Ronaldo | Euro 2020 | ரொனால்டோ அபாரம்; 109-வது கோலில் உலக சாதனை சமன் - பிரான்சுடன் த்ரில் ட்ரா - நாக் அவுட் சுற்றில் போர்ச்சுகல்

உலக சாதனை மன்னன் ரொனால்டோ. | யூரோ 2020 கால்பந்து

ரொனால்டோ உலக சாதனையை சமன் செய்தார். புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பைக் கால்பந்தின் முக்கிய ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் போர்ச்சுகல் 2-2 என்று ட்ரா செய்தது, போர்ச்சுகலின் 2 கோல்களையும் ரொனால்டோ அடித்தார், இதன் மூலம் போர்ச்சுகல் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

  • Share this:
    ஆட்டத்தின் 30 மற்றும் 60வது நிமிடங்களில் பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த 2 கோல்கள் ஆட்டத்தை சமன் செய்ததோடு ரொனால்டோ 109 கோல்களை அடித்து, ஈரானின் அலி டேயின் 109 சர்வதேச ஆட்ட கோல்கள் என்ற உலக சாதனையை சமன் செய்தார். போர்ச்சுகல் இறுதி-16 சுற்றில் உலகின் நம்பர் 1 பெல்ஜியத்தைச் சந்திக்கிறது.

    பிரான்ஸ் அணியிலும் மற்றொரு வெடரன் வீரர் கரீம் பென்சீமா 46வது நிமிடத்தில் பெனால்டி மூலம் ஒரு கோலையும் பிறகு 47வது நிமிடத்தில் இன்னொரு கோலையும் அடித்தார். இறுதி 16-ல் பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்தைச் சந்திக்கிறது. கரீம் பென்சீமா சர்வதேச கால்பந்துக்கு மீண்டும் வந்து அடிக்கும் 2 கோல்கள் ஆகும் இது.

    முதல் பாதியின் 27வது நிமிடத்தில் போர்ச்சுகலின் மௌட்டின்ஹோ ஒரு அருமையான ஃப்ரீ கிக்கை பிரான்ஸ் கோல் பகுதிக்குள் அடிக்க பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் தன் முஷ்டியை உயர்த்தி தடுக்க எத்தனித்த போது போர்ச்சுகலின் டேனிலோ தாடை பெயர்ந்தது. உடனேயே ரெஃப்ரி லோரிஸுக்கு மஞ்சள் அட்டைக் காட்டினார், லோரிஸ் எதிர்த்தார். ஆனால் அவர் தடுப்பு அபாயகரமானதாகவே தெரிந்தது இவையெல்லாம் பெனால்டி பகுதிக்குள் நடந்ததால் பெனால்டி கிக் சாதகம் போர்ச்சுக்கலுக்குக் கிடைத்தது. ரொனால்டோ இதனை முறையாக கோலாக மாற்ற 7 ஆட்டங்களில் பிரான்சுக்கு எதிராக தன் முதல் கோலை அடித்தார். போர்ச்சுகல் 1-0 என்று முன்னிலை வகித்தது.

    Also Read: Euro 2020 | ஜெர்மனியின் அடிவயிற்றைக் கலக்கிய ஹங்கேரி: 2-2 டிராவில் 84வது நிமிட கோலினால் நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி

    யூரோ கோப்பையில் 20வது கோலாகும் அது ரொனால்டோவுக்கு. இது இன்னொரு சாதனை. இதனையடுத்து பிரான்சின் கட்டுக்கோப்பு குலைந்தது லூகாச் ஹெர்னாண்டஸ், கிரேஸ்மேன் உடனேயே ஃபவுலுக்காக புக் செய்யப்பட்டனர். கைலியன் மபாப்பேதான் மீண்டும் அபாரமாக ஆடினார். இவரது கோல் முயற்சியை போர்ச்சுகல் கோல் கீப்பர் பாட்ரிசியோ தள்ளி விட்டு சேவ் செய்தார்

    பிரான்ஸின் சமன் கோலுக்கும் மபாப்பெதான் காரணம். போக்பா கோல் அடிக்கும் நிலையில் உள்ளே இருக்கிறார் என்பதை அறிந்த மபாப்பே ஆட்டத்தை தொடர போர்ச்சுகலின் செல்சன் செமெடோ தோள்பட்டையினால் இடித்து ஃபவுல் செய்ய வி.ஏ.ஆர். ரிவியூவில் பிரான்ஸுக்கு சாதகமாக பெனால்டி வழங்கப்பட்டது, போர்ச்சுகலுக்கு கடும் அதிர்ச்சி. ஏனெனில் அது ஒரு சின்ன டச்தான். ஸ்பாட் கிக்கை பிரான்ஸ் நட்சத்திரம் பென்சீமா கோலாக மாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2 நிமிடங்கள் கழித்து இடைவேளைக்குப் பிறகு 47வது நிமிடத்தில் போர்ச்சுகல் பாதுகாப்பு அரணை போக்பா உடைக்க பென்சீமா அதை கோலாக மாற்றினார் பிரான்ஸ் 2-1 என்று முன்னிலை.

    அங்கு இதே நேரத்தில் ஹங்கேரி வென்றிருந்தால் போர்ச்சுகல் வெளியேறியிருக்கும். ஆனால்3வது பெனால்டி கிக் வாய்ப்பு போர்ச்சுகலின் வரப்பிரசாதமாக அமைந்தது. கோலுக்கு அருகில் ரொனால்டோ ஒரு கிராஸ் ஷாட்டை மேற்கொள்ள ஜூல்ஸ் கூண்டே பந்தைத் தடுக்கும் முயற்சியில் கையில் வாங்கினார். அவ்வளவுதான் பெனால்டி. ரொனால்டோ மீண்டும் அருமையாக அதை கோலுக்குள் திணிக்க ஆட்டம் சமன். பிழைத்தது போர்ச்சுகல்.
    Published by:Muthukumar
    First published: