Euro 2020 Italy vs Belgium: உலகின் நம்பர் 1 பெல்ஜியம் அணியை 2-1 என்று வீழ்த்தியது இத்தாலி- அரையிறுதியில் ஸ்பெயினுடன் மோதல்

இத்தாலி வீரர்கள். | படம்: ஏ.பி.

மியூனிக்கில் இன்று இந்திய நேரப்படி அதிகாலை நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் உலகின் நம்பர் 1 அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி யூரோ 2020 அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 • Share this:
  அரையிறுதியில் ஸ்பெயின் - இத்தாலி அணிகள் மோதுகின்றன. இத்தாலி அணியில் நிகோலோ பாரெல்லா 31வது நிமிடத்தில் ஒரு கோலையும் லாரென்சோ இன்சிக்னி 44வது நிமிடத்தில் வெற்றிக்கான 2வது கோலை அடிக்க பெல்ஜியம் அணியில் இடைவேளைக்கு சற்று முன் ஸ்டாப்பேஜ் நேரத்தில் நட்சத்திர வீரர் ரொமிலு லுகாகு பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.

  பெல்ஜியம் அணியின் கோல்டன் தலைமுறை என அழைக்கப்படும் வீரர்களுக்கு இது பிரியாவிடை போட்டி என்றே இது கருதப்படுகிறது. கெவின் டி புரூய்ன், ரொமிலு லுகாகு, யூரி டைலிமான்ஸ், தோக்ரன் ஹசார்ட் இவரது சகோதரர் ஈடன் ஹசார்ட் ஆகியோர் அடுத்த யூரோ கோப்பையில் ஆடுவார்களா என்பது சந்தேகம் இன்னொரு முறை இவர்களை அடுத்த ஆண்டு உலகக்கோப்பையில் ரசிகர்கள் பார்க்கலாம்.

  லண்டனில் இத்தாலி அணி செவ்வாயன்று ஸ்பெயினை அரையிறுதியில் சந்திக்கிறது.

  தொடக்கத்தில் பெல்ஜியத்தின் லுகாகு இத்தாலியை அச்சுறுத்தினார். ஆனால் இத்தாலியின் லியானார்டோ போனுக்கி முன்னிலை கொடுத்திருப்பார், ஆனால் வீடியோ ரெஃபரலில் அது கோல் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. போனுக்கி பந்தை கோலுக்குள் அடித்து பயங்கரமாக கொண்டாடினார். ஆனால் அது ஆஃப் சைடு என்று வீடியோவில் தெரிய கோல் மறுக்கப்பட்டது.

  மீண்டும் பெல்ஜியத்தின் நட்சத்திர வீரர் கெவின் டி புரூய்ன் இடது காலால் அடித்த ஷாட் ஒன்றை இத்தாலி கோல் கீப்பர் கியான்லூகி டோனரூமா அபாரமாகத் தடுத்தார். இது நம்ப முடியாத ஒரு சேவ். பிறகு லுகாகு அடித்த கோல் முயற்சி ஷாட்டை மீண்டும் இத்தாலி கோல் கீப்பர் டோனரூமாவின் வலது கை தடுத்தது.

  Also Read: Euro 2020 | யூரோ 2020 அரையிறுதியில் ஸ்பெயின்: நடுவர் கொடுத்த தேவையற்ற ரெட்கார்டு; பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்பிய சுவிட்சர்லாந்து தோல்வி

  இந்த கோல் முயற்சிகள் தடுக்கப்பட்ட போதே நிச்சயம் எதிர்த்தாக்குதலில் இத்தாலிக்கு கோல் விழும் என்று நம் உள்ளுணர்வு தெரிவித்தது, அதற்கேற்ப ஒரு அருமையான வேகமான நகர்வில் பந்தை பெல்ஜியம் பகுதிக்குள் எடுத்து சென்றது இத்தாலி. மார்கோ வெராட்டி பந்தை அருமையாக பாரெல்லாவுக்கு பந்தை உள்ளே அனுப்பினார். அவர் இரண்டு தடுப்பாட்ட வீரர்களைக் கடைந்து பந்தை கோலுக்குள் செலுத்தினார், பெல்ஜியம் கோல் கீப்பர் திபோ கோர்ட்வாவுக்கு வாய்ப்பில்லாமல் போனது. இத்தாலி 1-0 முன்னிலை.

  இத்தாலி தொடர்ந்து கோலுக்கான முயற்சியில் ஆடியது, இதன் பலனாக இடைவேளைக்கு சற்று முன் இத்தாலியின் இன்னொரு அற்புத நகர்வை இன்சிக்னி கோலாக பினிஷ் செய்தார்.

  இத்தாலி வீரர் இன்சிக்னி அடித்த வெற்றி கோல்.


  பெல்ஜியம் வீரர் ஈடன் ஹசார்டு காயத்தினால் வெளியேற இளம் வீரர் ஜெரமி டோக்கு களமிறக்கப்பட்டது மறைமுக ஆசீர்வாதமாக மாறியது. பந்தை இத்தாலி கோல் பகுதிக்குள் பெனால்டி பகுதிக்கு அருகே இத்தாலியின் டை லாரென்சோ, மின்னல் ஆட்டம் ஆடிய ஜெரமி டோக்குவை தள்ளி விட்டார், இது பெல்ஜியத்துக்கு பெனால்டியைச் சாதகமாக்க போதுமான தள்ளலாக இருக்கவே, பெனால்டி கொடுக்கப் பட்டது. லுகாக்கு அதனை கோலாக மாற்ற இடைவேளையின் போது இரு அணிகளும் 1-1 என்று சம நிலையில் இருந்தன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இரண்டாவது பாதியிலும் இத்தாலியின் அபார ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் பெல்ஜியமும் சோடை போகவில்லை எதிர்த்தாக்குதல் தொடுத்தது. லுகாகு கோல் அடித்து விடுவேன் என்று தொடர்ந்து இத்தாலியை அச்சுறுத்தினார். பிரமாத இளம் வீரர் டோக்கு பந்தை டி புருய்னுக்கு பாஸ் செய்ய அவர் தாழ்வான ஒரு ஷாட்டில்  கோல் போஸ்ட்டின் மறுமுனையில் இருந்த லுகாகுவுக்கு பந்தை அனுப்ப சரியாக லுகாகு அதை ஆடவில்லை என்பதால் இத்தாலி தடுப்பு வீரர் லியானார்டோ ஸ்பினசோலா தடுத்து விட்டார்.

  பெல்ஜியம் இறுதி நேரங்களில் காட்டிய உத்வேகத்தைத் தடுக்க இத்தாலி கோச் செய்த உத்தி பிரமாதமானது, பதிலி வீரர்களை உள்ளே அனுப்புவதற்காக ஆட்டம் கொஞ்சம் கொஞ்சம் நிறுத்தப்பட பெல்ஜியத்தின் உத்வேகத்துக்கு அவை முட்டுக் கட்டை போட்டன.

  உத்வேகம் முட்டைக்கட்டை போடப்பட டிபுருய்ன், லுகாகு உள்ளிட வீரர்களுக்கு வெறுப்பு மேலிட்டது. வெளியேறும் வலி அவர்கள் ஆட்டத்தில் தெரியத் தொடங்கியது. இத்தாலி அரையிறுதிக்கு முன்னேறியது.
  Published by:Muthukumar
  First published: