• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • Euro 2020 | யூரோ கோப்பை கால்பந்து- ஹங்கேரி-பிரான்ஸ் 1-1 ட்ரா- கிரேஸ்மேனின் கோலினால் தப்பிய உலக சாம்பியன்

Euro 2020 | யூரோ கோப்பை கால்பந்து- ஹங்கேரி-பிரான்ஸ் 1-1 ட்ரா- கிரேஸ்மேனின் கோலினால் தப்பிய உலக சாம்பியன்

பிரான்சுடன் 1-1 டிரா செய்த ஹங்கேரி.

பிரான்சுடன் 1-1 டிரா செய்த ஹங்கேரி.

ஹங்கேரி, புடாபெஸ்ட்டில் நடைபெற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ஆப் டெத் எஃப் பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரி அணி பிரான்ஸ் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து 1-1 என்று ட்ரா செய்தது. 

 • Share this:
  குரூப் எஃப்-ல் பிரான்ஸ் 4 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்க போர்ச்சுகலை வீழ்த்திய ஜெர்மனி 3 புள்ளிகளுடன் 2ம் இடம் வகிக்க, போர்ச்சுகல் 3 புள்ளிகலுடன் 3ம் இடத்தில் உள்ளது, ஹங்கேரி பிரான்ஸுடன் டிரா செய்து 1 புள்ளி பெற்றுள்ளது.

  கரீம் பென்சீமாவுக்கும் மபாப்பேவுக்கும் கிடைத்த கோல் வாய்ப்புகளை இவர்கள் வெளியே அடித்ததும் ஆட்டம் ட்ரா ஆகக் காரணமாகும்.

  இடைவேளையின் போது எக்ஸ்ட்ரா டைமில் ஹங்கேரியின் ஆட்டில்லா ஃபியோலா கோல் அடித்து 1-0 என்று ஹங்கேரிக்கு முன்னிலை கொடுத்தார். 66வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் அடித்த கோல் கிக் வாய்ப்பை பயன்படுத்தி அண்டாய்ன் கிரேஸ்மேன் பிரான்ஸுக்காக அதிர்ஷ்டவசமாக சமன் செய்தார்.
  பிரான்ஸ் அண்டாய்ன் கிரேஸ்மேனின் 38வது கோலின் மூலம் சமன் செய்த பிறகு கைலியன் மபாப்பே ஹங்கேரிக்குத் தொல்லைகள் கொடுத்தார், ஆனால் சிகப்புக் கோட்டையை பிரான்ஸினால் தகர்க்க முடியவில்லை.

  Also Read: Euro 2020: அந்த 4 நிமிடங்கள்! 2 சேம்சைடு கோல்கள்- போர்ச்சுகல் அதிர்ச்சி; அதிரடி ஜெர்மனி ஆக்ரோஷ வெற்றி

  இதனால் வெற்றி கோல் துர்லபமானது. ஹங்கேரி கோல் கீப்பர் பீட்டர் குலாச்சி தன் பங்குக்கு தடுப்பு மேல் தடுப்பாக செய்து பிரான்சை வெறுப்பேற்றினார். 35-36 டிகிரி வெப்ப நிலை இருந்தது, வீரர்களுக்கு 5 நிமிடங்களுக்கு ஒருமுறை குடிநீர் இடைவேளை தேவைப்பட்டது.

  அன்று போர்ச்சுகல்லுக்கு எதிராக ஹங்கேரி 80 நிமிடங்கள் வரை போராடித்தடுத்தது. ஆனால் அதன் பிறகு ரொனால்டோவின் பிரில்லியன்ஸினால் போர்ச்சுகல் 3-0 என்று வெற்றி பெற்றது. நேற்று பிரான்சுக்கு எதிராக ஒரு படி மேலே சென்று ட்ரா செய்தது. மேலும் 26வது நிமிடத்தில் ஹங்கேரி கேப்டன் ஆடம் ஸலாய் வெளியேற வேண்டியதாயிற்று, அவர் தலையில் அடிப்பட்டதன் காரணமாக வெளியேறியதும் ஹங்கேரிக்கு பின்னடைவே.

  ஆரம்பத்திலிருந்தே மபாப்பேயின் தனிமனித சீறல் ஹங்கேரியின் தடுப்பணையினால் அமுக்கப்பட்டது. ஆனாலும் மபாப்பே முதல் வாய்ப்பை கரீம் பென்சீமாவுக்கு உருவாக்கினார். பென்சீமா தாழ்வாக அடித்த ஷாட்டை ஹங்கேரி கோல் கீப்பர் குலாச்சி தடுத்தார், அவரிடமிருந்து திரும்பி வந்த பந்தை கிரேஸ்மேன் கோலாக மாற்ற முடியவில்லை என்பதோடு அவர் ஆஃப் சைடு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதுதான் பிரான்ஸின் இலக்கை நோக்கிய துல்லிய ஷாட் ஆனால் கோலாகவில்லை.

  பிறகு லூகாச் டிகினியின் பிரமாதமான கிராஸை மபாப்பே தலையால் முட்ட அது கோலுக்கு வைடாகச் சென்றது. பிறகு மபாப்பே அபாரமாக ஆடி உருவாக்கிக்கொடுத்த வாய்ப்பை பென்சீமா மிக மோசமாக வைடாக அடித்தார். இந்த கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டதால் இடைவேளை தருணத்தில் ஹங்கேரி கோல் அடிக்க ஏதுவானது.

  ஹங்கேரி வீரர் ஆடம் நேகி பிரமாதமாக லெஃப்ட் விங் பேக்கிற்கு பந்தை சலாய்க்கு தலையால் தள்ளி விட்டு வேகமாக ஓடி பவார்டுக்கு பின்னால் சென்றார். அங்கிருந்து சலாய், பிரான்ஸின் ரைட் பேக் மற்றும் ரபேல் வரானேவுக்கு இடையில் பந்தை செலுத்த அங்கு ஃபியோலா அதை கோலாக மாற்ற ஹங்கேரியின் கனவு தருணம் புடாபெஸ்ட் நகரமே எழுச்சி கண்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதன் பிறகு பிரான்ஸ் அணி மேலாளர் ஊஸ்மான் டெம்பிலி, அட்ரியன் ரிபியோ,  ஆலிவியர் ஜிரவ்த் ஆகியோரை களத்துக்கு அனுப்பினார். டம்பிலி ஒருமுறை கோல் முயற்சியில் கோல் போஸ்ட்டைத் தாக்கினார். பிறகு முழங்கால் காயத்தினால் வெளியேறினார்.

  அதன் பிறகு பிரான்சுக்குக் கிடைத்த ஃப்ரீ கிக் பெரிய ஷாட்டாக அமைய பிரான்ஸ் பகுதியிலிருந்து ஹங்கேரியின் பகுதிக்கு பந்து தூக்கி அடிக்கப்பட்டது. அங்கு மபாப்பே பந்தை சேகரித்து ஹங்கேரி தடுப்பு வீரர் நீகோவைக் கடந்து பிரமாதமாக தாழ்வாக அடிக்க அங்கு கிரேஸ்மேன் கோலாக அதை மாற்றினார் பிரான்ஸ் 1-1 என்று சமன் செய்தது.

  அன்று போர்ச்சுகல் கடைசி 5 நிமிடங்கள்ல் 3 கோல்கள் அடித்தது போல் பிரான்ஸால் முடியவில்லை. காரணம் ஹங்கேரி கோல் கீப்பர் குலாச்சி. மபாப்பே தொடர்ந்து அச்சுறுத்தினார், ஆனால் 2வது கோல் வாய்ப்பு பிரான்ஸுக்குக் கிடைக்கவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: