Euro 2020 | யூரோ கோப்பை: லோக்கடெல்லியின் 2 அற்புத கோல்கள்: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி இத்தாலி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி

இத்தாலி அணி - யூரோ கோப்பை 2021

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் பிரிவு ஏ ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியை இத்தாலி 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரிவு ஏ-ல் 6 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுறுக்குத் தகுதி பெற்றுள்ளது.

  • Share this:
    இதே பிரிவில் வேல்ஸ் 4 புள்ளிகளுடனும் சுவிட்சர்லாந்து 1புள்ளியுடனும் துருக்கி புள்ளிகள் எதையும் பெறாமலும் உள்ளன.

    மேனுவல் லோக்கடெல்லியின் 2 அற்புத கோல்கள் இத்தாலி வெற்றியில் பெரிய பங்களிப்பு செய்தது.

    வலது புறத்தில், அதாவது ரைட் விங்கில் டோமினிகோ பெரார்டி மற்றும் சசூலோ ஆகியோரது பிரமாதமாக பந்தை விறுவிறுவென எடுத்து வர இந்த மூவைத் தொடங்கிய லோக்கடெல்லியே பினிஷுங்கும் செய்தார் சுவிஸ் கோல் அருகேயிருந்து கோலாக மாற்றினார் இத்தாலி 1-0 என்று முன்னிலை வகித்தது.

    இடைவேளைக்குப் பிறகு சற்று நேரத்திலேயே மீண்டும் லோக்கடெல்லி சுவிட்சர்லாந்து அணியின் பாக்சுக்கு ஓரத்திலிருந்து அடித்த கோல் வலையின் வலது மூலையில் கதறியது. அதன் பிற்பாடு மீண்டும் இத்தாலி வீரர் சிரோ இம்மொபைல் அடித்த கோல் இத்தாலி அணிக்கு 3-0 என்ற வெற்றியைப் பரிசாக அளித்தது. இதுவரை இந்தத் தொடரில் இத்தாலி 2வது வெற்றியை அடுத்தடுத்து பெற்றது. 31 கோல்களை அடித்த இத்தாலி ஒரு கோலைக் கூட சமீபத்தில் வாங்கவில்லை என்பது அந்த அணியின் ஆதிக்கத்தை நிரூபிக்கிறது.

    Also Read: பாக் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவை களத்தில் கடுப்பேற்றிய அஃப்ரிடி! - வைரலாகும் வீடியோ!

    சுவிட்சர்லாந்தை எழும்ப விடாமல் அடித்த இத்தாலி தன் சொந்த மண்ணின் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதத்தில் ஆடியது, அதுவும் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக 3-0 என்று வென்றுள்ளது. இதுவரை இப்படி இத்தாலி வென்றதில்லை.

    இத்தாலி கேப்டன் ஜார்ஜியோ சிலெனி ஒரு கோல் அடித்திருப்பார், ஆனால் இரண்டு தடுப்பாட்ட வீரர்களுக்குப் போக்குக் காட்டி பந்தை கடைந்து எடுத்துச் சென்று இவர் அடித்த ஷாட்டை நடுவர் கையில் பட்டதாகக் கூறி கோலை மறுத்தார். பிறகு சிலெனி காயத்தினால் வெளியேறினார்.

    அதன் பிறகுதான் லோக்கடெல்லி அருமையான ஒரு மூவைத் தொடங்கி வைக்க, 26வது நிமிடத்தில் பெரார்டி வலதுபுறத்திலிருந்து உள்நுழைந்தார். இதைத்தான் லோக்கடெல்லி கோலாக மாற்றினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இடைவேளைக்குப் பிறகு ஒரு கோல் போட்டு சமன் செய்ய சுவிட்சர்லாந்து படாதபாடு பட்டது. ஆனால் எதிர்த்தாக்குதலில் இத்தாலியின் லோக்கடெல்லிதான் இன்னொரு கோலை அடித்தார்.

    64வது நிமிடத்தில் சுவிஸ் அணி ஒரு கோல் அடித்திருக்கும், ஆனால் சுவிஸ் வீரர் ஸ்டீவன் சூபர் அடித்த இரண்டு ஷாட் முயற்சிகளையும் இத்தால் கோல் கீப்பர் கியான்லுகி டோனரமா தடுத்து விட்டார். இத்தாலியின் சிரோ இம்மொபைல் இருமுறையும் கோலை நோக்கி அடித்த ஷாட்கள் வைடாகச் சென்றது. ஆனால் 89வது நிமிடத்தில் சிரோ இம்மொபைலைத் தடுக்க முடியாவில்லை. 20 அடியிலிருந்து பிரமாத ஷாட்டில் இத்தாலியின் 3வது கோலை அடித்தார்.

    இதன் மூலம் இத்தாலிக்கு எதிராக கடைசி 9 போட்டிகளில் சுவிட்சர்லாந்து ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: