Euro 2020 | France vs Switzerland- பிரான்ஸுக்கு அதிர்ச்சியளிக்குமா சுவிட்சர்லாந்து?- சில புள்ளி விவரங்கள்

பிரான்ஸ் வீரர்கள். யூரோ கோப்பை 2020-21

இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு யூரோ கோப்பைக் கால்பந்து நாக்-அவுட் சுற்றில் உலக சாம்பியன் பிரான்ஸ் அணி சுவிட்சர்லாந்தை சந்திக்கிறது. இது தொடர்பான அனைத்து சுவையான தகவல்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    பிரான்ஸ் அணி வலுவானது, இந்த கோப்பையையே வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அன்று ஹங்கேரியுடன் 1-1 என்று ட்ரா செய்ய போராடியது. ஹங்கேரி பிரான்ஸை அச்சுறுத்தியது.

    அதை ஒப்பிடும் போது பிரான்ஸ் அணியை 12 முறை சுவிட்சர்லாந்து வென்றுள்ளது, ஆனால் கடந்த 7 போட்டிகளில் சுவிட்சர்லாந்து பிரான்ஸை வீழ்த்தியதில்லை.

    இரு அணிகளும் மொத்தமாக 38 போட்டிகளில் மோதியுள்ளன இதில் பிரான்ஸ் 16 போட்டிகளிலும் சுவிஸ் 12 போட்டிகளிலும் வென்றுள்ளன.

    கடைசியாக 2016 யூரோ கோப்பைக் கால்பந்தில் இரு அணிகளும் மோதிய போது கோல் அடிக்க முடியாமல் 0-0 என்று ட்ரா ஆனது.

    பிரான்ஸ் ஒரு தாக்குதல் அணியாக மாறியுள்ளது, அந்த அணியின் கிரேஸ்மென் ஒரு அதிவேக மின்னல் வேக வீரராக இருக்கிறார், 51 போட்டிகளில் பிரான்ஸுக்காக ஆடி அனுபவசாலியாகவும் இருக்கிறார். 11 கோல்களை அவர் அடித்துள்ளார், இன்னொரு கோல் அடித்தால் மைக்கேல் பிளாட்டினியின் ரெக்கார்டை உடைப்பார்.

    கடந்த 5 போட்டிகளில் சுவிட்சர்லாந்து 4 ட்ராக்களைச் செய்துள்ளது, இதனால் இன்றைய போட்டியில் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றால் அதில் யார் வேண்டுமனாலும் வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்படும், இது பிரான்சுக்கு ஆபத்து ரியல் டைமில் வென்று விடவே விரும்புவர், அதற்கு சுவிஸ் அணி இடம் கொடுக்காது, எனவே ஒரு விறுவிறுப்பான போட்டி ரசிகளின் விருந்துக்கு காத்திருக்கிறது.

    பொதுவாக இந்தத் தொடரில் அமைதி காத்த மற்றொரு பிரான்ஸ் நட்சத்திரம் கரீம் பென்சீமா, அன்று போர்ச்சுகலுக்கு எதிராக 2 கோல்களை அடித்துள்ளார், இவர் இந்தப் போட்டியிலும் அசத்தக் காத்திருக்கிறார்.

    சுவிஸ் அணியின் மெஸ்ஸி ரக வீரர் ஷெத்ரான் ஷகீரி 7 கோல்களுடன் சர்வதேச தொடர்களில் அதிக கோல்கள் அடித்த சுவிஸ் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பிரான்ஸ் அணியில் பென்சீமாம், கிரேஸ்மென், தவிர இன்னொரு பந்தயக் குதிரை மபாப்பே உள்ளார், அதிவேக வீரர் ஜிரவ்த், பால் போக்பாவும்  உள்ளார். எனவே பிரான்ஸ் அணி வெற்றிபெறத்தான் அதிக வாய்ப்பு, ஆனால் சுவிட்சர்லாந்து அணியை அவ்வளவு சுலபமாக எடை போடமுடியாது.

    இன்றைய போட்டியில் பிரான்ஸ் அணியில் பெஞ்சமின் பவார்ட் இறங்குவார், ஜூல்ஸ் கூண்ட் என்பவரும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் அணியில் லூகாச் டிக்னி, லூகாச் ஹெர்னாண்டஸ், ஆஸ்மேனி டெம்ப்பீலி ஆகியோர் காயமடைய, சுவிஸ் அணியில் ஒருவரும் காயமடையாமால் முழு உடற்தகுதி அணி தயாராக இருக்கிறது.

    உலக சாம்பியன் பிரான்ஸுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய அத்தனை அம்சங்களும் சுவிஸ் அணிக்கு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
    Published by:Muthukumar
    First published: