யூரோ 2020 கால்பந்து தொடரின் கோல்டன் பூட் என்ற தங்கக் காலணி விருதை போர்ச்சுகல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார்.
ரொனால்டோ மொத்தம் 5 கோல்கள் அடித்து முன்னிலை வகித்தார். யூரோ சாம்பியன்ஷிப்பில் முதன் முதலாக ரொனால்டோ கோல்டன் பூட் விருது பெறுகிறார்.
இத்தாலிக்கு எதிராக இங்கிலாந்து பெனால்டியில் தோற்க இத்தாலி ஐரோப்பிய சாம்பியன் ஆனது.
Also Read: யூரோ 2020 சாம்பியன் இத்தாலி: இங்கிலாந்து கனவு தகர்ந்தது- பெனால்ட்டியில் இத்தாலி அபார வெற்றி
யூரோ 2020 தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் ரொனால்டோ கோல் அடித்தார். ஹங்கேரி, பிரான்ஸுக்கு எதிராக தலா 2 கோல்களை அடித்தார். ஆனால் இறுதி 16 நாக் அவுட் சுற்றில் பெல்ஜியத்துக்கு எதிரான 0-1 தோல்வியில் ரொனால்டோ கோல் அடிக்காமல் ஏமாற்றினார்.
இங்கிலாந்தின் ஹாரி கேன் 4 கோல்கள் அடித்திருந்தார் இத்தாலிக்கு எதிரான இறுதியில் ஒரு கோல் அடித்திருந்தால் கேன் கோல்டன் பூட் விருதைத் தட்டிச் சென்றிருப்பார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதே போல் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வகையில் 14 கோல்களுடன் 109 கோல்களை அடித்து ஈரான் வீரர் அலி டேயின் சாதனையை சமன் செய்தார் ரொனால்டோ.
யூரோ 2020 தொடரின் டாப் கோல் ஸ்கோரர்கள்:
கிறிஸ்டியானோ ரொனால்டோ - 5 கோல்கள் - 1 அசிஸ்ட்
செக்கோஸ்லாவாகியா பாட்ரிக் ஷிக்- 5 கோல்கள் -அசிஸ்ட் இல்லை.
பிரான்சின் கரீம் பென்சீமா, ஸ்வீடனின் எமில் ஃபோர்ஸ்பெர்க், பெல்ஜியத்தின் ரொமிலு லுகாகு ஆகியோர் தலா 4 கோல்கள் அடித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.