Euro 2020: ஆஸ்திரியாவை வீழ்த்தி 13 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ நாக்-அவுட் சுற்றில் நெதர்லாந்து

அடுத்த சுற்றில் நெதர்லாந்து. யூரோ 2020

ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரியா அணியை 2-0 என்று வீழ்த்திய நெதர்லாந்து அணி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பை இறுதி-16 நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  • Share this:
    ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெனால்டி கிக் வாய்ப்பை மெம்பிஸ் டீபே கோலாக மாற்றினார், பிறகு 67வது நிமிடத்தில் டெம்செல் டம்பிரைஸ் 2வது கோலை அடிக்க ஆஸ்திரியா அணியை நெதர்லாந்து 2-0 என்று வென்றது.

    ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து கேப்டன் அல்பா, டெம்செல் டம்பிரைஸை ஃபவுல் செய்தார். இதனையடுத்து பெனால்டி கிக் வாய்ப்பு நெதர்லாந்துக்கு அளிக்கப்பட்டது. ஸ்பாட் கிக்கை துல்லியமாக கோலாக மாற்றினார் மெம்பிஸ் டீபே. இஸ்ரேல் ரெஃப்ரி வீடியோ ரெஃபரல் பயன்படுத்திதான் ஃபவுல் முடிவுக்கு வந்து பெனால்டி அளித்தார்.

    தொடக்கப் போட்டியில் உக்ரைன் அச்சுறுத்தலை 3-2 என்று முறியடித்த நெதர்லாந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு யூரோ கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

    திங்களன்று நார்த் மேசிடோனியாவுக்கு எதிராக நெதர்லாந்து ஆடுகிறது. நெதர்லாந்து அணி மற்ற அணிகளைப் போல் அல்லாமல் 3 தடுப்பு வீரர்கள் 5 நடுக்கள வீரர்கள் 2 முன் கள வீரர்கள் என்ற உத்தியைக் கடைப்பிடிக்கிறது.

    ஆஸ்திரியா அணி கவனமற்று ஆடியது, கேப்டன் ஆல்பாவே ஃபவுல் செய்ததால்தான் பெனால்டி வாய்ப்பு நெதர்லாந்துக்கு கிடைத்தது. நார்த் மேசிடோனியாவுக்கு எதிராக ஆஸ்திரியா ஆடும்போது எதிரணி வீரரை இன்சல்ட் செய்த மார்கோ அர்னாடோவிச் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவர் இல்லாதது ஆஸ்திரியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. உக்ரைன் அணிக்கு எதிராக இன்னும் ஒரு போட்டி ஆஸ்திரியாவுக்கு இருப்பதால் இறுதி 16 வாய்ப்பு ஆஸ்திரியாவுக்கும் இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் பிரிவில் 2ம் இடம் வரும் அணி குரூப் ஏ வின்னர்களான ஒன்று வேல்ஸ் அல்லது இத்தாலியை லண்டனில் ஜூன் 26ம் தேதி அன்று சந்திக்கும்.

    இடைவேளைக்கு சற்று முன்னர் டீபே, அருமையான கோல் வாய்ப்பை தவறவிட்டார். ஆஸ்திரியா அணியிலும் லெஃப்ட் விங்கில் ஆண்ட்ரியாஸ் உல்மர், நடுக்களத்தில் சேவர் சால்ஜர் நெதர்லாந்துக்கு பிரச்னைகளைக் கொடுத்தனர்.

    முடியும் தறுவாயில் ஆஸ்திரியா கேப்டன் அலபா கோல் அடிக்க முயற்சி செய்தார், அது பயனளிக்கவில்லை. உக்ரைனுடனான ஆஸ்திரியாவின் போட்டி நாக் அவுட் போட்டி போல் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published: