Euro 2020 | யூரோ கோப்பையின் ஆகச்சிறந்த போட்டி: இடைவேளைக்குப் பிறகு 5 கோல்கள்; அதிவேக கால்பந்தில் உக்ரைனை 3-2 என்று வீழ்த்தியது நெதர்லாந்து

ஆரஞ்சு உடையில் நெதர்லாந்து- யூரோ கோப்பை கால்பந்து.

யூரோ கோப்பைக் கால்பந்து பிரிவு ‘சி’ போட்டியில் ஆம்ஸ்டர்டாம் ஜொஹான் கிரஃபி மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்து அணி, உக்ரைன் அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தின் முழுவிவரம் இங்கே தரப்பட்டுள்ளது. மேலும் யூரோ கோப்பை இங்கிலாந்து-குரேஷியா போட்டிகள், கோப்பா அமெரிக்கா பிரேசில் வெற்றி முழு விவரத்தையும் இங்கே காணலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
யூரோ கோப்பையில் இதுவரை நடந்த போட்டிகளில் ஆகச்சிறந்த கால்பந்தாட்டம் இந்தப் போட்டியில்தான் காணக்கிடைத்தது என்றால் அது மிகையாகாது. யூரோ 2016, மற்றும் உலகக்கோப்பை 2018-ல் நெதர்லாந்து தகுதி பெறவில்லை. எனவே கிட்டத்தட்ட 6 ஆண்டுகளில் நெதர்லாந்து ஆடும் மேஜர் தொடர் இதுதான்.

உக்ரைன் கேப்டன் ஷெவ்சென்கோ தலைமையில் மிக அருமையாக ஆடினர், நெதர்லாந்துக்குக் கடும் சவால் அளித்தனர்.

ஆனால் தொடக்கத்தில் நெதர்லாந்து அணி ஆக்ரோஷ அணுகுமுறையில் நிறைய வாய்ப்புகளை உருவாக்கினர். உக்ரைனும் நெதர்லாந்து கோல் அருகே அந்த அணிக்கு சவாலாக இருந்தது, ஆனால் நெதர்லாந்தின் டீபே நடுமைதானத்திலிருந்து உக்ரைனின் இரண்டு தடுப்பு வீரர்களைக் கடைந்து கடந்து பந்தை விறுவிறுவென எடுத்துச் சென்று இடது காலால் வெறி கொண்டு உக்ரைன் கோலை நோக்கி ஒரு உதை உதைத்தார். ஆனால் பந்து நேராக கோல் கீப்பர் கைக்குச் சென்றது.

Also Read: Euro 2020: மகா அறுவை ஆட்டத்தில் குரேஷியாவை பழிதீர்த்து இங்கிலாந்து வெற்றி- ஸ்டெர்லிங் கோலினால் பிழைத்தது

4வது நிமிடத்தில் உக்ரைன் அணி கடும் நெருக்கடி கொடுத்தது. கார்னர் ஷாட்டை மலினோவ்ஸ்கி அடிக்க அங்கு ஸ்ட்ரைக்கர் இல்லாததால் நெதர்லாந்து தப்பித்தது. 6வது நிமிடத்தில் மீண்டும் நெதர்லாந்து உக்ரைன் கோல் அருகில் சவாலை ஏற்படுத்தியது. வியாண்டுலும் என்ற வீரர் பந்தை வலது புறம் தட்டி விட அங்கு டம்பிரைஸ் என்ற வீரர் அருகில் உக்ரைன் தொந்தரவில்லாமல் இருந்தார். ஆனால் கோல் கீப்பர் முன்னதாகவே ஓடி வந்து பந்தை வெளியில் அடிக்க கார்னர் வாய்ப்பு நெதர்லாந்துக்குக் கிடைத்தது.

கார்னர் வாய்ப்பில் வியாண்டுலும் மீண்டும் பந்தை கோல் நோக்கி அடிக்கும் போது கோல் போஸ்டுக்கு மேலே அடித்து வீணடித்தார். இது ஒரு அருமையான வாய்ப்பு கை கூடவில்லை. இரு அணிகளும் கடும் ஆக்ரோஷமாக ஆடி கிடைக்கும் பந்தை கோல் வாய்ப்பாக மாற்ற கடுமையாக முயற்சித்தனர். இடைவேளக்கு முன்னதாக கோல் அடிக்காவிட்டாலும் இரு அணிகளும் முழு ஆற்றலுடனும் திறமையுடனும் கடும் சவால்களை ஒருவருக்கொருவர் ஏற்படுத்தினர்.

Also Read: Copa America 2021: பிரேசில் அபார வெற்றி: வெனிசுலாவின் 8 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பின்னடைவு

இடைவேளைக்குப் பிறகு 5 கோல்கள்:

இடைவேளைக்குப் பிறகு 52வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டம்பிரைஸ் வலது புறத்திலிருந்து தாழ்வாக ஒரு ஷாட்டை அடிக்க உக்ரைன் கோல் கீப்பர் பாக்ஸை விட்டு வெளியே வந்து தடுக்க முயன்றார். டைவ் அடித்து கையால் பந்தை தள்ளி விட்டார். ஆனால் பந்து நெதர்லாந்து வினால்டும் அருகே உருண்டு செல்ல அவர் 12 அடியிலிருந்து காலி வலையில் செலுத்த நெதர்லாந்து 1-0 என்று முன்னிலை வகித்தது. அடுத்த நிமிடமே டீபே அடித்த ஷாட்டை கோல் கீப்பர் தடுத்தார்.

3வது கோலை அடித்த குஷியில் நெதர்லாந்தின் டம்பிரைஸ்.


நெதர்லாந்து ஆட்டத்தில் ஆக்ரோஷம் கூடியது 58வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டம்பிரைஸ் ஃபவுல் செய்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் வீடியோ ரெஃபர் செய்யப்பட்டது. ஆனால் ஃபவுல் இல்லை. டி ஜாங் அடித்த ஷாட்டை கோலாக மாற்ற டம்பிரைஸ் முயன்றார். கோல் கீப்பர் தடுத்தார். ஆனால் பந்து அவரிடமிருந்து ரீபவுண்ட் ஆகி வர நெதர்லாந்து வீரர் வெக்ஹார்ஸ்ட் வலைக்குள் அதைத் திணிக்க அது அவரது முதல் கோல் ஆனது, நெதர்லாந்து 2-0. ஆனால் இந்த 2வது கோல் லேசான ஆஃப் சைடோ என்ற ஐயம் எழுந்தது.

ஆட்டம் அடுத்த 15 நிமிடங்கள் நெதர்லாந்து ஆதிக்கமே தலை தூக்கியது, ஆனால் 75வது நிமிடத்தில் எங்கிருந்தோ உக்ரைனுக்கு ஒரு கோல் விழுந்தது உக்ரைன் வீரர் யார்மலென்கோ வலது புறத்திலிருந்து உள்ளே ஊடுருவி அபாரமாக 20 அடி தூரத்திலிருந்து மிகப்பிரமாதமான ஷாட்டை அடித்தார், அந்தப் பந்து காற்றில் கோலுக்கு வெளியே செல்வது போல் போய் அழகாக வளைந்து கோலுக்குள் சென்றது. கீப்பர் டைவ் அடித்தார் பயனில்லை. மிக ஆச்சரியகரமனா 20 அடி கோல். நெதர்லாந்து 2-1 என்று முன்னிலை வகித்தது.

உக்ரைனின் 2வது கோல்:

ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் சின்செங்கோவை நெதர்லாந்து வீரர் ஃபவுல் செய்தார். இதனால் நெதர்லாந்து கோலிலிருந்து 30 அடி தூரத்தில் உக்ரைனுக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. மலினோவ்ஸ்கி ஃப்ரீ கிக்கை அபாரமாக நெதர்லாந்து கோல் பாக்சுக்கு அனுப்ப அங்கு யாரேம்சுக் என்ற வீரர் நெதர்லாந்தின் வெக்ஹார்ட்ஸ்டின் இடையூறைக் கடந்து தலையால் முட்டி கோலுக்குள் திணிக்க 2-2 என்று சமன் ஆனது ஆட்டம். உக்ரைன் மீண்டும் போட்டிக்குள் வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் 85வது நிமிடத்தில் ஆக்கே இடது புறத்திலிருந்து கிராஸ் செய்ய அங்கு சின்சென்கோவும் எம்ப டம்பிரைஸும் எம்ப கடைசியில் நெதர்லாந்தின் டம்பிரைஸ் வென்றார், தலையால் முட்டி கோலுக்குள் தள்ள நெதர்லாந்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

கடைசியில் 3-2 என்று நெதர்லாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து-குரேஷியா அறுவைப் போட்டி ஒருபுறம் சோர்வை ஏற்படுத்த நெதர்லாந்து-உக்ரைன் போட்டி அதி உற்சாகமான, அதிவிரைவு கதி போட்டியாக அமைந்தது.
Published by:Muthukumar
First published: