Euro 2020 | ஜெர்மனியின் அடிவயிற்றைக் கலக்கிய ஹங்கேரி: 2-2 டிராவில் 84வது நிமிட கோலினால் நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி

கொண்டாடும் ஜெர்மனி. யூரோ கோப்பை கால்பந்து 2021

மியூனிக்கில் இன்று அதிகாலை நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் குரூப் ஆப் டெத் பிரிவு எஃப் ஆட்டத்தில் ஹங்கேரியின் ஆட்டம் ஜெர்மனியை வெளியேற்றியிருக்கும் ஆனால் 84ம் நிமிடத்தில் ஜெர்மனி அடித்த சமன் கோலினால் ஆட்டம் 2-2 என்று ட்ரா ஆக ஜெர்மனி நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது.

  • Share this:
    நாக்-அவுட் சுற்றில் ஜெர்மனி அணி இங்கிலாந்தைச் சந்திக்கிறது. பிரான்ஸ் அணியும் போர்ச்சுகலுடன் 2-2 என்று ட்ரா செய்ததில் முதலிடம் பிடித்ததால் நாக் அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்தைச் சந்திக்கிறது, இறுதி16க்குள் நுழைந்த போர்ச்சுகல் அதில் பெல்ஜியம் அணியைச் சந்திக்கிறது.

    ஹங்கேரி அணி ஆட்டம் தொடங்கி 11வது நிமித்திலேயே ஆடம் சலாய் மூலம் முன்னிலை பெற்றது. இடைவேளையின் போது ஹங்கேரி 1-0 என்று முன்னிலை பெற்றது. இடைவேளைக்குப் பிறகு ஜெர்மனியின் கை ஹாவெட்ஸ் 66வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்துச்சமன் செய்ய, இந்த சமன் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 68வது நிமிடத்தில் ஹங்கேரி வீரர் ஷாஃபர் ஒரு கோலை அடிக்க ஜெர்மனியின் அதிர்ச்சிக்கேற்ப ஹங்கேரி 2-1 என்று முன்னிலை பெற்றது, பிறகு கடுமையான ஒரு ஆட்டத்தில் ஜெர்மனி அணியின் லியான் கோரெட்ஸ்கா 84ம் நிமிடத்தில் ஒரு கோலை அடித்துச் சமன் செய்ய ஜெர்மனியின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டது.

    ஹங்கேரி அணி உலக சாம்பியன் பிரான்சுடன் ட்ரா செய்தது, பிறகு வலுவான ஜெர்மனியுடன் ட்ரா செய்தது, ஆனால் வெளியேறிவிட்டது.

    11வது நிமிடத்தில் ஹங்கேரியின் சலாய் டைவ் அடித்து தலையால் முட்டி கோல் அடித்து இடைவேளை வரை அது தொடர ஜெர்மனி கோச் ஜோக்கிம் லோ அங்கும் இங்கும் கோபமாக நடந்து கொண்டிருந்தார், காரணம் ஜேர்மனி வெளியேறிவிடும்.

    முதல் பாதியில் ஜெர்மனி அணி தங்கள் வசம் பந்தை அதிகம் வைத்திருந்தனர். ஹம்மெல்ஸின் தலை முட்டல் ஒன்று கோல் போஸ்ட்டின் மேல் கம்பியைத் தாக்கியது. போர்ச்சுகலிடம் 4-2 வெற்றியில் காட்டிய தாக்குதல் முறை ஏனோ ஜெர்மனியிடத்தில் இன்று காணப்படவில்லை. ஜெர்மனி அடித்த முதல் கோலும் நீட்டானது அல்ல. கிம்மிச் ஃப்ரீ கிக்கை ஹம்மெல்ஸ், ஹாவெட்சிடம் தலையால் தள்ள அவர் கோலாக மாற்றினார்.

    ஆனால் இந்த சமன கோலை ஜெர்மனி எஞ்ஜாய் செய்வதற்குள் ஹங்கேரி 2வது கோலை அடித்து அதிர்ச்சியளித்தது. ஹங்கேரியின் சலாய் ஜெர்மனி பகுதிக்குள் பந்தைத் தூக்கி அடிக்க அதை ஷாஃபர் முன்னால் வந்து தலையால் முட்ட ஜெர்மன் கோல் கீப்பர் நூயர் தடுக்க முடியவில்லை, கோலானது ஹங்கேரி 2-1 முன்னிலை.

    கடைசியில் ஜெர்மனி கடும் நெருக்கடி கொடுக்க ஹங்கேரியின் டஃபன்ஸ் சற்றே தளர்ந்து போனது. 84ம் நிமிடத்தில் பதிலி வீரர் ஜமால் மியூசியாலா பந்தை வெட்டி பாக்சுக்குள் அனுப்ப அங்கு இன்னொரு பதிலி வீரர் கோரெட்ஸ்கா அதை கோலாக மாற்றினார். ஆட்டம் ட்ரா ஆக ஜெர்மனி முன்னேற ஹங்கேரி வெளியேறியது.

    ஆனால் ஹங்கேரியின் குலாச்சி கூறும்போது, “நாங்கள் நன்றாக ஆடினோம். ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது, ஆனாலும் 2 கோல்களை அடித்தோம் எங்களுக்கு அதிர்ஷ்டமில்லை, இது கசப்பான வெளியேற்றம்தான்” என்றார்.

    நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்தின் வெம்பிலியில் ஜெர்மனி அணி இங்கிலாந்தைச் சந்திக்கிறது.
    Published by:Muthukumar
    First published: