Euro 2020 | யூரோ 2020 அரையிறுதியில் ஸ்பெயின்: நடுவர் கொடுத்த தேவையற்ற ரெட்கார்டு; பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்பிய சுவிட்சர்லாந்து தோல்வி

வெற்றியைக் கொண்டாடும் ஸ்பெயின் கோல் கீப்பர்.

செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட் மூலம் தீர்மானிக்கப்பட ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

  • Share this:
முழு நேர ஆட்டத்தில் 8வது நிமிடத்தில் ஸ்பெயினின் ஒரு கார்னர் கிக் மார்க் செய்யப்படாத வீரரிடம் வர அவர் கோலை நோக்கி அடித்த ஷாட்டை திசைத்திருப்பி விடும் முயற்சியில் சுவிட்சர்லாந்து வீரர் சகாரியா தங்கள் கோலுக்குள்ளேயே அடிக்க சேம்சைடு கோலினால் ஸ்பெயின் 1-0 என்று முன்னிலை பெற்றது.

தேவையில்லாத ரெட்கார்டினால் சுவிஸ் பின்னடைவு:

தேவையில்லாமல் ரெஃப்ரி சுவிட்சர்லாந்து வீரர் ரிமோ ஃப்ராய்லருக்கு ரெட் கார்டு காட்டி வெளியேற்ற சுவிஸ் அணி 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர், அது அவ்வளவு பெரிய ஃபவுல் இல்லை. மேலும் வீடியோவில் சரிபார்த்து நடுவர் உறுதி செய்திருக்க வேண்டும், ஆனால் ஸ்பெயின் வீரர் கீழே விழுந்து புரண்டவுடன் வந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியது சுவிட்சர்லாந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு 68வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் மெஸ்ஸி என்று அழைக்கப்படும் செட்ரான் ஷகீரி அபாரமாக ஒரு கோலைத் திருப்ப ஆட்டம் முழு நேரத்தில் 1-1 என்று சமன் ஆகி கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

சுவிஸ் வீரர் ஷகீரி அடித்த சமன் செய்த கோல்.


கூடுதல் நேரத்தில் ஸ்பெயினின் தாக்குதல் ஆட்டத்தில் சுமார் 12 கோல் முயற்சிகளை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் சோமர் அயராது தடுத்தார். ஸ்பெயினும் சில ஷாட்களை சொத்தையாக கோல் நோக்கி அடித்தனர். அல்லது வெளியே அடித்தனர். ஆனால் எம்பியும், டைவ் அடித்தும், பிரமாதமாகக் கணித்தும் சுவிஸ் கோல் கீப்பர் சோமர் ஒரு சுவராக அங்கு நிற்க ஸ்பெயினால் இழுபறியை முறியடிக்க முடியவில்லை.

Also Read: Euro 2020 Italy vs Belgium: உலகின் நம்பர் 1 பெல்ஜியம் அணியை 2-1 என்று வீழ்த்தியது இத்தாலி- அரையிறுதியில் ஸ்பெயினுடன் மோதல்

ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் வீரர்கள் செர்ஜியோ பஸ்கெட்ஸ் மற்றும் ரோட்ரி ஆகியோர் பதற்றத்தில் கோல்களைத் தவற விட்டனர், ஒன்றை சோமர் அபாரமாகத் தடுக்க ஒரு ஷாட் கோல் போஸ்ட்டில் பட்டு திரும்பியது, ஆனால் ஸ்பெயின் அணியில் ஜெரார்ட் மொரீனோ, டேனி ஆல்மோ தங்கள் ஷூட்டை சரியாக கோலாக மாற்ற கடைசி ஷாட்டை மிகேல் ஆயர்சபால் கோலுக்குள் திணிக்க ஸ்பெயின் 3-1 என்று வெற்றி பெற்றது. மாறாக சுவிட்சர்லாந்தின் மேனுவெல் அகாஞ்சி மற்றும் ஃபேபியன் ஸ்கார் ஆகியோர் சொத்தையாக கோலை நோக்கி அடிக்க ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமன் தடுத்தார், மற்றொரு இளம் வீரர், குழந்தை முக ரூபென் வார்கஸ் கோல் போஸ்டுக்கு மேலே அடித்து சொதப்பினார். ஒருவர் மட்டுமே கோல் அடிக்க 3-1 என்று ஸ்பெயின் போராடி வென்றது.

பெனால்டி கிக்கை வெளியே அடித்து அழும் குழந்தை முக சுவிஸ் வீரர் ரூபன் வார்கஸ்.


ரியல் டைம் ஆட்டம்: நடுவரின் மிகப்பெரிய பிழையினால் பின்னடைவு கண்ட சுவிட்சர்லாந்து:

ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்பெயின் ஆதிக்கம் தலை தூக்கியது. 25 நிமிடங்களிலேயே 209 பாஸ்களுடன் ஸ்பெயின் முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து 40 பாஸ்களையே மேற்கொண்டது. ஆனால் ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் ஸ்பெயின் ஒரு தாக்குதல் முயற்சியில் சுவிட்சர்லாந்து பாக்சுக்குள் நுழைய அங்கு கோல் நோக்கி அடிக்கப்பட்ட ஷாட்டை வெளியே அடிக்க கார்னர் வாய்ப்பு பெற்றது ஸ்பெயின், அந்த கார்னர் ஷாட் மார்க் செய்யப்படாத ஜோர்டி ஆல்பாவிடம் வர அவர் கோலை நோக்கி அடிக்க அங்கு இடையில் சுவிட்சர்லாந்து வீரர் சகாரியா காலில் பட்டு சேம்சைடு கோல் ஆனது, ஸ்பெயின் 1-0.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சேம்சைடு கோல் இந்தத் தொடரின் 10வது சேம்சைடு கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் விடா முயற்சியுடன் ஆடிய சுவிட்சர்லாந்து ஸ்பெயினின் தடுப்பாட்ட சொதப்பலில் 68வது நிமிடத்தில் ஷகீரி மூலம் அபார கோலில் 1-1 என்று சமன் செய்தது.

சுவிட்சர்லாந்து அணிக்கு எடுத்த எடுப்பிலேயே பின்னடைவு ஏற்பட்டது, அதன் வீரர் எம்போலோ காயம் காரணமாக வெளியேறினார். தொடக்கத்தில் ஸ்பெயினின் சீசர் அஸ்பிலிகியுட்டா தலையால் முட்டிய ஷாட்டை சுவிஸ் கோல் கீப்பர் யான் சோமர் தடுத்து விட்டார். சுவிஸ் அணிக்கும் நல்ல வாய்ப்பு கிடைத்தது, ஆனால் கார்னர் ஷாட்களில் கிடைத்த வாய்ப்புகளை அதன் வீரர்கள் அகாஞ்சி, நிகோ எல்வேடி விரயம் செய்தனர். கார்னர் ஷாட்டை நேராக கோலாக்க முயற்சி செய்தார் சுவிஸ் நட்சத்திர வீரர் ஷகீரி ஆனால் ஷாட் சொத்தையாக அமைந்தது, சகாரியா ஒரு ஷாட்டை கோலுக்கு வெளியே அடித்தார்.

65வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் ஸ்டீவன் சூபர் நேராக ஒரு ஷாட்டை ஸ்பெயின் கோல் கீப்பர் உனய் சைமனின் கைகளில் அடித்தார். அப்போதுதான் ஸ்பெயின் அணி 68வது நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் சொதப்பி சுவிஸ் அணிக்கு சமன் வாய்ப்பை அளித்தது.

ஸ்பெயின் வீரர் அய்மெரிக் லாப்போர்ட் தனக்கு வந்த ஒரு பாஸை கையாள நேர அவகாசமும் போதிய இடமும் இருந்தது. ஆனால் அவரது தவறான டச் பாஸ் இன்னொரு ஸ்பெயின் வீர்ர் டாரஸிடமிருந்து ரீபவுண்ட் ஆனது இப்போது பந்து ஸ்பெயின் கோல் பாக்சில் இருந்த ஃப்ராய்லருக்கு வர அவர் ஷகீரிக்கு பந்தை அனுப்ப அவர் முறையாக கோலாக மாற்றினார்.

 

இந்த தடுப்புதான் சுவிச் அணிக்கு எதிரான ரெட்கார்டாக மாறியது.


 

அதன் பிறகுதான் ஸ்பெயின் வீரர் மொரீனோவை சரிந்து கொண்டே வந்து தடுத்தார் சுவிஸ் வீரர் ஃப்ராய்லர் அவர் வேகமாக சரிந்து வந்து தடுக்கப் பார்த்ததால் அவர் கால் மேலே தூக்கியது. மற்ற தருணங்களில் இதை விட கொடுமையான இடையூறுகள் எல்லாம் கண்டு கொள்ளாமல் விடப்பட, இந்த முறை நடுவர் மிகேல் ஆலிவர் நேராக சிகப்பு அட்டைக் காட்டி ஃப்ராய்லரை வெளியேற்றினார். இதன் பிறகு ஆட்டம் ஸ்பெயின் பக்கம் மாறியது. ஆனாலும் 10 வீரர்களுடன் தடுப்பாட்டத்தை உக்கிரப்படுத்திய சுவிட்சர்லாந்து ஸ்பெயினை 2வது கோலை அடிக்க விடவில்லை. மொரீனோவின் ஒரே கோல் நோக்கிய ஷாட்டும் சொத்தையாக அமைய ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது.

சுவிஸ் கோல் கீப்பர் சோமர் எனும் அற்புதன்:

சுவிஸ் கோல் கீப்பர் ‘அற்புதன்’ சோமர்.


கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் பயங்கரமாக ஆடியது. ஆல்பாவின் பாஸ் ஒன்றை மொரீனோ கோலிலிருந்து 6 அடி தூரத்திலிருந்து கோட்டை விட்டார். இது அருமையான வாய்ப்பு கோலாக மாற்றியிருந்தால் கோல்டன் கோல் ஆகி ஸ்பெயின் அப்போதே வென்றிருக்கும்.

ஸ்பெயின் தாக்குதலைத் தீவிரப்படுத்த கோலை நோக்கி அடிக்கப்பட்ட எண்ணற்ற ஷாட்களை எல்லாம் சோமர் அற்புதமாகத் தடுத்தார் மொத்த 12 ஷாட்களை அவர் தடுத்தார். ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டுக்குச் சென்றது.

பெனால்டி ஷூட் அவுட்டிலும் ஸ்பெயின் திணறியது. பஸ்கெட்ஸ் தன் முதல் பெனால்டி கிக்கை நேராக இடது போஸ்ட்டில் அடித்து சொதப்பினார், 6வது பெனால்டி கிக்க்கை இந்தத் தொடரில் ஸ்பெயின் சொதப்பியது. ஆனால் சுவிட்சர்லாந்தும் பதற்றத்தில் 3 முறை பெனால்டி ஷூட் அவுட்டில் சொதப்ப கடைசியில் ஸ்பெயினின் மிகேல் ஆயர்சபால் கோலைத் திணிக்க ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
Published by:Muthukumar
First published: