Euro 2020 Germany vs France: சாம்பியன்களின் பரபரப்பான ஆட்டம் : ஜெர்மனி தன் கோலுக்குள்ளேயே அடித்த ஓன் கோலால் பிரான்ஸ் 1-0 வெற்றி

தங்கள் கோலுக்குள்ளேயே அடித்த ஜெர்மனி வீரர் ஹம்மெல்ஸ் ஏமாற்றம், பிரான்ஸ் வெற்றி, யூரோ 2020 போட்டி.

யூரோ கோப்பைக் கால்பந்து தொடரின் ‘குரூப் ஆஃப் டெத்’ என்று அழைக்கப்படும் எஃப் பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி அணிகள் மோதியதில் ஜெர்மனியின் செல்ஃப் கோல் அல்லது ஓன் கோலால் பிரான்ஸ் அணி 1-0 என்று அதிர்ஷ்டகரமாக வென்றது.

  • Share this:
ஜெர்மனியின் மியூனிக்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தன் நாட்டு ரசிகர்கள் முன்னிலையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஜெர்மனி, பிரான்ஸும் சளைக்காமல் கடும் சவால்களை ஏற்படுத்தியது. ஆனால் ஆட்டம் தொடங்கி 20வது நிமிடத்தில் பிரான்ஸ் வலது புறத்தில் தாக்குதலை தொடுக்க அங்கிருந்து பந்து ஜெர்மனி கோலுக்கு அருகே நடுவே அடிக்கப்பட அங்கிருந்து இடது புறம் தடுக்க ஆளில்லாமல் இருந்த வீரரிடம் செல்ல அவர் பந்தை உள்ளே அனுப்ப அங்கு பிரான்ஸ் வீரருக்குப் பதில் ஜெர்மனியின் மேட்ஸ் ஹம்மெல்ஸ் இருந்தார், பந்தை அவர் கோல் கீப்பரிடம் அடிக்க முயற்சித்தாரா, அல்லது வெளியே தூக்கி அடிக்க முயற்சித்தாரா என்று தெரியவில்லை பந்து அவரது முழந்தாளில் பட்டு ஜெர்மனியின் கோலுக்குள்ளேயே புகுந்து கோலாக ஜெர்மனியின் செல்ஃப் கோல் அல்லது ஓன் கோலில் பிரான்ஸ் 1-0 என்று முன்னிலை பெற்றது, இதுவே இறுதி ஸ்கோராக பிரான்ஸின் வெற்றியாக முடிந்தது.

ஜெர்மனியின் அனுபவம் வாய்ந்த மிகத்திறமைசாலியான நியூயராலும் ஒன்றும் செய்ய முடியாமல் அது கோல் ஆனது, ஜெர்மனிக்கு கடும் ஏமாற்றம், பிரான்ஸுக்குக் கொண்டாட்டம்.

இதையும் படிக்கலாமே: Ronaldo | Euro 2020 | தொடக்க சொதப்பலுக்குப் பிறகு ரொனால்டோ அபாரம், வரலாறு படைத்தார்! கடைசி 5 நிமிடங்களில் 3 கோல்கள் அடித்து ஹங்கேரியைக் கவிழ்த்த போர்ச்சுகல்

முதல் பாதி ஆட்டத்தில் இருதரப்புக்கும் கோல் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் கோலாகவில்லை, ஆனால் கடைசி தருணங்கள் மிகவும் சவாலாக இருந்தன. கடைசி தருணங்கள் பதற்றத்தின் உச்சக் கட்டமாக இரு அணிகளுக்கும் அமைந்தது. ஜெர்மனி தாக்குதல் தொடுக்கத் தொடுக்க பிரான்ஸும் எதிர்த்தாக்குதல் தொடுத்தது, அதுவும் மின்னல்வேக கைலியன் மபாப்பே அடக்க முடியாத ஒரு சக்தியாகத் திகழ்ந்தார். மபாப்பே, கரீம் பென்ஸீமா கோல்களை அடித்திருப்பார்கள் ஆனால் கோலாக அவை முடியவில்லை.

பிரான்ஸ் ரசிகர்களும் ஜெர்மனி ரசிகர்களும் பதற்ற ரசிகர்கள் ஆனார்கள் ஒவ்வொரு மூவுக்கும் ஆரவாரம் கொப்புளித்தது. முதல் 7 நிமிடங்கள் பெரிய ஒரு கிளாசிக் ஆட்டத்துக்கான அச்சாரமாக இருந்தது. ஹம்மெல்ஸின் தலை முட்டல் வாய்ப்பு, போக்பா மற்றும் டோனி குரூஸ் மோதல், ஜொஷுவா கிம்மிக்கிற்கு கார்டு காட்டப்பட்டது என்று உயிரோட்டமாகத் தொடங்கியது. அடுத்த 5 நிமிட ஆட்டத்தில் பிரான்சின் கரீம் பென்சீமா வானில் வந்த பந்தை வென்று ஒரு அருமையான டச் ஷாட் அடித்தார், அது கோலாக மாறியிருக்க வேண்டும், ஆனால் ஆகவில்லை.

பிரான்ஸ் வீரர் பெஞ்சமின் பவார்ட் வலது புறம் பாய்ச்சலாக ஆடிய தருணம், பிறகு மபாப்பேயின் பிரமாத ஆட்டத்தின் கோல் முயற்சியை ஜெர்மனி கோல் கீப்பர் நியூயெர் தடுத்தார்.

ஆண்டாயின் கிரீஸ்மேன் அடித்த கார்னர் ஷாட்டை போக்பா ஏறக்குறைய கோலாக மாற்றியிருப்பார், ஆனால் இல்லை. கிரீஸ்மேன் மிக அபாரமான கால் வித்தை படைத்தவர், வெகு விரைவாக பந்தைக் கொண்டு செல்லும் திறமை படைத்தவர், பாஸில் கில்லாடி.

மிகத்துல்லியமாக பிரான்ஸ் ஆடியபோதுதான் ஜெர்மனியின் தலைவிதியைத் தீர்மானித்த அந்த 20வது நிமிடம் வந்தது. வலது புறத்திலிருந்து பிரான்ஸ் துல்லியத் தாக்குதல் தொடுத்தது. போக்பாவின் காலிலிருந்து பந்து லூக்காச் ஹெர்னாண்டஸுக்கு அனுப்பப்பட்டது. இவர்தான் கிராஸ் செய்தார், அப்போது பிரான்ஸ் வீரருக்கு முன்னால் குறுக்காக இருந்த ஜெர்மனி வீரர் மேட்ஸ் ஹம்மெல்ஸ் பந்தை தடுக்கவோ அல்லது மேலே அடிக்கவோ மேற்கொண்ட முயற்சி அவரது முழந்தாளில் பட்டு செல்ஃப் கோல் ஆனது. அதாவது பிரான்ஸின் துல்லிய மூவுக்கு ஜெர்மனி பினிஷிங் கொடுத்தது போல் ஆனது. பிரான்ஸ் 1-0 முன்னிலை.

உடனேயே ஜெர்மனி எதிர்த்தாக்குதல் நடத்தி பிரான்ஸ் பகுதிக்குள் ஊடுருவ அனுபவ வீரர் தாமஸ் முல்லர் தலையால் முட்டிய ஷாட் இலக்கு தவறியது. பிறகு இல்கே கண்டோகன் அடித்த ஷாட்டும் வைடாகப் போனது. கை ஹார்வெட்ஸின் இலக்கு நோக்கிய ஷாட் பிரான்ஸ் வீரர் ரபேல் வரானேயால் தடுக்கப்பட்டது.

ஜெர்மனியின் ஓன் கோலை தன் கோலாக நினைத்து கொண்டாடும் கைலியன் மபாப்பே.


இடைவேளைக்குப் பிறகு மின்னல் கைலியன் மபாப்பே பிரமாதமாக ஆடினார், ஜெர்மனி வீரரைக் கடந்து கடைந்து பந்தை எடுத்து சென்று ரேபியட்டிடம் அடிக்க அவர் கோல்போஸ்ட்டில் அடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெர்மனியும் விடாப்பிடியாக ஆடியது. பிரான்ஸ் கோல் அருகே பவுன்ஸ் ஆகி வந்த பந்தை ஜெர்மனி வீரர் நார்பி கோல் போஸ்ட்டுக்கு மேல் அடித்து நழுவ விட்டார். பிறகு ஜெர்மனி வீரர் கிம்மிக் பிரமாதமான ஒரு கிராஸ் ஷாட் ஆட டோனி குரூஸின் ஷாட் தடுக்கப்பட்டது.

ஜெர்மனி அதிக சவால்களை அளித்தது, ஆனால் பிரான்ஸ் நிதானமாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் திடீர் உத்வேகம் பெற்று தாக்குவோம் என்பது போல் அனாயாசமாக ஆடினர். கடைசி நிமிடங்கள் கடும் பதற்றமும் பரபரப்பும் நிரம்பியதாக இருந்தாலும் இருமுறை பிரான்சின் முயற்சி ஆஃப் சைடானது. இந்த ஆட்டம் ஜெர்மனியின் ஓன் கோலினால் பிரான்ஸ் 1-0 என்ற வெற்றியில் முடிந்தது.

இப்படி முடிய வேண்டிய ஆட்டமல்ல இது. உக்ரைன் , நெதர்லாந்து ஆட்டம் போல் 3-2 என்று முடிந்திருக்க வேண்டும், அல்லது 3-3 என்று டிரா ஆகியிருக்க வேண்டும், கடைசியில் ஜெர்மனிக்கு ஏமாற்றமாக 0-1 என்று தோல்வியில் முடிந்தது.
Published by:Muthukumar
First published: