Euro 2020 Ronaldo | தோல்விக்குப் பிறகு பெல்ஜியம் கோல் கீப்பரிடம் ரொனால்டோ சொன்னது என்ன?- வைரல் வீடியோ

ரொனால்டோ, பெல்ஜியம் கோல் கீப்பர்.

கடும் ஏமாற்றமடைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முன்னாள் ரியால் மேட்ரிட் அணி சகா, பெல்ஜியம் கோல் கீப்பர் திபோ கோர்ட்டுவாவிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்

  • Share this:
    யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான நாக் அவுட் சுற்றில் உலகின் நம்ப்ர் 1 அணியிடம் போர்ச்சுகல் கடுமையாகப் போராடியும் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறியது. தோற்றவுடன் தனது முன்னாள் ரியால் மேட்ரிட் அணி சகாவான பெல்ஜியம் கோல் கீப்பரிடம் போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொன்ன விஷயம் வைரல் வீடியோவாகியுள்ளது.

    வெறுப்படைந்த ரொனால்டோ தனது ஆர்ம் பட்டையைக் கழற்றி தரையில் அடித்தார்.

    Also Read: Euro 2020 Belgium vs Portugal: ரொனால்டோ கனவு தகர்ந்தது! ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகல் வெளியேற்றம்- காலிறுதியில் பெல்ஜியம்

    காலிறுதி வாய்ப்பு பெல்ஜியம் அணிக்குக் கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் ரொனால்டோ உலக சாதனை கோலையும் அடிக்கவில்லை, அணி தீவிர நெருக்கடி அளித்தும் பெல்ஜியம் எப்படியோ கோல் வாங்காமல் தப்பியது கிரேட் எஸ்கேப் தான்.

    காலிறுதியில் இத்தாலியை பெல்ஜியம் சந்திக்கிறது, இத்தாலியை ஜெயிப்பது மிகமிகக் கடினம்.

    நேற்றைய ஆட்டத்தில் 42வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் தோர்கான் ஹசார்ட் அடித்த கோல் போர்ச்சுகலை வெளியேற்றியது.



    இந்நிலையில் கடும் ஏமாற்றமடைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது முன்னாள் ரியால் மேட்ரிட் அணி சகா, பெல்ஜியம் கோல் கீப்பர் திபோ கோர்ட்டுவாவிடம் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

    இதனை யுயேஃபா யூரோ 2020 இணையதளம் தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அந்த வீடியோவில் ரொனால்டோ பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டுவாவிடம், “ அதிர்ஷ்டம் தானே! இன்று பந்து உள்ளே செல்ல விரும்பவில்லை, குட்லக் மேன்” என்று அவரை தழுவினார்.

    இத்தனைக்கும் பெல்ஜியத்தின் டாப் வீரர்களான ஈடன் ஹசார்ட், கெவின் டி புருய்ன் காயத்தினால் வெளியேறியிருந்தனர்.

    கோல் அடித்த தோர்கான் ஹசார்ட் என்பவர் ஈடன் ஹசார்டின் சகோதரர், அவர் கூறும்போது, “இந்த மாதிரிப் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் போது சொருகி விட வேண்டும். இன்று கோல் ஆனது அதிர்ஷ்டம்தான். இந்த கோல்தான் எங்களை காலிறுதிக்கு அழைத்துச் சென்றது என்பது என் கனவு கோல்” என்றார்
    Published by:Muthukumar
    First published: