• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Euro 2020: கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து?- குரூப் டி அணிகள், வீரர்கள், நட்சத்திரங்கள்

Euro 2020: கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து?- குரூப் டி அணிகள், வீரர்கள், நட்சத்திரங்கள்

இங்கிலாந்து அணி கேப்டன் ஹேரி கேன்.

இங்கிலாந்து அணி கேப்டன் ஹேரி கேன்.

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் அணிகள், வீரர்கள், பிரிவுகள், கோல்கள், பாயிண்டுகள், பார்க்கப்பட வேண்டிய ஸ்டார்கள், வார்ம் அப் போட்டிகளின் முடிவுகள்தேதி, இந்திய நேரம், குரூப்பில் அடங்கிய அணிகளின் ஆட்டத்திறன் ஆகியவற்றை இப்பகுதியில் காணலாம்.

 • Share this:
  யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகல் 2021-க்கு தள்ளி வைக்கப்பட்டு வரும் வெள்ளிக்கிழமை, இந்திய நேரம் 11ம் தேதி நள்ளிரவு அதாவது 12ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு துருக்கி / இத்தாலி அணிகள் மோதும் போட்டியுடன் தொடங்குகிறது.

  இதில் பிரிவு எஃப், குரூப் ஆஃப் டெத் என்று பெயரிடபட்டுள்ளது ஏனெனில் இதில் பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல், ஆகிய டாப் அணிகளுடன் ஹங்கேரி உள்ளது, இந்த குரூப் பற்றி அன்று பார்த்தோம்.

  இப்போது குரூப் டி-யில் உள்ள இங்கிலாந்து, குரேஷியா, ஸ்காட்லாந்து, செக்.குடியரசு அணிகள் பற்றி பார்ப்போம்:

  இங்கிலாந்து:

  இங்கிலாந்து அணியில் நிறைய தாக்குதல், ஆக்ரோஷ இளம் வீரர்கள் உள்ளனர். ஆனாலும் ஹேரி மெகுய்ரின் பிட்னெஸ் சந்தேகங்களினால் இங்கிலாந்து அணியின் முக்கிய தடுப்பு அரணில் ஓட்டை உள்ளது. இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் இங்கிலாந்து அணியை ஐரோப்பிய சாம்பியன்களாக்குவார் என்று பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  Also Read:  Euro 2020 | யூரோ 2020: குரூப் ஆஃப் டெத்- பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல்- பிரிவு எஃப் ஒரு பார்வை

  இங்கிலாந்து அணியின் திறமையான கோல்கீப்பர்களில் டீன் ஹெண்டர்சன், சாம் ஜான்ஸ்டோன், ஜோர்டான் பிக்ஃபோர்டு ஆகியோர் அணியில் உள்ளனர்.

  மிட்பீல்ட் வீரர்களில் லிவர்பூலின் ஜோர்டான் ஹெண்டர்சன் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறார்.

  ஃபார்வர்டு வீரர்களில் டொமினிக் கல்வெர்ட் லீவின், பில் ஃபோடன், ஹாரி கேன் மிக முக்கியமான வீரர், மார்கஸ் ரேஷ்போர்டு, ஜேடன் சாங்கோ, ரஹீம் ஸ்டெர்லிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

  பார்க்கப்பட வேண்டிய ஸ்டார்: ஹேரி கேன்

  உலகக்கோப்பை அதிக கோல்கள் அடித்த கோல்டன் பூட் விருது பெற்றவர் ஹேரி கேன். இன்னொரு கோல்டன் பூட் வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலிஷ் பிரிமியர் லீக் கோல் அடித்தவர்கள் பட்டியலிலும் கோல்கள் அடிக்க அதிக உதவிகள் புரிந்தவர்கள் பட்டியலிலும் டாப்-ல் இருப்பவர் ஹேரி கேன். நடப்பு உலக கால்பந்தில் சிறந்த ஸ்ட்ரைக்கர் என்றால் அது ஹேரி கேன் தான்.

  இங்கிலாந்து அணியின் பிபா ரேங்கிங் - 4. கடந்த யூரோவில் இறுதி 16 வரை வந்தனர், கடைசி 5 போட்டிகளில் 4-ல் வென்றனர்.

  குரேஷியா: உலகக்கோப்பை 2018 ரன்னர்கள்

  2018 உலகக்கோப்பையில் ஜாம்பவான்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி இறுதிக்கு முன்னேறி பிரான்ஸ் அணியை தண்ணி குடிக்க வைத்ததில் குரேஷியாவை மறக்க முடியாது. இந்த அணியின் கோச்/ மேனேஜர் ஸ்லாட்கோ டாலிக், இவரது பயிற்சியில்தான் 2018-ல் உலகக்கோப்பை இறுதி வரை முன்னேறியது குரேஷியா. ஆனால் 2019-20களில் குரேஷியாவின் அத்தனை ஆட்டத்திறமைகளும் காணாமல் போயின, வரலாற்றில் ஒரு ஆண்டில் மிக மோசமாக ஆடிய எதிர்மறைச் சாதனையை நிகழ்த்த பயிற்சியாளர் டாலிக்கை நீக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எழுந்தன. 8 போட்டிகளில் 2-ல் தான் வென்றது.

  Also Read: Copa America 2021 | கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர்: அணிகள், இந்திய நேரப்படி போட்டி அட்டவணை- எந்தத் தொலைக்காட்சியில் லைவ்?


  குரேஷிய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லுகா மோட்ரிக்.


  முக்கிய வீரர்கள் மரியோ மண்ட்சூகிக், டேனியல் சுபாசிச், வெத்ரான் கொர்லுகா ஆகியோர் ரிட்டையர் ஆன பிறகு அணி பின்னடைவு கண்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக பிபா ரேங்கிங்கில் 4ம் இடம் இருந்த குரேஷியா இப்போது 14ம் இடத்தில் உள்ளது. இப்போது லூகா மோட்ரிக் மட்டுமே அங்கு உள்ளார், இவர் ரியால் மேட்ரிடுக்காக பிரமாதமாக ஆடி வருகிறார். இவருடன் இவான் பெரிசிச், மார்செலோ புரோசோவிச் ஆகியோர் குரேஷியாவுக்கு பலம் சேர்க்கின்றனர்.

  ஸ்காட்லாந்து:

  8 உலகக்கோப்பை, 2 யூரோ கோப்பை கால்பந்து தொடர்களில் முதல் சுற்றைத் தாண்டி ஸ்காட்லாந்து முன்னேறியதில்லை. ஆனால் இந்த முறை வலுவான ஸ்காட்லாந்து அணி களமிறங்குகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கேப்டன் ஆண்டி ராபர்ட்சன் (லிவர்பூல்), ஆர்சனல் அணிக்கு ஆடும் கிரன் டியர்னி, கிராண்ட் ஹான்லி, ஆகியோர் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள். இவர்களோடு ஸ்டூவர்ட் ஆம்ஸ்ட்ராங், சே ஆடம்ஸ், மிட்பீல்டர் ஸ்காட் மெக் டோமினே, ஜான் மெக்கின், ஆகியோர் அணிக்கு நல்ல சமச்சீர் தன்மையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  பிபா ரேங்கிங் 44; கடைசி 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியைத்தான் ஈட்டியுள்ளது.

  செக்.குடியரசு:

  யூரோ கோப்பைக் கால்பந்து தகுதிச் சுற்றில் இங்கிலாந்தை 2-1 என்று வீழ்த்தியது முதல் இங்கிலாந்துக்கு இவர்களைக் கண்டால் கிலிதான்.

  விளாதிமிர் கூஃபல், தாமஸ் சூசெக் ஆகியோர் கவனிக்கப்பட வேண்டிய வீரர்கள். செக் குடியரசின் ஆட்டம் இவர்கள் காலில்தான் உள்ளது. ஸ்ட்ரைக்கர்கள் மடேஜ் வைத்ரா, பேயர் லெவர்கியூசன், ஃபார்வர்டு வீரர் பாட்ரிக் ஷிக், ஆகியோர் தாக்குதல் வரிசையில் இருக்க தடுப்பாட்டத்துக்கென தாமஸ் கலாஸ், கோல் கீப்பர் தாமஸ் வாக்லிக் ஆகியோர் உள்ளனர்.

  பிபா ரேங்கிங்:40

  கடைசி 5 போட்டிகள்ல் 3-ல் வென்றுள்ளனர், கணிக்க முடியாத ஒரு அணி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: