Euro 2020 Belgium vs Russia: லுகாகு அபார ஆட்டம்; ரஷ்யாவை நொறுக்கிய நம்பர் 1 ரெட் ’டெவில்ஸ்’ பெல்ஜியம்

ரெட் டெவில்ஸ் பெல்ஜியம்

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மைதானத்தில், சொந்த மண்ணில் ரஷ்யா அணி யூரோ கால்பந்து தொடரின் தங்கள் முதல் போட்டியில் பெல்ஜியம் அணியிடம் செம உதை வாங்கியது.

  • Share this:
    பெல்ஜியம் அணியின் நட்சத்திர வீரர் லுகாகு அபாரமாக ஆட ரஷ்யாவை 3-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது.

    லுகாகு 2 கோல்களை அடிக்க தாமஸ் மியூனியர் இன்னொரு கோலை அடித்தார். ஃபிபா ரேங்கிங்கில் டாப் அணியாக உள்ள பெல்ஜியம் 10 நிமிடத்திலேயே லுகாகு கோல் மூலம் 1-0 என்று முன்னிலை படைத்தது.

    பெல்ஜியம் நட்சத்திரம் ரொமிலு லுகாகு.


    பிரிவு பி போட்டியான இதில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கம் முழுதும் வெளிப்பட்டது. இத்தனைக்கும் நட்சத்திர வீரர் கெவின் டி புருய்ன் காயத்தினால் விளையாடவில்லை. ரெட் டெவில்ஸ் என்று அழைக்கப்படும் பெல்ஜியம் அணி கடைசி 9 போட்டிகளில் தோல்வியடையாமல் யூரோ கோப்பைக்கு வந்துள்ளது, மிகவும் கடினமான அணி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆட்டம் தொடங்கி 10வது நிமிடத்திலேயே இறுக்கத்தை உடைத்தார் பெல்ஜியம் நட்சத்திரம் ரொமிலு லுகாகு, ரஷ்யாவின் ஆண்ட்ரீ செமெனோவ் பெனால்டி பகுதியில் தவறிழைக்க அதைப் பயன்படுத்திய லுகாகு முதல் கோலை அடித்தார். பிறகு பதிலி வீரர் தாமஸ் மெயூனியர் 2வது கோலை அடித்து பெல்ஜியம் அணிக்கு 2-0 என்று முன்னிலை கொடுத்தார்.

    Also Read: Euro 2020 Christian Eriksen: மயங்கி விழுந்து பேச்சு மூச்சின்றிப் போன டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் : சிகிச்சையில் உயிர் பிழைத்தார்

    இரண்டாவது பாதியில் ரஷ்யா எழும்பும் என்று பார்த்தால் உயிரோட்டம் இல்லாமல்தான் ஆடினர். ஆட்டம் நெருங்கும் போது தாமஸ் மெயூனியரும் ரொமிலு லுகாக்கும் கைகோர்த்தனர். கும்பலாக இருந்த ரஷ்ய தடுப்பணையை மெயூனியர் அபாரமாக உடைத்து நம்ப முடியாத ஒரு பாஸை செய்ய லுகாகு கோலாக மாற்றி தன் 2வது கோலை அடித்தார்.

    Also Read: Euro 2020: எரிக்சன் உடல்நிலை கவலையால் தோற்ற டென்மார்க்: பின்லாந்து வரலாற்று வெற்றி

    3-0 என்ற பெல்ஜியம் வெற்றி ரஷ்ய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. லுகாகு 2 கோல்கள் மூலம் நாட்டுக்காக 62 கோல்களை அடித்தவரானார்.

    பிரிவு பி-யில் பெல்ஜியம் தற்போது முதலிடம் வகிக்கிறது. பின்லாந்து 2ம் இடம் பிடித்துள்ளது.
    Published by:Muthukumar
    First published: