Home /News /sports /

Euro 2020 | யூரோ 2020: குரூப் ஆஃப் டெத்- பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல்- பிரிவு எஃப் ஒரு பார்வை

Euro 2020 | யூரோ 2020: குரூப் ஆஃப் டெத்- பிரான்ஸ், ஜெர்மனி, போர்ச்சுகல்- பிரிவு எஃப் ஒரு பார்வை

ரொனால்டோ.

ரொனால்டோ.

பிரசித்தி பெற்ற யூரோ 2020 கால்பந்து தொடர் 2021-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து முதல் போட்டி வரும் 11ம் தேதி நள்ளிரவு இந்திய நேரம் 12.30 மணிக்கு துருக்கி-இத்தாலி அணிகளுக்கு இடையே தொடங்குகிறது. 

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  6 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட 24 அணிகளில் பிரிவு எஃப் மிகவும் கடினமானது, ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய மூன்று அணிகளுமே யூரோ கோப்பையை வெல்லும் அணிகள் என்று கணிக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் ஹங்கேரியும் சேர்ந்துள்ளது. ஹங்கேரியை சாதாரணமாக எடைபோட முடியாது.

  ஜெயண்ட் கில்லர் என்பார்களே அப்படிப்பட்ட அணி. அந்த நாளில் ஆட்டம் பிடித்தால் எத்தனை பெரிய அணியையும் வீழ்த்திவிடும், மேலும் ஹங்கேரிக்கென்று ஒரு கால்பந்து பாரம்பரியத் தொடர்ச்சியும் உள்ளது.

  Also Read:  Euro Cup 2021: ஜூன் 11ம் தேதி யூரோ கோப்பை கால்பந்து : அணிகள், குரூப்கள், போட்டி அட்டவணை- இந்திய நேரம்

  இந்தப் பிரிவில் உலக சாம்பியன் பிரான்ஸ், அதன் மின்னல் வேக வீரர் மபாப்பே, யூரோ சாம்பியன், ரொனால்டோவின் போர்ச்சுகல் மற்றும் ஜாம்பவான் ஜெர்மனி என்று சவால் அதிகம் இருக்கும் பிரிவாகும் இது.

  வலுவான பிரான்ஸ்:

  இந்த யூரோ 2020 தொடரில் வலுவான அணி என்ற அடையாளத்துடன் இறங்கும் அணி பிரான்ஸ் ஆகும். களத்தில் ஒவ்வொரு நிலையிலும் சிறப்பாக ஆட இரண்டு வீரர்களை வைத்துள்ளார் கோச் டேஷாம்ப், காயத்தினால் வீரர்கள் விளையாட முடியாவிட்டாலும் சிறந்த பதிலி வீரர்களும் பிரான்ஸ் அணியில் உள்ளனர்.

  மேலும் ஸ்ட்ரைக்கர் கரீம் பென்ஸீமா அணிக்குத் திரும்பியதும் பிரான்ஸுக்கு கூடுதல் தெம்பு சேர்த்துள்ளது.
  அதே போல் ஆலிவர் கிரவுத் அருமையான வீரர். இவர் தவிர ஆண்ட்டாய்ன் கிரீஸ்மான், பிறகு மின்னல்வேக கிலியன் மபாப்பே. மேலும் பால் போக்பாவும் நல்ல ரிதமுக்கு திரும்பியுள்ளார்.

  மபாப்பே


  மிட்ஃபீல்டில் இவரும் என்கலோ காண்ட்டி ஆகியோரும் கவனிக்கத் தக்க அதிரடி ஆட்டக்காரர்கள் ஆவார்கள். தடுப்புக் காவலுக்கு ரபேல் வரானே, பிரிஸ்னல் கிம்பம்பே இருக்கின்றனர் ஃபுல் பேக் வீரர்கள் பெஞ்சமின் பவார்ட், லூகாஸ் ஹெர்னாண்டஸ் ஆகியோர் பிரான்சுக்கு ஒரு அருமையான அணி என்ற அந்தஸ்தை வழங்குகின்றனர். பிரான்ஸ் ஃபிபா ரேங்கிங்கில் 2 ம் இடத்தில் உள்ளது. கடைசி 5 போட்டிகளில் 4-ல் வென்றுள்ளது. 1 டிரா. 9 கோல்களை அடித்து 3 கோல்களை வாங்கியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  போர்ச்சுகல்- ரொனால்டோ

  யூரோ சாம்பியன் ஆன போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ கடைசியாக பெரிய தொடர் ஒன்றில் ஆடுவது இதுவாகவே இருக்கலாம் எனவே அந்த அணி வீரர்கள் ரொனால்டோவுக்காக கோப்பையை தக்கவைப்பதில் நாட்டமாக உள்ளனர். போர்ச்சுகல் அணியில் மேட்ச் வின்னர்கள் அதிகம்.

  போர்ச்சுகல் தாக்குதல் ஆட்டத்தை முன்னின்று நடத்துபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இத்தாலி சீரி ஏ தொடரில் அதிக கோல்களை இந்த சீசனில் அடித்து ரொனால்டோ செம பார்மில் இருக்கிறார். ஆனால் இண்டெர்மிலானிடம் தோற்றதில் யுவண்டஸ் அணி மீது எழுந்த விமர்சனங்களில் ரொனால்டோ மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

  ரொனால்டோவுடன் பெர்னார்டோ சில்வா, டியாகோ ஜோட்டா, ஆனால் பெரிய அளவில் பேசப்படுபவர் போர்ச்சுகல் மிட்ஃபீல்டர் புரூனோ பெர்னாண்டஸ் ஆகவே இருக்கும் என்று பண்டிதர்கள் பேசி வருகின்றனர். பாதுகாப்பு அரணில் பெபே மற்றும் ரூபன் டயஸ் ஜோடியாக அசத்துவார்கள். பிபா ரேங்கிங் 5, கடைசி 5 போட்டிகளில் 3-ல் வெற்றி, ஒரு தோல்வி 9 கோல்கள், வாங்கியது 6 கோல்கள்.

  ஜெர்மனி:

  2014 உலகக்கோப்பையில் அசத்தி பிரேசிலுக்கு அதன் சொந்த மண்ணில் மக்கள் கண்ணில் கண்ணீர் வரவழைத்த தோல்வியை பரிசாக அளித்த ஜெர்மனி அதன் பிறகு சரியாக ஆடவில்லை, அதாவது திறமைக்கேற்ப ஆடவில்லை.  தாமஸ் முல்லர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கெவின் வோலண்ட் என்பவரும் வந்துள்ளார்.

  தாமஸ் முல்லர்


  பாதுகாப்பு அரணில் நிக்லஸ் சூலே, மத்தியாஸ் ஜிண்டர், அண்டோனியோ ரூடிகர், திடமான அரணாக இருப்பார்கள். மிட்பீல்டில் குண்டகன், ஜொஷுவா கிம்மிச், லியான் கோரட்ஸ்கா, மற்றும் அனுபவசாலி டோனி குரூஸ் உள்ளனர். முன்களத்தில் லெராய் சேன், சர்ஜ் நாப்ரி, கை ஹாவெர்ட்ஸ், முல்லர், டிமோ வெர்னர் ஆகியோர் அபாயகரமான வீரர்கள். பிபா ரேங்கிங் 12. கடைசி 5 போட்டிகளில் 3இல் வெற்றி. 2 தோல்வி, 8 கோல்கள் அடித்து 9 கோல்களை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  Also Read:  Euro Cup 2021: கோல் மழையில் லாட்வியாவை நொறுக்கிய ஜெர்மனி- 2 ஆண்டுகளுக்குப் பிறகு தாமஸ் முல்லர் முதல் கோல்

  ஹங்கேரி:

  ஒரு காலத்தில் கால்பந்து பவர்ஹவுஸ் ஆக இருந்த ஹங்கேரி  இப்போது போர்ச்சுகல், ஜெர்மனி, பிரான்ஸ் கால்களில் அரைபடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் கடைசி 5 போட்டிகளில் 3-ல் வென்றுள்ளனர். 13 கோல்களை அடித்துள்ளனர், மாறாக 5 கோல்களையே வாங்கியுள்ளனர், டிபன்ஸ் பிரமாதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது, பலவீனமான அணி என்று கருதப்பட்டாலும் இவர்களுக்கு எதிராக கோல் அடிப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Cristiano Ronaldo, Euro Cup 2021, France, Germany

  அடுத்த செய்தி