யூரோ 2020: மைதானத்திற்குள் பாராசூட் மூலம் குதித்த சுற்றுச்சூழல் ஆர்வலரால் பதற்றம்- பலர் காயம்

மைதானத்துக்குள் குதித்த பாராசூட் ஆர்ப்பாட்டக்காரர். யூரோ 2020 கால்பந்து

யூரோ 2020 கால்பந்து தொடரில் பிரான்ஸ்-ஜெர்மனி ஆட்டத்தின் போது மைதானத்துக்குள் கிரீன்பீஸ் சுற்றுச்சூழல் இயக்கத்தைச் சார்ந்த நபர் ஒருவர் பாராசூட்டின் மூலம் மைதானத்துக்குள் பறந்தார். இதனால் ரசிகர்கள் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஐரோப்பியக் கால்பந்து கூட்டமைப்பான யுஏஃபா தெரிவித்துள்ளது.

 • Share this:
  நேற்று மியூனிக்கில் பிரிவு எஃப் போட்டியான பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டி பரபரப்பாக நடந்தது. அப்போது கிரீன்பீஸ் சூழலீய செயல்பாட்டாளர் ஒருவர் “Kick out oil Greenpeace” என்ற வாசகத்துடன் மைதானத்தில் பாராசூட்டில் இங்கும் அங்கும் பறந்தார்.

  களத்தில் அவர் பாராசூட் மூலம் குதித்தார், அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

  “யூரோ 2020 பிரான்ஸ்-ஜெர்மனி ஆட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பாக, ஒரு ஆர்பாட்டக்காரர் பாராசூட் மூலம் மைதானத்திற்குள் நுழைந்தார். இவர் பிறகு தரையிறங்கினார்” என்று ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  அவர் மைதானத்தின் மேல் பறந்தத போது ஓவர்ஹெட் கேமரா ஒயரில் பாராசூட் சிக்கியதால் ஸ்டாண்டில் ரசிகர்கள் மீது பாகங்கள் சில உதிர்ந்து விழுந்தன பிரான்ஸ் பயிற்சியாலர் டீஷாம்ப் பாராசூட் வந்தவுடன் குனிந்து கொண்டார்.

  இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.

  மிகவும் மோசமான, அபாயகரமான, அலட்சியமான இவரது நடத்தையால் ரசிகர்கள் சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று யுஏஃபா கூறியுள்ளது. பாராசூட் ஒயரில் சிக்கியதால் பாராசூட் தாரருக்கு கட்டுப்பாடு போய்விட்டது, ரசிகர்களின் தலைக்கு வெகு அருகில் ஸ்டாண்ட்ஸில் பாராசூட் பறந்தது.

  Also Read: Euro 2020 Germany vs France: சாம்பியன்களின் பரபரப்பான ஆட்டம் : ஜெர்மனி தன் கோலுக்குள்ளேயே அடித்த ஓன் கோலால் பிரான்ஸ் 1-0 வெற்றி

  ஏன் இந்த போட்டியில் கிரீன்பீஸ் ஆர்ப்பாட்டக்காரர் பாராசூட்டை உள்ளே விட்டார் என்றால், இந்தத் தொடரின் ஸ்பான்சர்களில் ஒருவர் ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான கேஸ்புரோம் ஆகும். இந்த நிறுவனம் ஏற்கெனவே கிரீன்பீஸ் இயக்க எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை தயாரிக்கும் வோல்க்ஸ்வேஜன் நிறுவனத்துக்கு எதிராகவும் இந்த பாராசூட் போராட்டக்காரர் மைதானத்தில் நுழைந்ததாக கிரீன்பீஸ் இயக்கத்தின் ஜெர்மன் டிவிட்டர் கணக்கு கூறுகிறது.

  மேட்ஸ் ஹம்மெல்சில் ஓன் கோலால் ஜெர்மனி தோற்றது பிரான்ஸ் 1-0 என்று வென்றது.
  Published by:Muthukumar
  First published: