Euro 2020 | யூரோ கோப்பை: துருக்கிக்கு இரண்டாம் தோல்வி- ரேம்சே, ராபர்ட்ஸ் கோல்களில் வேல்ஸ் வெற்றி

வேல்ஸ் கேப்டன் காரெத் பேல் மற்றும் அணியினர்.

யூரோ கோப்பை 2021 கால்பந்து தொடரின் ஏ பிரிவு ஆட்டத்தில் வேல்ஸ் அணியின் ரேம்சே, ராபர்ட்ஸ் ஆகியோரது கோல்களினால் துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வேல்ஸ்

  • Share this:
    2016 யூரோ கோப்பைக் கால்பந்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வேல்ஸ், இந்த முறையும் இந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது.

    நடுக்கள வீரர் ஏரோன் ரேம்சே ஆரம்பத்தில் 2 கோல் வாய்ப்புகளை நழுவ விட்டார், ஆனால் இடைவேளைக்குச் சற்று முன் கேப்டன் காரெத் பேல் அடித்த ஷாட்டை நெஞ்சினால் தடுத்து கோலாக மாற்றினார்.

    ஆட்டத்தின் 60வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் பேல் பந்தை வேகமாகக் கொண்டு சென்ற போது பெனால்டி பகுதிக்குள் துருக்கி வீரர் கீழே தள்ள பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. இதை ஷாட் ஆடும்போது அவர் தடுமாற்றமான ஒரு ரன் அப்பில் கோலாக மாற்றத் தவறினார்.

    Also Read: Euro 2020 | யூரோ கோப்பை: லோக்கடெல்லியின் 2 அற்புத கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இத்தாலி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி

    ஆட்டம் முடியும் தறுவாயில் கார்னர் கிக் வாய்ப்பை கான்னர் ராபர்ட்ஸ் கோலாக மாற்றினார். வேல்ஸ் அணி 2-0 என்று வென்றது. பாக்கூ ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் துருக்கி ஆதரவாளர்கள் ஏராளம், அவர்களுக்கு துருக்கியின் ஆட்டம் கடும் ஏமாற்றமளித்திருக்கும்.

    அடுத்த போட்டியில் இந்த ஏ பிரிவின் ஆதிக்க அணி, கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தாலியை சந்திக்கிறது வேல்ஸ். 2 தோல்விகளைச் சந்தித்த துருக்கி அடுத்ததாக சுவிட்சர்லாந்து அணியை சந்திக்கிறது. யூரோ கோப்பை கால்பந்தில் அதிக வின்னிங் சதவீதம் வைத்துள்ளது வேல்ஸ், யூரோ கோப்பையில் 8-ல் ஆட் 5ல் வென்றுள்ளது வேல்ஸ்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆட்ட நாயகனான வேல்ஸ் அணியின் காரெத் பேல் பிரமாதமாக ஆடுகிறார். தடுப்பணையை உடைக்கும் இவரது பாஸ்கள் அபாரம். 6வது நிமிடத்தில் துருக்கியின் சிறந்த கோல் கீப்பர் சகீர், வேல்ஸ் முயற்சியை முறியடித்தார். 24வது நிமிடத்தில் பேல் கொடுத்த பாஸை ரேம்ஸே கோலுக்கு மேலே அடித்தார். பிறகு 42வது நிமிடத்தில் தான் ரேம்ஸே கோல் அடித்தார்.

    துருக்கி அதிபர் எர்டோகன் ஸ்டேடியத்தில் இருந்தார் அவர் முன்னிலையில் தோற்கக் கூடாது என்று இடைவேளைக்குப் பிறகு துருக்கி உத்வேகம் காட்டியது. கேப்டன் புராக் இல்மாஸ் என்பவர் முதல் பாதியில் நல்ல கோல் வாய்ப்பை கோட்டை விட்டார். இடைவேளைக்குப்பிறகு 10 நிமிடங்களில் புராக் இல்மாஸ் கவர் செய்ய ஆளில்லாமல் தனியே இருந்த போது வந்த பந்தை கோலாக மாற்றாமல் கோல்போஸ்ட்டுக்கு மேலே அடித்து வீணடித்தார்.

    துருக்கியை விட வேல்ஸ் அணி நன்றாக ஆடியது கேப்டன் பேல் அற்புதமான ஓர் ‘அணி வீரராக’ திகழ்கிறார்.
    Published by:Muthukumar
    First published: