவ் ஸ்காட்லாந்து மேற்கொண்டது இடது புறத்திலிருந்து ஸ்காட்லாந்து வீரர் ஒரு கிராஸ் செய்ய அது நேராக ஸ்காட்லாந்து வீரர் ஹென்றியிடம் வர அவர் பந்தை உதைக்க அருகிலிருக்கும் செக்.குடியரசு வீரர் காலில் பட்டு பந்து நேராக பாட்ரிக் ஷிக்கிடம் வந்தது, அவர் பந்தை வேகமாக நடுக்கோட்டைத் தாண்டி கொஞ்ச தூரம் எடுத்து வந்து பார்த்தார், ஸ்காட்லாந்து கோல் கீப்பர் ரொம்பவும் முன்னால் வர அங்கு ஸ்காட்லாந்து தடுப்பு வீரர்களும் இல்லாததால் நடுகிரவுண்டிலிருந்து அபாரமான ஒரு ஷாட்டை தூக்கி காற்றில் கோலை நோக்கி அடித்தார். பந்து அருமையாக வளைந்து வர கோல் கீப்பர் மார்ஷல் பந்தை பார்த்தபடியே பின்னால் ஓடி வந்தார், ஆனால் பந்து கோல் வலையின் இடது மேல் மூலையைத் தாக்கி கோல் ஆன போது ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்ஷல் கோலுக்குள் விழுந்து கிடந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏகப்பட்ட வாய்ப்புகளை கோட்டை விட்ட ஸ்காட்லாந்து:

ஸ்காட்லாந்து அணி படுவேகமாக ஆடினர், பயங்கரமாக ஓடினர், பந்தி செக். குடியரசு வீரர்களிடமிருந்து தங்கள் வசம் கொண்டு வந்தனர். ஆனாலும் 16வது நிமிடத்தில் செக்.குடியரசு வீரர் அடித்த ஷாட்டை ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்ஷல் அற்புதமாகத் தடுத்தார். ஸ்காட்லாந்து உடனே எதிர்த்தாக்குதல் நடத்தியது இடது புறத்திலிருந்து கேப்டன் ராபர்ட்சன் அடித்த கிராஸ் லிண்டன் டைக்ஸினால் கோலுக்கு வெளியேதான் அடிக்க முடிந்தது.

செக் குடியரசின் வேகம் தாங்க முடியாமல் ராபர்ட்சன் தன் ஸ்காட்லாந்து வீரர்களை ஆட்டத்தை மெதுவாக ஆடுமாறு செய்கை செய்தார். ஆனாலும் ஸ்காட்லாந்துக்கு இடைவேளைக்கு முன்பாக கோல் வாய்ப்பு கிடைத்தது. ரயான் கிரிஸ்டி ஒரு பந்தை ராபர்ட்ஸன் ஃப்ரீயாக இருக்க அடித்தார், ஆனால் அந்த வாய்ப்பை செக். குடியரசு கோல் கீப்பர் வாக்லிக் மேலே தட்டி விட்டார். இப்படியாக சிலதை கோல் கீப்பர் தடுத்தார், சில ஷாட்கள் ஸ்காட்லாந்துக்கு இலக்கு தவறின.

ஆனால் இடைவெளைக்கு சற்று முன்னர் செக். வீரர் ஜேன் போரில் நிச்சயமாக ஃபவுல் செய்தார், இதனால் ஸ்காட் மெக்டோமினே பெனால்டி கிக் கேட்டார், மறுக்கப்பட்டது, ஆனால் அது நிச்சயம் ஃபவுல்தான் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

2வது பாதி தொடங்கியவுடன் சே ஆடம்ஸ் என்ற இளம் வீரர் ஸ்காட்லந்து அணிக்காக களம் கண்டார். ஆனால் தொடங்கியவுடனேயே செக் குடியரசு ஆக்ரோஷமாக ஆடி இரண்டு ஷாட்களை கோல் நோக்கி அடிக்க அதனை ஸ்காட் கோல் கீப்பர் மார்ஷல் அபாரமாகத் தடுத்தார். ஸ்காட்லாந்தும் எதிர்த்தாக்குதல் தொடுத்து நெருக்கடி கொடுத்த போது ஹென்றி கோல் வாய்ப்பை தவற விட்டு கிராஸ்பாரில் பந்தை அடித்தார். 18 யார்டு கோல் முயற்சி வீண். செக்.குடியரசு வீரர் வாக்லிக் அதன் பிறகு 2 முக்கியமான ஷாட்களை அதாவது கோல்தான் என்ற ஷாட்களை தடுத்து ஸ்காட்லாந்துக்கு அதிர்ச்சியளித்தார்.

2வது கோலை நம்ப முடியாத விதத்தில் நடு கிரவுண்டிலிருந்து செக் வீரர் பாட்ரிக் ஷிக் அடிக்க, ஸ்காட்லாந்து ஆட்டத்தில் சொரத்து குறைந்ததோடு அதன் வீரர் டைக்ஸ் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.

கடைசியில் செக். குடியரசு 2-0 என்று அபார வெற்றி பெற்றது.
Published by:Muthukumar
First published: