Italy vs Spain Euro 2020 Semis| அல்டிமேட் ஃபுட்பால்- இத்தாலி- ஸ்பெயின் - ரத்தக்கறை படிந்த வரலாறு - இன்று யூரோ அரையிறுதியில் மோதல் (படங்கள்)

மகிழ்ச்சியில் ஸ்பெயின்.

ஸ்பெயின் அணியின் இன்றைய பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் அன்று அமெரிக்காவில் நடந்த 1994 உலகக்கோப்பைக் கால்பந்து காலிறுதியில் இத்தாலி வீரர் மவுரோ தாசொட்டியின் முழங்கை இடித்து மூக்கில் ரத்தம் வழிய ஆடியதை இன்னும் என்ரிக் மறந்திருக்க வாய்ப்பில்லை, இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.

  • Share this:
செவ்வாய் நள்ளிரவு இந்திய நேரம் 12.30 மணி அல்லது புதன் அதிகாலை 12.30 மணிக்கு யூரோ கோப்பை கால்பந்தின் முதல் அரையிறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள வெம்பிலியில் நடைபெறுகிறது.

இத்தாலி அணி கடந்த 30-32 போட்டிகளுக்கும் மேல் தோற்காமல் ஆடி வருகிறது, யூரோ 2020 கோப்பையைக் கைப்பற்றும் அணிகளில் ஸ்பெயின், இத்தாலி இரண்டுமே இருந்தன. போர்ச்சுகல், பிரான்ஸ், ஜெர்மனி வெளியேறியதால் இப்போது இங்கிலாந்து / டென்மார்க், ஸ்பெயின்/ இத்தாலி அரைஇறுதி போட்டிகளில் வந்து நின்றுள்ளது.

உலகின் நம்பர் 1 அணியான, லுகாகு, டி புருய்ன், ஹசார்ட் ஆகிய கோல்டன் தலைமுறை கொண்ட பெல்ஜியம் அணியை அன்று 2-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி வீழ்த்தியது..

உலகக்கோப்பை ரத்த வரலாறு:

ஸ்பெயின் அணியின் இன்றைய பயிற்சியாளர் லூயிஸ் என்ரிக் அன்று அமெரிக்காவில் நடந்த 1994 உலகக்கோப்பைக் கால்பந்து காலிறுதியில் இத்தாலி வீரர் மவுரோ தாசொட்டியின் முழங்கை இடித்து மூக்கில் ரத்தம் வழிய ஆடியதை இன்னும் என்ரிக் மறந்திருக்க வாய்ப்பில்லை, இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. அதன் பிறகு வீடியோவில் இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து இத்தாலி வீரர் டசோட்டிக்கு 8 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது வேறு கதை.



ஆனால் உடைந்த மூக்கை மாற்ற முடியுமா? அந்த போட்டியில் இத்தாலியின் பிரமாதமான வீரர் ரொபர்ட்டோ பேஜியோவின் 88வது நிமிட கோல் ஸ்பெயினுக்கு ஆப்பு வைத்தது. இந்த பேகியோ அதே உலகக்கோப்பையில் பெனால்டி ஷூட் அவுட்டில் பிரேசிலுக்கு எதிராக சொதப்பியதும் இத்தாலி வெளியேறியதும், அதன் பிறகு ரொபர்ட்டோ பேஜியோ கிறித்துவத்தை துறந்து பவுத்தத்துக்கு மாறியது போன்றவை  மறக்க முடியா சம்பவங்கள்.

இத்தாலி நட்சத்திரம் பேகியோ


ஸ்பெயின் பத்திரிகைகள் இத்தாலியை சாடின, ‘மிகவும் காட்டுமிராண்டித் தனமான அணி இத்தாலி’ என்று எழுதின. பெனால்டி கொடுக்க வேண்டிய ரெஃப்ரி ஸ்டேடியத்தில் இருந்த 50,000 இத்தாலிய ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று பயந்து போய் பெனால்டியை மறுத்ததாக ஸ்பெயின் குற்றம்சாட்டியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே இரு அணிகளும் பரமவைரிகள் என்பதில் சந்தேகமில்லை.

யூரோ 2008 காலிறுதி:

லூயிஸ் என்ரிக்கின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்த அந்த போட்டிக்கு 14 ஆண்டுகள் சென்று யூரோ 2008 கோப்பை கால்பந்தில் ஸ்பெயின், இத்தாலி முழு நேரத்தில் 0-0 என்று ட்ரா செய்தன, ஆட்டம் பெனால்டிக்குச் சென்ற போது 4-2 என்று ஸ்பெயின் வென்றுய் இத்தாலியை முதல் முறையாக நாக் அவுட் செய்தது.



இதற்கு முன்பு 5 காலிறுதி போட்டிகளில் ஸ்பெயின் தோற்றிருந்தது. இத்தாலி அப்போது உலக சாம்பியன் என்ற ஹோதாவில் வந்தது. 120 நிமிட ஆட்டம் கோல் இல்லாமல் முடிய பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்பெயின் கோல் கீப்பர் டேனியல் டிரொசி ஷாட்டையும் அந்தோனியோ டி நடேல் ஷாட்டையும் தடுக்க, ஸ்பெயின் வீரர் செஸ்க் ஃபேபர்காஸ் முக்கியமான பெனால்டி ஷாட்டை கோலாக மாற்ற இத்தாலி வெளியேறியது 1984க்குப் பிறகு ஸ்பெயின் மேஜர் தொடர் ஒன்றில் காலிறுதியைத் தாண்டி சென்றது. பிறகு ஜெர்மனியை 1-0 என்று வீழ்த்தி ஸ்பெயின் கோப்பையை வென்றது.

யூரோ 2012 பைனல்: ஸ்பெயின் 4 - இத்தாலி 0:

யூரோ 2012-ல் இத்தாலிக்கு எதிராகத்தான் ஸ்பெயின் தொடங்கியது கடும் ஆட்டத்தில் இரு  அணிகளும் 1-1 என்று ட்ரா செய்தன. டி நடேல் கோலை பேபர்காஸ் சமன் செய்தார். ஆட்டம் டிரா.
இத்தாலி அணி அதன் பிறகு இங்கிலாந்தை காலிறுதியில் பெனால்டியில் வீழ்த்தி அரையிறுதியில் ஜெர்மனியை காலி செய்து இறுதியில் மீண்டும் ஸ்பெயினைச் சந்தித்தது.



இறுதிப் போட்டியில் மீண்டும் ஸ்பெயின் பழி தீர்த்தது. இடைவேளைக்கு முன்பாக டேவிட் சில்வா, ஜோர்டி ஆல்பா கோல்களை அடிக்க, இடைவேளைக்குப் பிறகு பெர்னாண்டோ டாரஸ், யுவான் மாட்டா ஆகியோர் கோல்களினால் இத்தாலிக்கு ஸ்பெயின் சவப்பெட்டி ஆணியறைந்தது.

யூரோ 2016- மீண்டும் பழிதீர்த்த இத்தாலி - 2-0 வெற்றி:

2014 உலகக்கோப்பையில் குரூப் ஸ்டேஜிலேயே தோற்று இத்தாலி வெளியேறி அடிப்பட்ட புலியாக யூரோ 2016க்கு வந்தது. ஸ்பெயின் அணியும் அதே உலகக்கோப்பையில் முதல் சுற்றுடன் வெளியேறிய நிலையில் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தது.
இரு அணிகளும் மோதிய இந்தப் போட்டியில் அடிபட்ட புலியான இத்தாலி, ஸ்பெயினை 2-0 என்று வீழ்த்தியது.



இதன் பிறகு 2018 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இத்தாலியை ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்தத் தகுதிச் சுற்றில் ஸ்வீடனுடன் பிளே ஆப் ஆடினால்தான் உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும் என்று மோசமாக இருந்த இத்தாலி ஸ்வீடனிடம் தோற்று 1958-க்குப் பிறகு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் போனது அந்நாட்டு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியகா அமைந்தது.

மொத்தமாக இரு அணிகளும் 34 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் ஸ்பெயின் கை ஓங்கி 12 வெற்றிகளையும் இத்தாலி 9 வெற்றிகளையும் பெற்றுள்ளது. 13 போட்டிகள் ட்ரா ஆகியுள்ளன.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 12.30க்கு யூரோ கோப்பை 2020-ன் அரையிறுதியில் இரு அணிகளும் மோதுவது சுவாரசியமாகத்தானே இருக்கும். விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது. சோனி நெட்வொர்க் தொலைக்காட்சியில் லைவ் ஒளிபரப்பு.
Published by:Muthukumar
First published: