• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Euro 2020 | யூரோ கோப்பை: இங்கிலாந்து சுத்த வேஸ்ட்- இரும்புக் கோட்டை அமைத்த ஸ்காட்லாந்து: 0-0 ட்ரா

Euro 2020 | யூரோ கோப்பை: இங்கிலாந்து சுத்த வேஸ்ட்- இரும்புக் கோட்டை அமைத்த ஸ்காட்லாந்து: 0-0 ட்ரா

சோகத்தில் திரும்பும் இங்கிலாந்து வீரர்கள் ரேஷ்போர்டு மற்றும் ரீஸ் ஜேம்ஸ்.| யூரோ 2020

சோகத்தில் திரும்பும் இங்கிலாந்து வீரர்கள் ரேஷ்போர்டு மற்றும் ரீஸ் ஜேம்ஸ்.| யூரோ 2020

வெம்ப்லியில் நடைபெற்ற யூரோ 2020 கால்பந்தின் குரூப் டி ஆட்டத்தில் இரும்புக் கோட்டை தடுப்பரண் அமைத்த ஸ்காட்லாந்து அணியை உடைக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து, ஆட்டம் கோல் இல்லாமல் 0-0 என ட்ரா ஆனது.

  • Share this:
ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் ட்ரா ஆனதால் செக்.குடியரசு அணி இதே பிரிவில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க இங்கிலாந்து 2ம் இடத்தில் உள்ளது. குரேஷியா 1 புள்ளியும் ஸ்காட்லாந்து ஒரு புள்ளியும் பெற்றுள்ளது.

இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை பெரிய அணி என்றெல்லாம் எழுதினாலும் ஸ்காட்லாந்துக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் ட்ரா செய்தது அந்தநாட்டு கால்பந்து ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே. இங்கிலாந்து கோல் அடிக்க முடியாமல் சொதப்பியது கூட ஏமாற்றமல்ல ஸ்காட்லாந்து அதனை எவ்வளவு எளிதாகச் செய்தது என்பதில்தான் இங்கிலாந்துக்கும் அதன் ரசிகர்களுக்கும் வெறுப்பு தலைக்கேறியிருக்கும்.

இதோடு மட்டுமல்லாமல் கோல் அடிக்கும் வாய்ப்பு ஸ்காட்லாந்து அணிக்குத்தான் அதிகம் இருந்தது என்பதுதான் இங்கிலாந்து கோச் சவுத்கேட்டுக்கு வெறுப்பாக இருந்திருக்கும். யூரோ நாக் அவுட் சுற்று வாய்ப்பை ஸ்காட்லாந்து இந்த டிரா மூலம் தக்கவைத்துள்ளது, ஒருவிதத்தில் அதிகாரபூர்வமாக இந்தப் போட்டி ட்ரா என்றாலும் இங்கிலாந்துக்கு இது தோல்வியே, ஸ்காட்லாந்துக்கு இது வெற்றியே.

இரும்புக் கோட்டையான ஸ்காட்லாந்து தடுப்பணை.


இங்கிலாந்து அணியின் சொதப்பலான ஆட்டத்தை, இயலாமையை அந்நாட்டு ரசிகர்கள் சப்தமிட்டு சுட்டிக் காட்டினர். பெரிய கவலை இங்கிலாந்து வீரர் ஹாரி கேன். ஃபுல் பேக் நிலையில் ரீஸ் ஜேம்ஸ், லூக் ஷா என்ற இருவரை இறக்கியும் ஹாரி கேன் ஆட்டம் சரியாக அமையவில்லை. ஹாரி கேனிடம் மற்ற கிரேட் வீரர்களிடம் இருக்கும் கூர்மை இல்லை. ஆட்டத்தின் போது எங்கோ மூலையில் இருக்கிறார். குரேஷியாவுக்கு எதிராக இவரது ஈடுபாடு குறைவாக இருந்ததால் இங்கிலாந்து மேனேஜர் அவரையே உள்ளே அழைத்து பதிலி வீரரை குரேஷியாவுக்கு எதிராக களமிறக்கியதும் நடந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கிலாந்து பெரும்பாலும் பதற்றமாகவே ஆடினர். ஆனால் ஸ்காட்லாந்துக்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இங்கிலாந்தின் ஜான் ஸ்டோன்ஸ் தலையால் முட்டிய ஷாட் கோல் போஸ்ட்டைத் தாக்கியது ஸ்காட்லாந்தின் அதிர்ஷ்டம்தான். ஸ்காட்லாந்துக்கு கிடைத்த கோல் வாய்ப்பு ஸ்டீபன் ஓ’டனல் மற்றும் லிண்டன் டைக்ஸ் உருவாக்கியது. சே ஆடம்ஸ் கோலுக்கான ஒரு பொன்னான வாய்ப்பை தவறவிட்டார்.

ஸ்காட்லாந்து அணியில் செய்யப்பட்ட 4 மாற்றங்களில் சே ஆடம்ஸ் அணிக்குள் வந்தார். 4வது நிமிடத்தில் ஸ்காட் வீரர் ஓ’டனல் மேற்கொண்ட பாஸை சே ஆடம்ஸ் கோல் நோக்கி அடிக்க அதை ஸ்டோன்ஸ் இடையூறு செய்தார்.

இதற்கு இங்கிலாந்து பதில் அளித்தது, கார்னர் வாய்ப்பு கிடைக்க அதனை மேசன் மவுண்ட் அடித்தார், அப்போது இங்கிலாந்து வீரர் ஸ்டோன்ஸை கவர் செய்ய ஆளில்லை அவர் அங்கு ஃப்ரீயாகவே இருந்தார். வந்தப் பந்தை தலையால் முட்டினார் ஆனால் கோல் போஸ்ட்டைத் தாக்கியதே தவிர கோலாகவில்லை.

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் ஸ்காட்லாந்துக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆண்டி ராபர்ட்ஸனிடமிருந்து பாஸை டியர்னி பெற்றார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸைக் கடந்து பந்தை ஸ்காட் வீரர் ஓ’டனலுக்கு பாஸ் செய்தார். ஓ’டனலும் அருமையாக கோலை நோக்கி அடித்தார், ஆனால் அங்கு கோல் கீப்பர் வலது புறம் தாழ்வாக விழுந்து கோல் விழாமல் தடுத்தார். தடுத்த பந்து மீண்டும் வந்த போது சே ஆடம்ஸ் அதனை கோலாக மாற்றத் தவறினார், இது ஒரு நல்ல வாய்ப்பு, ஸ்காட்லாந்து கோலாக மாற்றாமல் இழந்தது.

44வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து நீண்ட நேரம் பந்தை தங்கள் வசம் வைத்திருந்தனர். இந்த மூவும் சே ஆடம்ஸின் கோல் நோக்கிய ஷாட்டாக முடிந்தது, ஆனால் கோலாகவில்லை கார்னர்தான் கிடைத்தது.

ஸ்காட்லாந்தின் வேகத்துக்கு இங்கிலாந்தினால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஜாக் கிரீலிஷ் என்பவரை இறக்கினார் இங்கிலாந்து கோச், அவர் ஒருவர்தான் பந்தை கடைந்து எடுத்துச் செல்வதில் திறமையைக் காட்டினார்.

இடைவேளைக்குப் பிறகு கோச் சவுத்கேட் விட்ட டோஸில் இங்கிலாந்து ஆக்ரோஷம் காட்டியது, அதில்தான் மவுண்ட் ஷாட் ஒன்று கோலை நோக்கிப் பாய அதனை ஸ்காட்லாந்து கோல் கீப்பர் மார்ஷல் தடுத்தார். இங்கிலாந்து வீரர்கள் ரீஸ் ஜேம்ஸ் கொஞ்சம் ஆட்டத்தில் உயிர் கொடுக்க, இங்கிலாந்து கொஞ்சம் அதிக நேரம் தங்கள் வசம் பந்தை வைத்திருந்தனர். ரீஸ் ஜேம்ஸின் ஷாட் கோல் இலக்கை தவறி மேலே சென்றது.

ஸ்காட்லாந்தின் லிண்டன் டைக்ஸின் கோல் முயற்சியை இங்கிலாந்தின் ஜேம்ஸ் தலையால் முட்டித் தடுத்தார். ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருந்த போது ஹாரி கேன் ஒன்றுமே செய்யாமல் தண்டமாக இருக்க அவரை உள்ளே அழைத்து மார்கஸ் ரேஷ்போர்டை இங்கிலாந்து களமிறக்கியது. கடைசி நேரத்தில் இங்கிலாந்து கொஞ்சம் நெருக்கடி கொடுத்தது, டெக்லான் ரைஸ் கோல் அருகே மேற்கொண்ட முயற்சியை ஸ்காட்லாந்து முறியடித்தது. மற்றபடி அனைத்தும் பயனற்ற நெருக்கடிகளாக முடிந்தது.

ஆட்டம் முடியும் போது 22,000 ஸ்காட்லாந்து ரசிகர்களும் தங்கள் வைரியான இங்கிலாந்து கோல் அடிக்க முடியாததை தங்கள் வெற்றியாகவே உணர்ந்து கொண்டாடினார் ஏனெனில் ஸ்காட்லாந்துக்கு நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு இருப்பதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: