• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மூக்கில் ரத்தம் கொட்ட பாட்ரிக் ஷிக் அடித்த கோல்; பெரிசிச்சின் மேஜிக் கோல்- முரட்டு ஆட்டத்தில் குரேஷியா-செக். குடியரசு ட்ரா

மூக்கில் ரத்தம் கொட்ட பாட்ரிக் ஷிக் அடித்த கோல்; பெரிசிச்சின் மேஜிக் கோல்- முரட்டு ஆட்டத்தில் குரேஷியா-செக். குடியரசு ட்ரா

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த பாட்ரிக் ஷிக். | யூரோ 2020

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த பாட்ரிக் ஷிக். | யூரோ 2020

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் குரூப் டி-யின் மற்றொரு ஆட்டத்தில் செக். குடியரசும், குரேஷியாவும் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தன, ஆனால் 4 புள்ளிகளுடன் செக். குடியரசு அணி இந்தப் பிரிவில் முதலிடம் வகித்து நாக் அவுட் சுற்று தகுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

  • Share this:
ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் செக். குடியரசு வீரர் பாட்ரிக் ஷிக் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது, வலது ஓரத்திலிருந்து செக். வீரர் கூஃபா அடித்த கிராஸை பாட்ரிக் ஷிக் கோலாக மாற்றத் தவறினார். அன்று ஸ்காட்லாந்துக்கு எதிராக பாட்ரிக் ஷிக் 2 கோல்களை அடித்தார், ஒன்று தலையால் முட்டியது, இன்னொன்று நடு மைதானத்திலிருந்து அடித்த நம்ப முடியாத அசாதாரண கோல்.

குரேஷியா அணியும் முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்ததால் கூடுதல் ஆக்ரோஷம் முரட்டுத்தனம் அதிகமிருந்தது.

குரேஷிய வீரரின் ஃபவுலுக்கு கொடுத்த சர்ச்சை பெனால்டி:

நேற்றும் பாட்ரிக் ஷிக் அற்புதமாக ஆடினார், அதனால் அவரை குரேஷிய வீரர் குறிவைத்து முரட்டுத் தனமாக ஆடினர். ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் குரேஷியாவின் கோல் பகுதியில் வலது புறம் மேலே வந்த பந்தைப் பெறுவதில் குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென், செக். வீரர் பாட்ரிக் ஷிக் இருவருமே எம்பினர். அப்போது குரேஷிய வீரர் தேஜன் லவ்ரென், பாட்ரிக் ஷிக்கின் மூக்கில் தன் முழங்கையை இறக்கினார். இதனால் பாட்ரிக் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது.

Also Read: Euro 2020 | யூரோ கோப்பை: இங்கிலாந்து சுத்த வேஸ்ட்- இரும்புக் கோட்டை அமைத்த ஸ்காட்லாந்து: 0-0 ட்ரா

இந்தத் தாக்குதலை குரேஷிய வீரர் வேண்டுமென்றே செய்தார் என்பதுதான் பாட்ரிக் ஷிக் வாதம். ஆனால் ரீப்ளேயில் லவ்ரென் எம்பி பந்தை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில் முஷ்டியை கொண்டு வந்ததாகவே தெரிந்தது. இன்னும் சொல்லப்போனால் அவரது முழங்கையின் மீது ஷிக் தான் தன் முகத்தைக் கொண்டு சென்று அடி வாங்கியது போல் தெரிந்தது.

ஆனால் ஷிக் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டும்போது ஸ்பானிய ரெஃப்ரி கார்லோஸ் டெல் செரோ என்ன செய்ய முடியும் தொலைகாட்சி ரீப்ளே முடிவை கேட்டார். உடனே ஸ்பாட் கிக், அதாவது பெனால்டி கிக்கை செக். குடியரசுக்குச் சாதகமாக்க்கினார்.

பெனால்டி கிக்கையும் ஷிக்தான் அடித்தார். மூக்கில் கொட்டிய ரத்தத்துடன் அவர் பெனால்டி ஷாட்டை இடது காலால் கோலுக்குள் திணித்தார். செக். அணி 1-0 என்று முன்னிலை பெற்றது.

உடனேயே குரேஷியா எதிர்த்தாக்குதல் முயற்சியில் பந்தை செக் குடியரசின் பகுதிக்குள் கொண்டு சென்றது. ஆனால் குரேஷிய வீரர் ஆண்டி ரெபிச்சின் முயற்சியை ஷிக் தான் தடுத்தார், இப்போது ஷிக்கின் மூக்கில் ரத்தத்தை அடைக்க பஞ்சு வைக்கப்பட்டிருந்தது.

இடைவேளையின் போது செக். குடியரசு அணி 1-0 என்று முன்னிலை வகித்தது.

குரேஷிய வீரர் பெரிசிச்சின் மேஜிக் கோல்:

இடைவேளைக்குப் பிறகு குரேஷியாவின் ஆட்டத்தில் புதிய ரத்தம் பாய்ந்தது. இடைவேளைக்கு முன்பாக பேயர் லெவர்கூசன் ஒரு அருமையான கோல் வாய்ப்பை தவறவிட்டதில் குரேஷியா கோச் கடுப்பானார்.

குரேஷிய வீரர் பெரிசிச் அடித்த சமன் கோல். | யூரோ 2020


ஆனால் இடைவேளைக்கு பிறகு 2 நிமிடங்களில் அதாவது 47வது நிமிடத்தில் குரேஷிய வீரர் பெரிசிச் இடது ஓரம் பந்தை எடுத்துக் கொண்டு வேகம் காட்டினார். பிறகு வலதுகாலால் வெட்டி உள்ளுக்குள் நுழைந்தார். அவரை குறிவைத்து தடுக்க நிறுத்தியிருந்த செக். வீரருக்குப் போக்குக் காட்டி அதிவேக ஷாட் ஒன்றை அடித்தார். டாப் கார்னரில் கோல் வலையில் பந்து கதறியது, உண்மையில் மேஜிக் கொல், பெரிசிச் அபார ஆட்டம். 1-1 என்று ஆட்டம் சமன் ஆனது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2 உலகக்கோப்பை தொடர் மற்றும் யூரோ 2016, இப்போது 2021 யூரோ கோப்பை என்று 4 பெரிய கால்பந்து தொடர்களில் கோல்களை அடித்து சாதனை புரிந்தார் குரேஷிய நட்சத்திர வீரர் பெரிசிச்.

அதன் பிறகு செக்.குடியரசுக்கு சிலபல கோல் வாய்ப்புகள் கிடைத்தன. கார்னர் கிக்கில் கிடைத்த பந்தை ஷிக் தலையால் முட்டி கோலாக்கியிருக்க வேண்டும் ஆனால் அவர் கோட்டை விட்டார். பதிலி செக். வீரர் ஆடம் லோசெக் கடைசியில் அடித்த ஷாட் வைடாகப் போனது.

குரேஷியா வீரர் நிகோலா விலாசிக் கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை கோல் போஸ்ட்டுக்கு மேலே அடித்து விரயம் செய்தார். ஆட்டம் 1-1 என்று ட்ரா ஆனது.

மூக்கில் ரத்தம் வர கோல் அடித்த ஷிக் தனது 3வது கோலை இந்த தொடரில் அடித்து முன்னிலையில் உள்ளார். ஷிக் தனது 12 சர்வதேச ஆட்டங்களில் 9 கோல்களை அடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: