Euro 2020 | யூரோ 2020 : அபார கோல் கீப்பர்: இத்தாலியின் டோனரூமா தொடர் நாயகன்

இத்தாலி கோல் கீப்பர் டோனரூமா யூரோ 2020 தொடர் நாயகன்.

ஐரோப்பிய சாம்பியன் இத்தாலியின் ஜெயண்ட் கோல் கீப்பர் கியான்லுகி டோனரூமா யூரோ 2020 கால்பந்து தொடரின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

  • Share this:
    ஐரோப்பிய சாம்பியன் இத்தாலியின் ஜெயண்ட் கோல் கீப்பர் கியான்லுகி டோனரூமா யூரோ 2020 கால்பந்து தொடரின் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டு தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் வெம்பிலியில் இங்கிலாந்தை பெனால்டி ஷூட் அவுட்டில் 3-2 என்று இத்தாலி வீழ்த்தி கோப்பையை வென்றது. இங்கிலாந்தின் 2 கோல்களை டோனரூமா தடுத்ததுதான் இத்தாலியின் வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது.

    Also Read: Euro 2020 | Chirstiano Ronaldo | யூரோ 2020: தங்கக் காலணி வென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

    இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஜேடன் சாங்கோ, மற்றும் புகாயோ சாக்கோ ஆகியோரது பெனால்டி ஷூட் அவுட்டில் அடித்த ஷாட்களை தடுத்தது இத்தாலியின் வெற்றியை உறுதி செய்தது.

    Also Read: Euro 2020 Italy vs England | யூரோ 2020 சாம்பியன் இத்தாலி: இங்கிலாந்து கனவு தகர்ந்தது- பெனால்ட்டியில் இத்தாலி அபார வெற்றி

    இதே போல் அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் அல்வரோ மொராட்டோவின் ஷாட்டை தடுத்து இத்தாலி அணியை இறுதிக்கு அழைத்து வந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    யூரோ 2020 தொடரில் டோனரூமா 4 கோல்களைத்தான் விட்டுள்ளார். 1996ம் ஆண்டில் ஜெர்மனியின் மத்தியாஸ் சாமர், 2000-ன் பிரான்ஸின் ஜினடைன் ஜிடேன், க்ரீஸ் வீரர் தியோடோரஸ் சாகோராகிஸ், ஸ்பெயினின் சாவி, 2012-ல் ஆண்ட்ரியாஸ் இனியெஸ்டா, 2016-ல் ஆண்டானியோ கிரேஸ்மேன் ஆகியோர் மதிப்பு மிக்க வீரர்களாக தொடர் நாயகன் விருது வென்றனர்.

    இப்போது டோனரூமா தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
    Published by:Muthukumar
    First published: